கோலங்கள்-1

19 comments
எங்க வீட்டு வாசல்ல ஒரு சின்ன பூக் கோலம் போட்டு ஆடி மாதத்தை வரவேற்பு செய்தோம்.

அன்று வாசலில் போட்டது.

வழக்கமா தினமும் போடும் கோலம் இது.

இது இன்று வரலட்சுமி விரதத்திற்கு போட்ட கோலம்.
Read More...

அசத்தல் ஆடி..! அர்த்தமுள்ள ஆடி..!!

19 comments
       தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தான் கலைகட்டுற மாசம். இந்த மாதத்தை நினைத்தாலே
ஆடி பட்டம் தேடி விதை..
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்..
       இந்த பழமொழிதான் எல்லாருக்கும் நினைவிற்கு வரும். ஆடி முதல் தேதி பொதுவா தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களிலேயும் நகரங்களிலேயும் சைவ சாப்பாடு சாப்பிடுறவங்கள தவிர்த்து மற்ற எல்லோர் வீடுகளிலும் அன்னிக்கு அசைவ சமையலாதான் இருக்கும். இதுல நிறையபேர் தலை ஆடி கொண்டாடுரவங்களா இருப்பாங்க... அன்னிக்கு மாமிச விற்பனை அமோகமா இருக்கும். பத்தடிக்கு ஒரு கடையா புது கடைகள் போட்டிருப்பாங்க. (ஒரு நாள் கடை) அன்னிக்கு நானும் மட்டன் வாங்க வழக்கமா போற கடைக்கே போயிருந்தேன்.

       கடையில் சிறிது கூட்டம்தான்... பரவாயில்லை வெயிட் பண்ணுவோம்னு காத்திருந்தேன். ஒரு பெரியவர் திடீரென்று சப்தமாக யாரையோ பார்த்து என்னா...! மாப்ளே.. யாரோன்னு நினைச்சுட்டு இருக்கேன்... பேண்டு போடாம ஆள் அடையாளம் தெரியலையப்பா....! கைலியில இன்னைக்கு தானே பாக்கேன், என்னா... தலை ஆடியா..? என்று வெள்ளந்தியாக கிராமத்து பாஷையில் கேட்க , அந்த மாப்ளை பையன் யோவ்.. மாமா! பேண்டு போட்டா நாரும்மய்யா..பேச்சிலய கூட்டத்த நாரடிக்கிறே.. பேண்ட்னு சொல்லித்தொலை என்று நக்கலாக பேச,கூட்டத்தில் ஒரு பெண், கடைக்காரண்ணே நா போயி சமைக்கணும் எவ்ளோ நேரமா நிக்கிறேன்.. சீக்கிரம் 1கிலோ நிறுத்து போடுங்க.. என்று கூற, கடை காரர் ஏந் தாயி சித்த பொறு.. எல்லாரும் வீட்ல போயி சமைக்கத்தான் போறாங்க, என்று கல கலப்பா வியாபாரம் நடந்த கடையில் கூட்டம் களைந்து ரெண்டு கடை தள்ளி திருவிழா கூட்டம் அலை மோதியது. விசாரித்ததில் 1கிலோ கோழிக்கறி வாங்கினால் 2 முட்டை இலவசமாம்.(சீக்கு கோழி, கழிச்சல் கோழியா இருக்கும். இருந்தாலும் நம்ம ஆளுங்கதான் இலவசம்னு சொன்னாலே மாட்டு முத்திரத்தை கூட சுத்த இளநீர்னு ஒரு பிடி பிடிச்சுர மாட்டாங்களா...!)

       "தள்ளுபடி" "இலவசம் " இந்த ரெண்டு வார்த்தையை கேட்டாலே நம்ம மக்கள் புத்தியை எங்கேயோ அடமானம் வச்சுடறாங்க... குருவி சேர்த்த மாதிரி சேர்த்த பணத்தை வைத்தோ, இல்லை வீட்டுக்காரரிடம் சாமியாடி வாங்கிய பணத்தை வைத்தோ சம்பந்தப்பட்ட கடைக்கு போயி கூட்டத்தில இடி பட்டு 1000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 1500 ரூபாய்க்கு வாங்கி வந்து போன மாதம் வாங்கியிருந்தா 2000 ரூபாய், தள்ளுபடியில வாங்கினதால 500 ரூபாய் மிச்சம் பண்ணிட்டேன்னு பெருமையா சொல்வாங்க. ஆனா.. உண்மையில என்ன நடக்குதுன்னா "ஹோல் சேல்" நடத்துற எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் சொன்னது இது.
அண்ணாச்சி..ஆடிமாதம், மார்கழி மாதம் எல்லா தொழிலும் கொஞ்சம் சுணக்கமா இருக்கும்.புதுசா எதுவும் ஆரம்பிக்க மாட்டாங்க.பணப்புழக்கம் கம்மியா இருக்கும். எங்களுக்கு பொருளை எப்படியோ வித்து தள்ளணும்... அதனால மொத்தமா பொருளை வாங்கும் போது குறைந்தவிலைக்கு வாங்குவோம். விற்கும் போது இலாபத்தை சேர்த்துதான் விற்கிறோம். இந்த ஆடி மாதம் வர்றப்ப விற்பனை மந்தமா இருக்கும். அந்த நேரத்துல MRP rate ஐ விட சிறிது விலை அதிகமா வச்சி தள்ளுபடின்னு சொல்லி பழைய விலைக்கே இலாபம் பாத்து வித்துடுவோம்னு சொல்லி முடிச்சார்.
(நம்ம ஆளுங்க தான் ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலேயே புளியோதரை செஞ்சு நாலு நாள் சாப்டவங்கலாச்சே..! விக்காத சேலை,இத்து போன சேலை இதையெல்லாம் வித்து தள்ளுறதுக்கு யோசிக்காமயா இருப்பாங்க.)
      நம்ம பெரியவங்க ஆடியை ஒரு அர்த்தத்தோட தலை ஆடி ,நடு ஆடி, கடை ஆடின்னு புது மண தம்பதிகளை அழைத்து புது ஆடை எடுத்து கொடுத்து விருந்து வைத்து கொண்டாடி இருக்காங்க... இதனால உறவு முறை நெருக்கம் புது சம்பந்தங்களுக்கு அதிகமாகும். ஊர், ஊரா அம்மன் கோவில் திருவிழா கொண்டாடுறதுக்கு காரணம் ஆடி பட்டத்தில் தான் விவசாய வேலைகள் தொடங்குவாங்க. அப்ப அம்மன் கோவில்களில் கூழ் காய்ச்சி ஊத்தி தொடங்கிய விவசாயம் செழித்து வரணும்னு வேண்டுதல் வைப்பாங்க. கூழ் குடிக்கிறது ஆடிக்காற்றினால் வரும் நோய் தொற்று,அடுத்து வரும் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம்,சளி,இவற்றிற்கு நிவாரணமாக கேப்பை கூழ் செயல்படுவதால், உடற் சூட்டை அதிகப்படுத்துவதால், கூழ் காய்ச்சி ஊற்றும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க..

       பாரம்பரியமா அர்த்தத்தோட கொண்டாடிட்டு வர்ற இந்த ஆடி மாதத்தை வியாபாரிகள் ஆடி கொண்டாட்டம்,அசத்தல் ஆடி,ஆடித்தள்ளுபடின்னு பல மந்திர தந்திர வார்த்தைகளை அள்ளி வீசி மக்களை அசத்தி ஆடிமாத தள்ளுபடி வியாபாரத்தையும் அசத்திடராங்க...!

       சரி.. நீங்க கோழி எடுத்தீங்களான்னு கேட்காதீங்க. எப்பவும் வாங்கற கடையிலேயே 1கிலோ எடுத்து குழம்பும்,வறுவலும் செய்து சாப்பிட்டாச்சு. :)
Read More...

வெண்டைக்காய் தீயல்

16 comments
தேவையான பொருட்கள் :-
  • வெண்டைகாய்                                   -அரை கிலோ
  • சின்ன வெங்காயம்                           - 10
  • மசால் பொடி                                       -  2ஸ்பூன்
  • மிளகாய் பொடி                                   - 1ஸ்பூன்
  • சர்க்கரை                                               - 2 ஸ்பூன்
  • எலுமிச்சை                                          - அரை மூடி
  • உப்பு                                                        - சிறிது
  • எண்ணெய்                                          - தேவையான அளவு
  • கடுகு, உளுந்து                                 - 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை                               - சிறிது
செய்முறை :-
  • வெண்டை காயை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது  எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய காயை போட்டு விழு விழுப்பு நீங்க வதக்க வேண்டும்.
  • காயை வதக்கும் போதே உப்பை சேர்த்து  வதக்கினால் விழு விழுப்பு தன்மை விரைவில் மாறி காய் உதிரியாக இருக்கும்.
  • உதிரியாக காய் வதங்கிய உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும்வரை  வதக்க வேண்டும்.
  •  அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து சிறிது எண்ணெய்  ஊற்றி  சூடானதும் கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் கருவேப்பிலை சேர்த்து  வதக்கிய காயை போட்டு  அதனுடன் மிளகாய் பொடி,மசாலா பொடி சேர்த்து சுருள பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  •  சேர்த்த தண்ணீர்  கொதித்து  வற்றும் பொது  சர்க்கரையை  சேர்த்து அதனுடன் எலுமிச்சையை பிழிந்து  விட வேண்டும்.

  • அனைத்தும்  நன்றாக சேர்ந்து கொதித்து சுருளும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். தீயல்  தயார்.
Read More...

சுண்டல்

12 comments
தேவையான பொருட்கள்:-
  • பாசிப்பயறு                         - 200கிராம்
  • தேங்காய் துருவல்            -சிறிது
  • மாங்காய்                              -  அரை காய்
  • மிளகாய் வற்றல்                - 3
  • கடுகு,உளுந்தம்பருப்பு      -     1ஸ்பூன் 
  • கருவேப்பிலை                     -சிறிது 
  • உப்பு                                          -     சிறிது 
செய்முறை:-
  • பாசிப்பயறை  நன்றாக கழுவி 3டம்ளர் தண்ணீர்  விட்டு குழையாமல் வேகவைத்து  எடுக்க வேண்டும்.
  • அடுப்பில்  வாணலியை வைத்து சிறிது எண்ணெய்  விட்டு கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வற்றலை ஒடித்து போட்டு அதனுடன் கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கிய  மாங்காய்,துருவிய தேங்காய்,வேக வைத்த  பாசிபயறு,சேர்த்து தேவையான  உப்பையும்  சேர்த்து நன்றாக  பிரட்டி எடுத்து வைக்க  வேண்டும்.
  • சுண்டல் தயார். இது  சர்க்கரை  நோயாளிகளுக்கு  ஏற்ற மாலை நேர சிற்றுண்டி
Read More...

அக்கரை பச்சை

17 comments
காலையில எழுந்தவுடனே பகவானே இன்னைக்கு நாள் நல்லா விடியனும்னு நல்ல சிந்தனைய நினைக்கிற ஆட்களை விட காபியை நினைத்து கொண்டே எழும்புற ஆட்கள் தான் 90% இருக்காங்க.. இதுல பெட் காபின்னு ஒரு நாமகரணம் அதுக்கு வச்சிட்டாங்க.. அதுக்கு அப்பறம் குடிக்கிற காபிக்கு டீ பிரேக்,காபி பிரேக்னு எதோ ஒரு பேர் வச்சி இந்த காபி குடிக்கு அடிமையானவங்க நிறைய பேர் நம்ம நாட்டிலதாங்க இருக்காங்க.. இந்த குடி காபியோட போச்சான்னா இல்லை,சாராயம்,ஒயின் பீர்,விஸ்கின்னு பலதரப்பட்ட குடிக்கு அடிமையானவங்க தான் இருக்காங்க.ஆக மொத்தம் இந்திய குடிமகனா யாரும் இல்லை.. என்னதான் சொல்ல வர்றாங்க.. மேட்டர் ஒன்னும் புரியலைன்னு நீங்க சொல்றது என் மைன்ட் வாய்ஸ்கு கேட்குது..ஆமாங்க நம்ம மக்கள் அயல் நாட்டு மோகத்தில் அடிமையானது முதன் முதலா இந்த காபி,டீ குடிக்க பழக ஆரம்பித்ததுல இருந்துதான் தொடங்கி இருக்கும்.. என் சிறுவயதில் கேள்விப்பட்ட விஷயம் இது. என் தாத்தா காலையில எழும்போதே நகைசுவையா பிளாக்&வொயிட் இன்னும் போடலையான்னு கேட்பார்.. அதுக்கு எங்க அம்மா சொல்வாங்க பிளாக் இறங்கி ரெடியா இருக்கு.. வொயிட் கறக்க இன்னும் ஆள் வரல்லைன்னு சொல்வாங்க .உடனே தாத்தா இவன் என்ன தினம் லேட்டா கறக்க வர்றான்னு புலம்பிட்டு தெருமுனையில இருக்கிற டீ ஸ்டாலுக்கு போய் காபி குடிச்சிட்டு வந்துடுவார்.. அடுத்த அரை மணி நேரத்தில வீட்டு காபியும் குடிப்பார்.. ஏன் தாத்தா பிளட் சுகர் உங்களுக்கு இருக்கிறப்ப காபி குடிக்கிறத விட்டுறலாம்மில்லன்னு கேட்டா.. முடியலையே, இந்திய சுதந்திரத்துக்கு முன்னாலே நம்ம ஜனங்களுக்கு காபி,டீன்னா என்னன்னு தெரியாது.. இந்த வெள்ளைக்காரன் அப்ப தினமும் இலவசமா வீட்டுக்கு வீடு வந்து காபிய சுடசுட ஊத்திட்டு போவான்.. (இலவச திட்டம் கூட வெள்ளைக்காரன் உபயத்துலதான்  நம்ம நாட்டுக்கு வந்தது போல) காசா.. பணமா.. தினமும் வீட்டு வாசல்ல கிடைக்குதேன்னு நம்ம ஆளுங்களும் ருசி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. 10,15 நாள் கழித்து வெள்ளைக்காரன் தெருமுனைல காபிய வேன்ல கொண்டுவந்து ஒரு பெல் அடிப்பானாம்.. எல்லாரும் தெருமுனைக்கு போய் காபிய வாங்கிட்டு வந்து குடிச்சாங்கலாம்.. கொஞ்ச நாள்ல வேன் வராம இருக்கவும் நம்ம ஜனங்க காபிக்கு ஏங்கி தவிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. (டார்வின் சிஸ்டம் தான்) அதுக்கு பிறகு காபித்தூளை வெள்ளைக்காரன் விற்க ஆரம்பிச்சான்.. இந்தியால விளையாத காபிய அவங்க நாட்டில இருந்து விதை கொண்டு வந்து விதைத்து காபி உற்பத்தி பண்ணி இந்திய ஜனங்களுக்கே விற்க ஆரம்பிச்சுட்டான்னு காபிக்கு அடிமையான கதைய சொன்னார்.. பாருங்க,நம்ம மண்ணுல விதைத்து உற்பத்தி பண்ணி நம்மகிட்டயே விற்று சம்பாதித்து இருக்காங்க.. தெல்லாம் சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது.. சுதந்திரத்துக்கு பிறகும் நம்ம மக்கள் ஏன் அயல் நாட்டு மோகத்தில ஊறி போய் இருக்காங்கன்னு புரியல.. அவங்க நாட்டு சீதோஷ்ணநிலைக்கு அவங்க பீர்,விஸ்கின்னு குடிக்கிறாங்க.. ஆடை அணியும் விஷயத்திலயும் கோட் போடுறது,டை கட்டுறதுன்னு அவங்க சீதோஷ்ணத்துக்கு ஏற்ற மாதிரி. அணியுறாங்க.. இதனால அவங்க ஆரோக்கியத்துக்கு பாதிப்பு வராது. ஆனா நம்ம ஆளுங்க இதைபற்றி யோசிக்காமல் வெளிநாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி தானும் கெட்டு தன்னை சுற்றி இருக்கிறவர்களையும் மாற்றி விடுகிறார்கள்.. பள்ளி சீருடையில் இருந்து தினமும் அணியும் ஆடை வரை வெளிநாட்டு மோகம்தான் தலை விரித்து ஆடுகிறது.. ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்க சீருடை தேவைதான்.. டை,சட்டை, சட்டையின் மேல் ஒரு சர்தாரி கோட்,ஷு,சாக்ஸ் தேவைதானா..? நல்ல வேளை தொப்பி போடணும்னு இதுவரை யாரும் சொல்லல.. இப்பிடியெல்லாம் படித்து பட்டம் வாங்கி நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு உழைக்கிறாங்களான்னா அதுவும் கிடையாது.. படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாம வெளிநாட்டுக்குதான் ஓடுறாங்க.. இதுல பசுமை புரட்சி.. தொழில் புரட்சின்னு கோஷம் வேறு போடுறாங்க.. இந்த புரட்சியை பற்றி அடுத்த பதிவில போடுறேன்.. 
Read More...

முதல் விருது

23 comments
வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ."awesome blogger award" வழங்கிய விஜி பார்த்திக்கு "http://vijiparthi.blogspot.in/" மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான இத் தருணத்தை தோழர்,தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!என் வலைக்கு கிடைத்த முதல் விருது இது . 
"awesome blogger award" 


இந்த விருதை நான் எனது வலையுலக தோழர், தோழிகளான உங்களுக்கு வழங்குகிறேன்.
  1. தோழர் தனபாலன் அவர்கள் - http://dindiguldhanabalan.blogspot.com/
  2. தோழி சசி கலா அவர்கள் - http://veesuthendral.blogspot.in/
  3. தோழர் வரலாற்று சுவடுகள் - http://varalaatrusuvadugal.blogspot.in/
  4. தோழி ரம்யா அவர்கள் - http://www.craftoframya.blogspot.in/
  5. தோழி இமா அவர்கள் - http://imaasworld.blogspot.com/
 விருதை பெற்று கொண்ட பதிவர்கள் பின்பற்றும் விதி முறைகள்
  1. விருது வழங்கியவருக்கு நன்றி கூ றுதல்.
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக விருதின் சின்னத்தை தங்கள் வலையில் பதிந்து கொள்ளலாம்.
  3. தாங்கள் பெற்ற விருதை நீங்கள் விரும்பும் 5 பதிவர்களுக்கு வழங்கலாம்.
Read More...