கிரிஸ்பி பொடடோ சாண்ட்விட்ச்

9 comments
தேவையான பொருட்கள் :-
 • உருளை கிழங்கு - இரண்டு
 • பிரட் - 12 ஸ்லைஸ்
 • பூண்டு - நான்கு
 • மல்லி தழை - சிறிது
 • மிளகு பொடி - சிறிது
 • உப்பு - அரை ஸ்பூன்
 • வெள்ளை எள் - ஒரு ஸ்பூன்
 • தக்காளி சாஸ் - சிறிது
செய்முறை :-
 • உருளை கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து அதனுடன் மிளகு பொடி, பொடியாக நறுக்கிய பூண்டு, மல்லி தழை,  உப்பு இவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.
 • பிரட்டை முக்கோணமாக வெட்டி ஒவ்வொரு ஸ்லைஸின் மீதும் சாஸை தடவி விட வேண்டும்.
 • அடுத்த லேயராக கிழங்கு கலவையை தடவி விட்டு அதன் மேல் வெள்ளை எள்ளை தூவி விட்டு மற்றொருமுக்கோண பிரட்டை அதன் மேல் வைத்து அனைத்து பிரட்டையும் ரெடியாக வைக்க வேண்டும்.
 • அடுப்பில் தவாவை வைத்து சிறிது வெண்ணை அல்லது நெய்யை தடவி தவா கொள்ளும் அளவு பிரட்டை வைத்து பொன்னிறமாக மாறிய உடன் திருப்பி போட்டு மறுபுறமும் பொன்னிறமான உடன் எடுத்து விட வேண்டும்.
 • காலை சிற்றுண்டியாக பரிமாறலாம்.
Read More...

கீரீன் குழம்பு

10 comments
தேவையான பொருட்கள் :-
 • தண்டு கீரை                          -  அரை கட்டு
 • சின்ன வெங்காயம்            -  10
 • தக்காளி                               - 2
 • கடலை பருப்பு                     -  அரை கப்
 • சோம்பு                                  - 1 ஸ்பூன்
 • உப்பு                                       - சிறிது
 • கரம் மசால் பொடி                       - 2 ஸ்பூன்
 • மிளகாய் பொடி                  - ஒரு ஸ்பூன் (காரத்திற்கு தேவையான அளவு )
 • பச்சை மிளகாய்                  - 2
  • அரைக்க :-
  • கீரை                                     - சிறிது
  • பூண்டு                                 - 4
  • இஞ்சி                                   - சிறிது
  • தேங்காய்                            - சிறிது
செய்முறை :-
 • கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக பிழிந்து மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
 • கீரையில் பாதியை பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து  நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.
 • மீதி கீரையை வதக்கி வைக்க வேண்டும்.
 • வாணலியை  அடுப்பில் வைத்து  தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பருப்புக்கலவையை சிறியதாக கிள்ளி போட்டு பொன்னிறம் வந்த உடன் எண்ணெய்  வடித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
 • மிக்சியில் தேங்காய், இஞ்சி, பூண்டு, சேர்த்து முதலில்  அரைத்து விட்டு அதன் பின் வதக்கிய தண்டு கீரையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து  சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு  வெடித்த உடன் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி அதனுடன் கரம் மசாலா, மிளகாய் பொடி சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட  வேண்டும். 
 • கொதிக்கும்  கலவையில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது உப்பை சேர்த்து கலந்து கொதிக்கும் போது செய்து வைத்திருக்கும் பருப்பு உருண்டையை அதில் சேர்த்து உப்பு சரி பார்த்து இறக்கி விட வேண்டும்.
 • கீரீன் குழம்பு தயார்.
Read More...

vej- egg fry

5 comments
தேவையான பொருட்கள்:-
 • முட்டை                                          - 3
 • காரட்                                                - 1
 • அரைக்கீரை                                  - ஒரு கைபிடி
 • புதினா                                             - சிறிது
 • பூண்டு                                             - 2 இதழ்
 • மிளகு பொடி                                 - அரை ஸ்பூன்
 • பிரட்                                                 - 4 ஸ்லைஸ்
 • உப்பு                                                 - சிறிது

செய்முறை:-
 • அரைக்கீரை, புதினா இவைகளை நன்றாக தண்ணீர் விட்டு அலசி பொடியாக அரிந்து  வைக்க வேண்டும்.
 • காரட்டை நன்றாக கழுவி துருவி வைக்க வேண்டும்.
 • பூண்டை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
 • பிரட்டை பிய்த்துப் போட்டு மிக்சியில் உதிர்த்து கொள்ள வேண்டும்.
 • முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதனுடன் பிரட் தூள், காரட், புதினா, பூண்டு, கீரை, மிளகு பொடி, இவைகளை சேர்த்து சிறிது உப்புடன் நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
 • தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி முட்டை கலவையை ஒரு கரண்டி எடுத்து தவாவில் ஊற்றி சிறிது தடிமனாக தேய்த்து கலர் மாறும் வரை வேக விட வேண்டும்.
 • கலர் மாறியதும் மறுபுறம் திருப்பி விட்டு வெந்த உடன் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.
 • மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.     
Read More...

வெந்நீர் மகத்துவம்

14 comments
சமையல் தெரியாத சில பெண்களிடம் நல்லா சமைப்பியா எனக்கேட்டால் ஓ..வென்னீர் எல்லாம் சூப்பரா வைப்பேன் என நகைசுவையாக கூறுவார்கள்.ஆனால் அந்த வெந்நீரின் மகத்துவம் பலரும் அறிந்திருப்பார்களா..
வெந்நீரின் மகத்துவம்:-
 • வெந்நீர் தினமும் பருகினால் ரத்த ஓட்டம் சீராகும்.கொழுப்பின் அளவு குறையும்.
 • சளி,ஈஸினோபீலியா தொந்தரவு உள்ளவர்கள் தினம் வெந்நீர் பருகி வர நலம் காணுவார்கள்.
 • டான்சில்ஸ் உள்ளவர்கள் தவிர்க்க முடியாமல் ஐஸ் கிரீம்,குளிர்பானம் சாப்பிட்டால் சாப்பிட்ட உடனே வெந்நீரை குடித்தால் தொந்தரவு இருக்காது.
 • நகக்கண்களில் பூஞ்சை தொற்று இருந்தால் வெந்நீரில் படிகாரத்தை கரைத்து அதில் கைகளை 10நிமிடம் அமிழ்த்து வைத்து எடுக்க நோய் தீரும்.(சுமார் ஒரு வாரம் )
 • வெந்நீரில் தேனை கலந்து பருக உடல் பருமன் குறையும்.(1 டம்ளர் வெந்நீர் +1 ஸ்பூன் தேன் )
 • சிறந்த மலமிலக்கியாக வெந்நீர் செயல்படுகிறது. காலை எழுந்த உடன் 2 டம்ளர் வெந்நீர் பருகி சிறிது நடை பயின்றால் மலம் எளிதாக வெளியேறும்.
 • வெந்நீரில் சிறிது உப்பை போட்டு கரைத்து தொண்டையில் படுமாறு கவனமாக விழுங்கி விடாமல் gargle செய்தால் தொண்டைப்புண், தொற்று ,முதலியவை குணமாகும்.
 • கடின உழைப்பால் உடல் வலி எடுத்தவர்கள் வெந்நீரில் யூகலிப்டஸ் ஆயிலை சிறிது விட்டு குளித்தால் உடல் வலி தீரும்.
 • நன்றாக கொதித்த வெந்நீரில் சிறிது மஞ்சள் தூளை போட்டு வெளியேறும் நீராவியை இன்ஹேல் செய்தால் ஜலதோஷத்திற்கு நல்ல நிவாரணம்.
 • வெயிலில் அலைந்து விட்டு தாகத்திற்காக தண்ணீர் அருந்த குளிர் நீரை அருந்தாமல் சிறிது வெந்நீரை அருந்தினால் தாகம் தீரும்.குளிர் நீரை பருகினால் இதமாக இருக்கும்...ஆனால் தாகம் தீர்ந்த உடன் சிறிது நேரத்தில் ஜலதோஷம்,தலைவலிக்கு மருந்தை தேட  வேண்டி வரும் .
 • சுளுக்கு விழுந்த இடத்தில் நல்லெண்ணெய் தடவி நீவி விட்டு வெந்நீரினால் ஒற்றடம் கொடுத்து பின் வெந்நீரை கொண்டு சுளுக்கு விழுந்த இடத்தில் ஊற்றி கழுவ சுளுக்கு சரியாகும்.
Read More...

குல்கந்து

9 comments
தேவையான பொருட்கள்:-
 • காய்ந்த ரோஜா இதழ்கள்                       - 50 கிராம்
 • நெய்                                                               -50 கிராம்
 • கல்கண்டு                                                   - 50 கிராம்
 • தேன்                                                            - 100கிராம்

செய்முறை :-

 • ரோஜா இதழ்களை சிறிது வெந்நீர் விட்டு  ஊற வைத்து 2 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.

 • வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து சூடு பண்ண வேண்டும்.

 • சூடான நெய்யில் ரோஜா இதழ்களை போட்டு நன்கு வதக்க வேண்டும் (அடுப்பை குறைவாக எரிய விட்டு வதக்கவும்) 
 • நன்றாக ஆறியதும் தேனை முதலில் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் கல்கண்டை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். 
 • இதை உடனே பயன் படுத்த முடியாது.
 • ஒரு வாரத்திற்கு பின் நன்கு ஊறிய உடன் பயன் படுத்தலாம். 
 • ஊற, ஊற ருசியும் அதிகமாகும்.
 • தினம் ஒரு ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சாப்பிட ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் உண்டு.
 • ரத்த சோகைக்கும் நல்ல மருந்து.
 • ஊறுகாய் போல் ஊறினால் இதன் மருத்துவ குணம் அதிகரிக்கும். 
 • ஆரம்ப நிலை சீதபேதிக்கு நல்ல மருந்து.
Read More...