வெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.காயில் இருக்கும் விதைகளை முழுவதும் எடுத்துவிட்டு செய்வதால் விலுவிலுப்பு இல்லாமல் வேலையும் மிக வேகமாக எளிதாக முடிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
- வெண்டைகாய் - 500 கிராம்
- மசால் பொடி - 2 ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- கடலை மாவு - ஒரு கைபிடி
- எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
செய்முறை:-
- வெண்டைகாயை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து நீள வாக்கில் கீறி விதை முழுவதையும் எடுத்து விடவும்.
- விதை எடுத்த காயை விரல் நீளத்திற்கு துண்டுகள் போட்டு நறுக்கவும்.
- நறுக்கிய காயை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, கடலைமாவு,மிளகாய் பொடி, மசால் பொடி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிறிது சிறிதாக காய் கலவையை அதில் போட்டு பொன்னிறமாக சிவந்து வந்தஉடன் எடுத்து தட்டில் போடவும்.
- வெண்டைகாய் ஃப்ரை தயார். சாம்பார், ரசம் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.
முதல் நாள் மொட்டாக இருந்த போது எடுத்த படம் இது.
மறுநாள் மலர்ந்தும் மலராமல் பாதி மலரா உதிர்ந்து விட்டது. இதோட பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
படங்களும் செய்முறையும் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி அண்ணா.
Deleteசெடியின் இலைகளைப் பார்க்கையில் மல்லிகையின் சாயல் தெரியுது. பூ வாசனை எப்படி இருக்குங்க? நிறைய அடுக்குகளோடிருக்கு, அடுக்கு மல்லி-யாய் இருக்கலாம் என நினைக்கிறேன்.
ReplyDelete// வறுக்க தேவையான அளவு//?! பொரிக்கத் தேவையான அளவு-இல்லைங்களா? ;) :) டீப் ஃப்ரைதானே செய்கிறோம்? வெண்டைக்காய் பகோடா மாதிரி சும்மா சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்.
வெண்டைக்காயின் வழுவழுப்பு போக காயை நறுக்கும்போது, ஒவ்வொரு காயினை நறுக்கிய பின்பும் ஒரு துணி (அ) நியூஸ் பேப்பரால் கத்தியைத் துடைத்துவிட்டு நறுக்கினாலும் வழுவழுப்பு குறையும். :)
பூ வாசனை மல்லிகையை விட நல்ல மணமாக உள்ளது மகி. இங்க இதை காட்டு மல்லின்னு சொல்றாங்க.. கவனக்குறைவு..பொரிப்பதுதான் மகி. வருகைக்கு மிக்க நன்றி.
Deleteவழுவழுப்பு குறையும் தகவல் உட்பட செய்முறை குறிப்பிற்கு நன்றி சகோதரி...
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ..
Deleteவெண்டைக்காயின் வழுவழுப்பு போக காயை நறுக்கி உப்பு பிசறி சற்று நேரம் வெய்யிலில் வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் ..
ReplyDeleteஅது அடுக்கு மல்லி என நினைக்கீறேன்..!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மேடம்..
Deleteஅருமையான வெண்டைக்காய் குறிப்பு.
ReplyDeleteஅடுக்குமல்லி, குண்டுமல்லி போல் இருக்கு படத்தைப் பார்த்தால்.
வருகைக்கு நன்றி கோமதியக்கா..
Deleteஆயிரமாவது பதிவுக்கு
ReplyDeleteவாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!
வெண்டைக்காய் பிரை அருமையான குறிப்பு.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஜிகிர்தண்டா செய்முறையைப் படிக்க செல்லுகிறேன்.
அசத்தல் பதிவு இங்கே..அருமை!
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...