வண்ண மயில்

22 comments
என் மகன் பிரதீப்பின் கைவண்ணத்தில் உருவான வண்ண மயில் இது.
தேவையான பொருட்கள்:-
  • காட்டன் ரோல்              - 1
  • காப்பர் வயர்                - சிறிது
  • காட்டன் பட்                -1
  • செலோ டேப்               - 1
  • கட்டிங் ப்ளேயர்            - 1
  • ஸ்டிக்கர் பொட்டு          -2 அட்டை
  • குந்தன் ஸ்டோன்         - சிறிது
  • acrylic colour                - ப்ளு,வெள்ளை,மஞ்சள்.
  • gauze cloth                 - சிறிது
  • மயில் இறகு              - 3
  • ரேடியம் பால்             - 1
  • பெவிகால்                 - 1

    செய்முறை:-
    • ரேடியம் பந்தில் முழுவதும் பெவிகால் தடவி ஒரு லேயர் காட்டனை ஒட்டி  விட வேண்டும்.
    • மயிலின் உடல் பகுதி வருமளவிற்கு காட்டனை சுற்றி கட் பண்ணாமல் தொடர்ந்து தலை பகுதிக்கு காட்டனை கொண்டு வந்து சிறிது காட்டனை விட்டு கட் பண்ணி விட வேண்டும்.

    • கட் பண்ணிய காட்டனை உருட்டி உடல் பகுதியோடு சேர்த்து பாண்டேஜ் துணியால் தலை, உடல் அமைப்பு வருமாறு சுற்ற வேண்டும்.
    • சுற்றிய துணியை பெவிகால் வைத்து ஒட்டி விட்டு அதன் மேல் ப்ளு கலர்  பெயிண்ட் அடித்து விட வேண்டும்.

    • மயில் இறகில் கண் போல் உள்ளதை தவிர்த்து இருபுறம் உள்ள முடிகளை கட்பண்ணி எடுக்க வேண்டும்.
    • கிராப்ட் சீட்டில் ரோஜா இதழ் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியிலும் அதே போல் கட் பண்ணி இரண்டையும் பெவிகால் கொண்டு ஒட்டி காய்ந்த உடன் இதழின் குறுக்கே மடிப்பு வருமாறு மடக்கி விட வேண்டும்.
    • இதுபோல் மூன்று இதழ்கள் செய்து மயிலிறகில் வெட்டியமுடிகளை ஒட்டி விட வேண்டும்.

    • இதை உடல் பாகத்தின் பின் பகுதியில் ஓட்ட வேண்டும்.காப்பர் வயரை மயிலின் கொண்டை போன்றும்,கால் விரல்களை போன்றும் வளைத்து கட் பண்ண வேண்டும்.
    • காட்டன் பட் எடுத்து நடுப்பகுதியில் கட் பண்ண வேண்டும்.இது இரண்டு பகுதிகளாக ஒரு முனை துளையோடும் மறுமுனை பஞ்சு உருண்டையோடும் இருக்கும்.
    • பஞ்சு உருண்டை உள்ள முனையை கால்களாக பாவித்து வயிற்றுப் பகுதியின் அடியில் ஓட்ட வேண்டும்.
    • இரண்டையும் ஒட்டிய பின் மறு முனையில் உள்ள துளையில் விரல்களாக வெட்டிய வயரை  செருகி விட வேண்டும்.
    • ஒட்டிய கால்கள் பிரிந்து விடாமல் இருக்க சிறிது பாண்டேஜ் துணியை கட் பண்ணி வயிற்று பகுதியோடு சேர்த்து ஓட்ட வேண்டும்.

    • கிராப்ட் சீட்டில் சிறகுகள் போல் வரைந்து கட் பண்ணி  பாண்டேஜ் துணியை அதே அளவில் வெட்டி இரண்டையும் பெவிகால் வைத்து ஒட்டி விட வேண்டும். 
    • இதன் மேல் லைட் ப்ளு கலரும்,மற்றொரு சிறகில் ஆரஞ்சு கலரும் அடித்து இவை இரண்டையும் உடலின் மேல் பாகத்தில் இரு புறமும் ஒட்டி விட வேண்டும்.
    • தலையில் கொண்டை போன்று வளைத்த வயரை குத்தி விட்டு வெள்ளை,கருப்பு பெயிண்ட் வைத்து கண்கள் வரைந்து முடிக்க வேண்டும்.
    • பச்சை நிற குந்தன் கற்களை  பின்புறம் வைத்துள்ள தோகையில் அங்கங்கே இடைவெளி விட்டு ஒட்டி விட்டால் வண்ண மயில் ரெடி.

      Read More...

      பெட் பாட்டில் வளையல்

      19 comments
      தேவையான பொருட்கள்:-
      • பெட் பாட்டில்                       - 1
      • கம் பாட்டில்                        - 1
      • கோல்டன் பேப்பர்                  - 1
      • சில்வர் பேப்பர்                     - 1
      • க்ளிட்டர்ஸ் (கோல்டன் கலர்)     - 1
      • க்ளிட்டர்ஸ் (சில்வர் கலர்)        - 1
      • சிசர்                                - 1
      • செல்லோ டேப்                    - 1
      • நோஸ் பிளேயர்                   - 1
      செய்முறை:-
      • பாட்டிலை சிறு துளை போட்டு அரை செ.மீ அகலத்திற்கு வளையம் போல் வெட்டி எடுக்க வேண்டும்.
      • எடுத்த வளையத்தில் கம்மினை தடவி அதன் மேல் கோல்டன் கலர் கிளிட்டரையோ அல்லது சில்வர் கிளிட்டரையோ தூவி 5 நிமிடம் உலர வைக்க வேண்டும்.

      • சில்வர் கலர் தூவிய வளையத்தின் இரு ஓரங்களிலும் மெலிதாக நறுக்கிய கோல்டன் பேப்பரை சிறிது கம் தடவி கவனமாக ஒட்டி விட வேண்டும்.

      • 5 நிமிடம் உலர விட்டு செல்லோ டேப்பை வளையத்தை சுற்றிலும் ஒட்டி கட் பண்ண வேண்டும்.

      • அவரவர் விருப்பம் போல் கலர் குந்தன் கற்களை வைத்து மேலும் அழகு படுத்தலாம்.
      Read More...

      வாழை இலை மீன்

      11 comments
      தேவையான பொருட்கள்:-
      • மீன்                      -அரை கிலோ
      • சின்ன வெங்காயம்      - 10
      • மிளகாய் பொடி          - ஒரு ஸ்பூன்
      • மசாலா பொடி           - 2 ஸ்பூன்
      • பூண்டு                   - 4
      • இஞ்சி                    - சிறிது
      • புதினா,மல்லி இலை    - சிறிது
      • கருவேப்பிலை          - 2 ஆர்க்கு
      • தக்காளி                 - 2
      • பச்சை மிளகாய்         - 2
      • உப்பு                     - தேவையான அளவு
      • எண்ணெய்               - 2 ஸ்பூன்
        செய்முறை:-
        • மீனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி,மசாலாபொடி சேர்த்து தனியாக வைக்க வேண்டும்.
        • வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை  நறுக்கி வைக்க வேண்டும்.
        • அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
        • சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா,மல்லி இலை தட்டிய இஞ்சி,பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.
        • வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் மசாலாவில் பிரட்டிய மீனை வைத்து அதனுடன் வதக்கிய கலவையை வைத்து நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

        • இதனை நீராவியில் வேக வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
        Read More...

        மினியேச்சர் பூத்தொட்டி

        16 comments
        அறுசுவையில்  இமா கொடுத்த கேப்ஸ்யூல் பூக்கள் பார்த்து நான் முயன்ற கிராப்ட் இது.இமா பூக்களின் நடுவே மகரந்தம் இல்லாமல் செய்திருந்தாங்க.அவங்க ஐடியாவில் நான் இதில் அதை முயன்றேன்.சிறு தொட்டி கிடைக்க வில்லை.நூலில் அதை முயன்று தொட்டி செய்தேன்.
        தேவையான பொருட்கள்:-
        • காலாவதியான கேப்ஸ்யூல்             -6
        • கேப்ஸ்யூல் உள்ளிருக்கும் துகள்கள்    - சிறிது.
        • பெவிகால்                                - 1
        • மஞ்சள் நூல்                             - அரை மீட்டர்
        • உபயோகமில்லாத பல்ப்                 - 1
        • பச்சை நிற இன்சுலேசன் டேப் .         -  தேவையான அளவு
        • காட்டன் பட்                              - 5  
        செய்முறை:-
        • கேப்ஸ்யூலை  பிரித்து உள்ளிருக்கும் மருந்து துகள்களை தனியாக பிரித்து வைக்க வேண்டும்.
        • காட்டன் பட் நடுவில் வெட்டி இரண்டாக எடுத்து கொள்ளவேண்டும்.
        • பிரித்த கேப்ஸ்யூலை சுற்றிலும் ஓரமாக வெட்டி பூ போல் விரித்து விட வேண்டும்.
        • பட்ஸில் பெவிகால் தடவி கேப்ஸ்யூல் துகள்களில் புரட்டி எடுத்து காயவிட வேண்டும்.
        • பல்பை எடுத்து மேல்புறம் உள்ள பின்னை அகற்றி விட்டு மஞ்சள் நூலை இறுக்கமாக சுற்ற வேண்டும்.
        • சுற்றிய நூலில் முழுவதுமாக பெவிகாலை தடவி காயவிட வேண்டும்.
        • காய்ந்த பின் பல்பில் இருந்து மஞ்சள் நூலை கையால்  ஒரு சுற்று சுற்றி இழுத்தால் தனியாக கழன்று வந்துவிடும். இது பார்க்க தொட்டி போல் இருக்கும்.
        • இன்சுலேசன் டேப்பை 2செ.மீ அளவு நறுக்கி அதன் உயர அளவிலேயே மடக்கி வைத்து கொள்ளவேண்டும்.
        • காட்டன் பட் தண்டு பகுதியில் இன்சுலேசன் டேப்பை சுற்றி வைக்க வேண்டும்.
        • தண்டு பகுதியில் உள்ள துளையில் மெல்லிய கம்பியை நுழைத்து வெட்டி விட வேண்டும்.
        • தொட்டியில் தெர்மகோல் வைத்து மடக்கி வைத்த இன்சுலேசன் டேப்பையும்,பூக்களையும் தெர்மகோலில் சொருகி விட வேண்டும்.
        • மினியேச்சர் பூத் தொட்டி தயார்.
        Read More...

        காட்டன் ஹென்

        19 comments
        தேவையான பொருட்கள்:-
        • காட்டன் ரோல்      - சிறியது 1
        • பெவிகால்            - 1
        • வெல்வெட் பேப்பர்  - சிறு துண்டு
        • மிளகு                - இரண்டு 
        • சி டி                  - 1
        • அட்டை கட்டிங்      -2
        • முட்டை              - 1
        செய்முறை:-
        • முட்டையில் சிறு துளை போட்டு மஞ்சள்,வெள்ளை கருவை நீக்கி ஓட்டை தனியாக எடுத்து கொண்டு அதன் மேல் பெவிகாலை தடவி காட்டன் ரோலில் ஒவ்வொரு லேயராக எடுத்து முட்டையின் மேல் ஒட்டி முழுவதும் சுற்ற வேண்டும்.
        • கோழியின் தலை செய்வதற்கு காட்டன் லேயரில் சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி செய்து வைத்துள்ள உடல் பாகத்தோடு ஓட்டி விட  வேண்டும்.
        • சிவப்பு வெல்வெட் பேப்பரில் கோழியின் கொண்டை போல்  வெட்டி தலையில் ஒட்டி விட வேண்டும்.
        • கண்கள் வைப்பதற்கு சிறிது பெவிகால் வைத்து மிளகை  ஒட்டி விட வேண்டும்.
        • ஒரு அட்டையில் இறக்கை வடிவில் கட் பண்ணி அதை காட்டன் மேல் அளவாக வைத்து வெட்டி பெவிகால் தடவி உடல் பாகத்தின் இரு புறமும் சிறகு போல் ஒட்டி விட வேண்டும்.
        • பின்  பகுதியையும் இதே போல் வெட்டி ஓட்ட வேண்டும்.
        • இறுதியில் ஆரஞ்ச் வண்ண பேப்பரில் அலகு  போல் வெட்டி பெவிகால் தடவி ஒட்டி விட வேண்டும்.
        • பயன் படாத சிடி எடுத்து செய்த கோழி வடிவத்தை சிடி மேல் ஒட்டி விட வேண்டும்.
        Read More...

        மெஹந்தி

        12 comments
        மெஹந்தி போட்டா உடல் சூட்டை குறைக்கும்,உடல்குளிர்ச்சியாக இருக்கும் என்று மருத்துவ ரீதியாக விரல்களுக்கு தொப்பி போட்டது போல் வைப்பது வழக்கம்.இப்பொழுது அது மறைந்து மெஹந்திய பல டிசைன்களில் போடுகிறார்கள்.நானும் விரலுக்கு தொப்பி போடாம டிசைனா போட்டுத்தான் பார்ப்போமே என்று முயன்றதுதான் இந்த பதிவு.இதோ மூன்று முறை போட்டு பார்த்தேன்..முதல் முறை முயன்றது.இரண்டாவதாக...மூன்றாவதாக முயன்றது.



        Read More...