தேவையான பொருட்கள் :-
- சிக்கன் - அரைகிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- கார்ன் ப்ளார் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கார்ன் சிப்ஸ் - 50 கிராம்
- முட்டை - ஒன்று
செய்முறை :-
- சிக்கனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஊறிய சிக்கனை போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்.
- கார்ன் சிப்சை மிக்சியில் பொடி செய்து வைத்து கொண்டு வறுத்த சிக்கனை சூடாக இருக்கும் போதே சிப்ஸ் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்க வேண்டும்.
- கார்ன் சிக்கன் தயார்.