உக்காரை

4 comments
                           வீட்ல திடீர் விருந்தாளிகள் வந்துட்டாங்கன்னா ஈசியா செய்யகூடிய ரெசிபி இந்த உக்காரை.தீபாவளி,வருடப்பிறப்பு,போன்ற விஷேச  நாட்கள்லயும் அதிகமா இந்த இனிப்பை செய்யறாங்க.இன்னிக்கு இந்த உக்காரையை வீட்ல செய்தேன்.புரட்டாசியில்  பெருமாளுக்கு உக்காரையை படையலாக படைக்கிறார்கள்.இதையே நெய் அதிகமாக ஊற்றி செய்தால் அக்கார வடிசல்னு சொல்லுவாங்க. :-)
தேவையான பொருட்கள்:-
 • கடலைபருப்பு                          - ஒரு கப்
 • சர்க்கரை                                    - ஒரு கப்
 • நெய்                                             - ஒரு குழி கரண்டி
 • முந்திரி                                      - தேவையான அளவு
 • உலர்திராட்சை                      - பத்து கிராம்
 • தேங்காய்                                - சிறிது

செய்முறை:-
 • கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் பருப்பு முழ்கும் அளவிற்கு  சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவேண்டும்.
 • தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
 • வெந்த பருப்பை ஆற விட்டு மிக்சியில்  இரண்டு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
 • பருப்பை  மாவாக அரைத்து விட கூடாது.

 • வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
 • சர்க்கரை சூட்டில் உருகி கரைந்த உடன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
 • சர்க்கரையும்,நெய்யும்,சேர்ந்து வந்தஉடன் மிக்சியில் உள்ள பருப்பை கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
 • சிறிது நெய்யில் நறுக்கிய தேங்காய்,உலர்திராட்சை,முந்திரி, அனைத்தையும் வறுத்து கிளறிய மாவில் கொட்டி கிளறி இறக்கிவிட வேண்டும்.

 • உக்காரை ரெடி..

Read More...

மாவு சட்னி

15 comments
                 பொதுவா சட்னினா,மனசுல நிக்கறது  தேங்காய் சட்னி,பொரிகடலை சட்னிதான் ஆனா கிராமத்து ஜனங்கள் மத்தியில இந்த சட்னிஎல்லாம் ஓரங் கட்ற மாதிரி ஒரு சட்னி செய்வாங்க..மாவுச்சட்னி .ஒரு ஆச்சி இந்த சட்னிய பண்ணாங்க .எங்கூர்ல ஹோட்டல்ல பஜ்ஜியோட இந்த சட்னிய வச்சு தர்ராங்க..இந்த சட்னி ருசியா வரணும்னா மாவு புளிப்பா இருக்கணும்.வெங்காய வடகத்த வச்சி பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்.முக்கியமா காரம்அதிகம் சேர்த்தால் மாவோட புளிப்பும் இந்த காரமும் சேர்ந்து சூப்பர் டேஸ்ட்...
தேவையானவை:-
 • இட்லி மாவு                                                     -    ஒரு குழி கரண்டி 
 • வெங்காயம் (or) வெங்காய வடகம்          - சிறிது 
 • மிளகாய் வத்தல்                                           - எட்டு 
 • தேங்காய்                                                          -இரண்டு துண்டு 
 • எண்ணெய்                                                       -ஒரு குழி கரண்டி 
 • கருவேப்பிலை                                              - சிறிது 
 • கடுகு ,உளுந்து                                               - ஒரு ஸ்பூன் 
 • உப்பு                                                                    - சிறிது 
செய்முறை:-
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
 • மிக்சியில் தேங்காய்,வத்தல் இரண்டையும் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
 • மாவை நீர் சேர்த்து கரைத்து கொள்ளவேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காய வடகம் இல்லையென்றால் வெங்காயத்தை போட்டு ,கருவேப்பிலையும் போட்டு முறுகலாக வரும்வரை வதக்கி மிக்சியில் உள்ள கலவையை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
 • கொதித்து  வரும்பொழுது   கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்க்கவேண்டும்.

  • கலவை நன்றாக கொதித்து வரும்பொழுது இறக்கிவிடவேண்டும்.

   பி.கு:-வெங்காயமோ ,வடகமோ ,நன்றாக முறுகல் ஆன பின்பே  மிக்சியில் உள்ள விழுதை சேர்க்க வேண்டும்.
   Read More...

   காரச்சட்னி

   6 comments
              இட்லிக்கு பொதுவா எல்லாரும் பொரிகடலை சட்னியும்,சாம்பாரும்,வச்சு சாப்பிடுவாங்க..ஆனா எங்க வீட்ல எல்லாருமே பொரிகடலை சட்னியோட   இந்த காரச்சட்னி  செஞ்சு வச்சா சாம்பாரைவிட காரச்சட்னியத்தான் விரும்புவாங்க...இட்லியும் மிச்சமில்லாம காலியாயிடும்.காரப்பிரியர்கள் எல்லாருக்கும் இந்த சட்னி ரொம்ப பிடிக்கும்.
   தேவையான பொருட்கள்:-
   • மிளகாய் வத்தல்                 - 15
   • புளி                                            - நெல்லிகாய் அளவு 
   • பூண்டு                                       -எட்டு 
   • சின்ன வெங்காயம்             - பத்து
   • உப்பு                                          - சிறிது 
   • கருவேப்பிலை                    - மூன்று ஆர்க்கு 
   • உளுந்து                                   - இரண்டு ஸ்பூன் 
   • எண்ணெய்                             -  சிறிது 

   செய்முறை:-
   • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தை போட்டு வறுக்க வேண்டும்.
   • உளுந்து கலர் மாறும் பொழுது மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்க வேண்டும்.

   • மிக்சியில் வதக்கிய பொருட்களை போட்டு உப்பை  சேர்த்து அரைக்க வேண்டும்.
   • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து எண்ணெய்யில் கடுகு,உளுந்து  தாளித்து சேர்க்க வேண்டும்.

   Read More...

   பிரண்டை துவையல்:-

   11 comments
                          ரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி.10 வருசத்திற்கு முன்னே இந்த செடிய  சாதாரணமா பாக்க முடிந்தது..இப்ப இதுவும் அபூர்வமாகிபோச்சு.நல்லா பசியை தூண்டுற சக்தி இந்த செடிக்கு இருக்கு .வாந்தி வரும் உணர்வு,அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
    தேவையான பொருட்கள்:-
   • பிரண்டை                        - சிறிது
   • மிளகாய் வற்றல்         - எட்டு  
   •  புளி                                   - கொட்டையளவு 
   • தேங்காய்                      - சிறிது 
   • கருவேப்பிலை            -சிறிது
   • பெருங்காயம்              -ஒரு சிட்டிகை
   • உப்பு                                -சிறிது
   •  எண்ணெய்                 - மூன்று ஸ்பூன்
   செய்முறை:-
   • பிரண்டையை சுத்தம் செய்து வென்னீரில் இரண்டுநிமிடம் போட்டு எடுத்து தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும்.
   • வாணலியை அடுப்பில் வைத்து  சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு வதக்கவேண்டும். 
   • நன்கு வதக்கிய உடன் அதனுடன் வத்தல்,புளி,தேங்காய், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

   • மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.
   • ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை கொட்டி சிறிது எண்ணெய்யில்  கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து ஊற்றவேண்டும்.
           பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும்.          
   Read More...