Showing posts with label வீட்டு மருத்துவம். Show all posts
Showing posts with label வீட்டு மருத்துவம். Show all posts

வெந்நீர் மகத்துவம்

13 comments
சமையல் தெரியாத சில பெண்களிடம் நல்லா சமைப்பியா எனக்கேட்டால் ஓ..வென்னீர் எல்லாம் சூப்பரா வைப்பேன் என நகைசுவையாக கூறுவார்கள்.ஆனால் அந்த வெந்நீரின் மகத்துவம் பலரும் அறிந்திருப்பார்களா..
வெந்நீரின் மகத்துவம்:-
  • வெந்நீர் தினமும் பருகினால் ரத்த ஓட்டம் சீராகும்.கொழுப்பின் அளவு குறையும்.
  • சளி,ஈஸினோபீலியா தொந்தரவு உள்ளவர்கள் தினம் வெந்நீர் பருகி வர நலம் காணுவார்கள்.
  • டான்சில்ஸ் உள்ளவர்கள் தவிர்க்க முடியாமல் ஐஸ் கிரீம்,குளிர்பானம் சாப்பிட்டால் சாப்பிட்ட உடனே வெந்நீரை குடித்தால் தொந்தரவு இருக்காது.
  • நகக்கண்களில் பூஞ்சை தொற்று இருந்தால் வெந்நீரில் படிகாரத்தை கரைத்து அதில் கைகளை 10நிமிடம் அமிழ்த்து வைத்து எடுக்க நோய் தீரும்.(சுமார் ஒரு வாரம் )
  • வெந்நீரில் தேனை கலந்து பருக உடல் பருமன் குறையும்.(1 டம்ளர் வெந்நீர் +1 ஸ்பூன் தேன் )
  • சிறந்த மலமிலக்கியாக வெந்நீர் செயல்படுகிறது. காலை எழுந்த உடன் 2 டம்ளர் வெந்நீர் பருகி சிறிது நடை பயின்றால் மலம் எளிதாக வெளியேறும்.
  • வெந்நீரில் சிறிது உப்பை போட்டு கரைத்து தொண்டையில் படுமாறு கவனமாக விழுங்கி விடாமல் gargle செய்தால் தொண்டைப்புண், தொற்று ,முதலியவை குணமாகும்.
  • கடின உழைப்பால் உடல் வலி எடுத்தவர்கள் வெந்நீரில் யூகலிப்டஸ் ஆயிலை சிறிது விட்டு குளித்தால் உடல் வலி தீரும்.
  • நன்றாக கொதித்த வெந்நீரில் சிறிது மஞ்சள் தூளை போட்டு வெளியேறும் நீராவியை இன்ஹேல் செய்தால் ஜலதோஷத்திற்கு நல்ல நிவாரணம்.
  • வெயிலில் அலைந்து விட்டு தாகத்திற்காக தண்ணீர் அருந்த குளிர் நீரை அருந்தாமல் சிறிது வெந்நீரை அருந்தினால் தாகம் தீரும்.குளிர் நீரை பருகினால் இதமாக இருக்கும்...ஆனால் தாகம் தீர்ந்த உடன் சிறிது நேரத்தில் ஜலதோஷம்,தலைவலிக்கு மருந்தை தேட  வேண்டி வரும் .
  • சுளுக்கு விழுந்த இடத்தில் நல்லெண்ணெய் தடவி நீவி விட்டு வெந்நீரினால் ஒற்றடம் கொடுத்து பின் வெந்நீரை கொண்டு சுளுக்கு விழுந்த இடத்தில் ஊற்றி கழுவ சுளுக்கு சரியாகும்.
Read More...

குல்கந்து

9 comments
தேவையான பொருட்கள்:-
  • காய்ந்த ரோஜா இதழ்கள்                       - 50 கிராம்
  • நெய்                                                               -50 கிராம்
  • கல்கண்டு                                                   - 50 கிராம்
  • தேன்                                                            - 100கிராம்

செய்முறை :-

  • ரோஜா இதழ்களை சிறிது வெந்நீர் விட்டு  ஊற வைத்து 2 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.

  • வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து சூடு பண்ண வேண்டும்.

  • சூடான நெய்யில் ரோஜா இதழ்களை போட்டு நன்கு வதக்க வேண்டும் (அடுப்பை குறைவாக எரிய விட்டு வதக்கவும்) 
  • நன்றாக ஆறியதும் தேனை முதலில் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் கல்கண்டை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். 
  • இதை உடனே பயன் படுத்த முடியாது.
  • ஒரு வாரத்திற்கு பின் நன்கு ஊறிய உடன் பயன் படுத்தலாம். 
  • ஊற, ஊற ருசியும் அதிகமாகும்.
  • தினம் ஒரு ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சாப்பிட ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் உண்டு.
  • ரத்த சோகைக்கும் நல்ல மருந்து.
  • ஊறுகாய் போல் ஊறினால் இதன் மருத்துவ குணம் அதிகரிக்கும். 
  • ஆரம்ப நிலை சீதபேதிக்கு நல்ல மருந்து.
Read More...

வீட்டு மருத்துவம் - 3

9 comments
வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.

அவற்றில் சில...
  • பூண்டு  பல் எடுத்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் வெண்ணெய் கலந்து தீக்காயத்தின் மேல்தடவினால் குணம்ஆகும்.
  • சளிக்கு கற்பூரவள்ளி இலையுடன்(ஒரு இலை) 3 மிளகு சேர்த்து சாப்பிட   சளித்தொல்லை தீரும்.
  • எலுமிச்சம் பழம் சாற்றுடன் தேனையும் இஞ்சி சாறையும்  கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
  • ஒரு கப்  பூசணி துருவல் தயிரில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
  • வறட்டு இருமல் நிற்க பாலில் அரை ஸ்பூன் சுக்குப்பொடி போட்டு 1 ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் நிற்கும்.
    • ஜலதோசம் ,தலைவலி,நீங்க சின்ன வெங்காயம் 4 ,5 ,எடுத்து தண்ணீர் விடாமல் அரைத்து எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து நெற்றியில் பற்று போட குணம் ஆகும் .
    • வாய் புண்ணிற்கு தேங்காய் பாலை 2 ஸ்பூன் வாயில் விட்டு அப்படியே  வைத்திருந்து 2 நிமிடம் ஆனதும் சாப்பிடலாம் .
    • வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து தலையில் தேய்த்து குளிக்க கண் எரிச்சல் போகும்.
    Read More...

    வீட்டு மருத்துவம் - 2

    1 comment
    தேள் கடி :
                     வெற்றிலையுடன் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்கி சிறிது தேங்காய் துண்டுகளை மென்று தின்றால் விஷம் உடனே இறங்கும்
    தலைவலி :
                              இரண்டு வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். 


    Read More...

    வீட்டு மருத்துவம் - 1

    7 comments
                          நம் வீட்டிற்கு அருகில் முலிகை செடிகள் வளர்ந்திருந்தாலும் அதன் மருத்துவ பயன் தெரியாமல் நம்மில்  பலர் இருக்கின்றோம்.வீட்டில் நாம் பயன் படுத்தும் மளிகை பொருட்களிலும் மருத்துவ பயன் தெரியாமல் பலர் இருக்கின்றோம்.நான் பயன்பெற்று பயனடைந்த சில மருத்துவ குறிப்புக்களை இந்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

                                                                       குப்பைமேனி 


    உடலில் படை, பத்து,அலர்ஜியினால் அரிப்பு இவை இருந்தால் குப்பைமேனிசெடியின் இலைகள் ஒரு கைபிடி அளவு எடுத்து கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் ஓரிரண்டு நாட்களில் குணம் காணலாம். 

    Read More...