Showing posts with label பானங்கள். Show all posts
Showing posts with label பானங்கள். Show all posts

செம்பருத்தி ஜூஸ்

7 comments

வலையுலக உறவுகளுக்கு அன்பான வணக்கம்...! நீ.........ண்ட  இடைவெளிக்கு பின் ஒரு குளுமையான பதிவு...:) கோடை முடிந்தாலும் அதன் தாக்கம் தொடர்கிறது. இயற்கையான முறையில் நம் உடலை ஆரோக்கியமாக குளுமையாக வைத்து கொள்ள உதவும் மிக சிறந்த பானம் இந்த பதிவில் பதிவிடுகிறேன். இந்த சர்பத்தில் நம் ரத்தத்தின் சிவப்பு அணுக்களை அதிகரிக்கும் திறனும்  எதிர்ப்பு சக்தியும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த நல்ல பானம் ..( லேட்டா பதிவை கொடுத்து பீடிகை வேறயா ...உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது...:)) அதாங்க செம்பருத்தி ஜூஸ்...!

தேவையான பொருட்கள்:-

  1. செம்பருத்தி பூ             -   5
  2. சர்க்கரை                      -  தேவையான அளவு 
  3. எலுமிசசை                  - 1பழம் 
  4. ஐஸ் க்யூப்ஸ்               - 5

செய்முறை:-

  1. செம்பருத்தியை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
  2. கொதித்த தண்ணீரை மறறொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவேண்டும்.வடிகட்டிய நீர் மெரூன் நிறத்தில் இருக்கும்.
  3. வடிகட்டிய நீருடன் எலுமிசசையை பிழிந்து சர்க்கரை சேர்த்து கரைத்தால் ரத்த சிவப்புடன் ஜூஸ் தயார்.

எளிமையான ஜூஸ் .... நீங்களும் முயன்று பாருங்கள்.
Read More...

கருவேப்பிலை ஜுஸ்

9 comments
வலையுலக  உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதிக வெயிலால் நிறைய பேருக்கு உடல் சூடும், வாய் புண்ணும் , கொப்புளங்களும் வருவதுண்டு. வருமுன் காப்பது நன்று.. இல்லீங்களா... வந்தாலும் இந்த கருவேப்பிலை ஜுஸ் செய்து சாப்பிட்டால் இந்த தொந்தரவுகள் எல்லாம் போயே போச்சு.. என் அனுபவத்தைதான் பதிவுல சொல்றேன். வாய் புண்ணினால் பட்ட அவஸ்தை இந்த ஜுஸ் குடித்தவுடன் போயிந்தி.. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:
  • கருவேப்பிலை               - ஒரு கைபிடி
  • பனங் கற்கண்டு              - 50 கிராம்
  • தேங்காய்  பால்               - அரை கப் (முதல் பால்)
  • எலுமிச்சை சாறு            - அரை ஸ்பூன்
செய்முறை:
  • கருவேப்பிலையை  நன்றாக கழுவி  மிக்சியில் போட்டு சிறிது நீர் விட்டு (அரை கப்) அரைத்து 100 மில்லி அளவிற்கு ஜுஸ் எடுக்க வேண்டும்.
  • தேங்காயின் பாதி மூடியில் துருவி எடுத்த துருவலை மிக்சியில் போட்டு திக்கான பாலாக அரை கப் எடுக்க வேண்டும்.
  • பனங் கற்கண்டை நன்றாக பொடித்து அதில் எலுமிச்சை ரசம், தேங்காய் பால், கருவேப்பிலை ஜுஸ், அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்தால் ஜுஸ் ரெடி.
Read More...

ஃப்ரூட் டெஸர்ட்

11 comments
தேவையான பொருட்கள்:-
  • பால் - 200 மில்லி
  • மாம்பழம் - 2
  • மாதுளம்பழம் - 1
  • நன்னாரி சிரப் - 2 ஸ்பூன்
  • டூட்டி ப்ருட்டி - சிறிது
  • சீனி - 1 ஸ்பூன்
  • கஸ்டர்ட் பவுடர் - 2 ஸ்பூன் 
செய்முறை:-
  • கஸ்டர்ட் பௌடரை 50 மில்லி பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி சீனி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
  • பால் கொதி வரும் போது கரைத்த கஸ்டர்ட் கலவையை ஊற்றி கிளறி கூழ் பதம் வரும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.
  • ஆறிய கலவையில் தோல் எடுத்து நறுக்கிய மாம்பழ துண்டுகள், உதிர்த்த மாதுளம் பழம் சேர்த்து கலந்து கண்ணாடி கிளாசில் போட்டு அதன் மேல் டூட்டி ப்ருட்டி போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
  • தேவைப்படும் பொழுது வெளியே எடுத்து நன்னாரி சிரப்பை சுற்றிலும் மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.
  • நமக்கு பிடித்த பழங்களை சேர்த்து செய்யலாம்.
Read More...

தர்பூசணி ஜூஸ்

12 comments
கோடையில அதிகமா விளையிற கொடிதாவரம் தர்பூசணி.அது இப்ப எங்க ஊர்ல அதிகமா மார்கெட்ல மலைமலையா குவிஞ்சு விற்பனைக்கு வந்திருக்கு.இந்த பழம் நம்ம ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க.இதுல நீர்சத்து நிறைய இருக்கிறதுனாலே உடலுக்கு குளிர்ச்சியை தரும்.விட்டமின் நிறைந்ததும் கூட.மலச்சிக்கலை தீர்க்கும்.பசியை தூண்டும்.சீசனில் கிடைக்கும் பழங்களை நாம் பயன் படுத்திக்க வேண்டும்.மருத்துவ ரீதியா இந்தப்பழ ஜூஸ் உடன் மிளகு பொடி,சீரகபொடி சேர்த்து சாப்பிடலாம்.சுவைக்காக சாப்பிட ஜூஸ் உடன் தேன்,அல்லது சர்க்கரை உடன் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.

தேவையானவை:-
  • தர்பூசணி துண்டு                  - ஒன்று 
  •  சர்க்கரை                                  - சிறிது 
  •  எலுமிச்சை  சாறு                 - அரை ஸ்பூன் 
  •  ஐஸ் க்யூப்                                - நான்கு 

செய்முறை:-
  • தர்பூசணியை தோல் சீவி சதை பகுதியை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.
  •  சதை பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி முறுக்கு பிழியும் அச்சில் போட்டு பிழிந்தால் சாறு தனியாக விதை தனியாக வந்துவிடும்.
  • பிழிந்த சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கரைய விட்டு ஐஸ் கியூப் உடன் கிளாசில் ஊற்றி பரிமாற வேண்டும்.
Read More...

ஜில்ஜில் ஜிகர்தண்டா

12 comments
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிகர்தண்டா பதிவோட உங்க அனைவருக்கும் வணக்கம்.சந்தர்ப்ப சூழ்நிலையோட கேமிரா ரிப்பேரும் சேர்ந்து பதிவே போட முடியல்லை.இப்ப அடிக்கிற வெயிலுக்கு மக்கள்ஸ் எல்லாருக்கும் ஆரோக்கியத்துல பல பிரச்சினைகள் வரும்.வாய் புண், வயிற்றுப்புண்,சிறுநீர் இறங்குவதில் பிரச்சினை,அதிகமாக தலைமுடி உதிர்தல்,இப்பிடி பல பிரச்சினைகள் வரும்.இதற்கெல்லாம் தீர்வு உணவே மருந்துதான்..இந்த வெயிலுக்கு தண்ணி பழம்,நுங்கு,இளநீர்,மோர்,சாப்பிடலாம்.இதோட வீட்டில நாமளே ஜிகர்தண்டா செய்து சாப்பிடலாம்.இதுல சேர்க்கிற ரோஸ் சிரப், நன்னாரி,பாதாம் பிசினால உடற்சூடு குறையும்.
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு ):-
  • பாதாம் பிசின்                      - இரண்டு கட்டிகள்
  • ரோஸ் சிரப்                          -  எட்டு துளிகள்
  •  பால்                                        - 400 மில்லி
  •  நன்னாரி சிரப்                     - 4 குழி கரண்டி
  •  ஐஸ் க்யூப்                            -6 

செய்முறை:-
  • பாதாம் பிசினை  நன்றாக கழுவி விட்டு எட்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். 
  • ஊறிய பின் பாதாம் பிசின் நன்றாக பூத்து அளவில் அதிகமாக இருக்கும்.
  • ஒரு கிளாஸில் ஊறிய பாதாம் பிசின் சிறிது போட்டு இரண்டு துளிகள் ரோஸ் சிரப்,ஒரு குழி கரண்டி நன்னாரி சிரப்,நூறு மில்லி பால் சேர்த்து ஸ்பூனால் நன்றாக கலக்கி விட்டு இறுதியில் ஐஸ் கியூப்பை சேர்க்க வேண்டும்.
  • தேவை பட்டால் ஐஸ் கிரீம்  சேர்த்து கொள்ளலாம்.

Read More...

பருத்திப்பால்

4 comments
தேவையான பொருட்கள்:
  • பருத்தி விதை         - 2 கைபிடி 
  • கருப்பட்டி             - 100 கிராம் 
  • தேங்காய் பால்        - அரை மூடி
  • சுக்கு                - அரைவிரளளவு
  • அரிசி மாவு           - 2 ஸ்பூன் 
  • ஏலக்காய்          - 2
செய்முறை:
  •  பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.  
  • கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .
  • ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய்  பாலையும் ஊற்றி காய்ச்ச  வேண்டும்.
  • இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
  • சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.
Read More...