Showing posts with label கோலங்கள். Show all posts
Showing posts with label கோலங்கள். Show all posts
ரங்கோலி
ரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார் செய்தாலோ அதை அப்படியே ரங்கோலியின் மேல் போடாமல் அதை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்தால் மிக நைசாக பொடிவரும் . இந்த பொடியை கோலத்தின் மேல், ரங்கோலியின் மேல்போட்டால் போட்ட டிசைன் பெயிண்ட் செய்தது போல் அழகாக வரும்.டிஷைனுக்கு ஏற்றவாறு கலர் பொடியை சல்லடையை உபயோகித்தும் தூவலாம். வேலை சுலபத்தில் முடியும்.அவ்வாறு போட்ட ரங்கோலிதான் இது.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க..;)
கோலங்கள் 3
கோல போட்டோ fileல போட்டு வைத்தது தேடினேன் போன பதிவுக்கு ஒரு சில போட்டோ கிடைக்கலை... இன்று பார்த்தேன்.. அதோட இந்த தீபாவளிக்கு போட்ட கோலத்தையும் பாருங்க. இந்த மயில் கோலம் போன வருட பொங்கலுக்கு போட்டது.. அடுத்தது தீபாவளிக்கு போட்ட கோலம்..தீபாவளிக்கு கோலம் போட்டீங்க..சரி என்ன ஸ்வீட் , காரம் பண்ணீங்கனு கேட்கறீங்களா.. அது அடுத்த பதிவுல போடுறேன்.

