அறுசுவையில் இமா கொடுத்த கேப்ஸ்யூல் பூக்கள் பார்த்து நான் முயன்ற கிராப்ட் இது.இமா பூக்களின் நடுவே மகரந்தம் இல்லாமல் செய்திருந்தாங்க.அவங்க ஐடியாவில் நான் இதில் அதை முயன்றேன்.சிறு தொட்டி கிடைக்க வில்லை.நூலில் அதை முயன்று தொட்டி செய்தேன்.
தேவையான பொருட்கள்:-
- காலாவதியான கேப்ஸ்யூல் -6
- கேப்ஸ்யூல் உள்ளிருக்கும் துகள்கள் - சிறிது.
- பெவிகால் - 1
- மஞ்சள் நூல் - அரை மீட்டர்
- உபயோகமில்லாத பல்ப் - 1
- பச்சை நிற இன்சுலேசன் டேப் . - தேவையான அளவு
- காட்டன் பட் - 5
செய்முறை:-
- கேப்ஸ்யூலை பிரித்து உள்ளிருக்கும் மருந்து துகள்களை தனியாக பிரித்து வைக்க வேண்டும்.
- காட்டன் பட் நடுவில் வெட்டி இரண்டாக எடுத்து கொள்ளவேண்டும்.
- பிரித்த கேப்ஸ்யூலை சுற்றிலும் ஓரமாக வெட்டி பூ போல் விரித்து விட வேண்டும்.
- பட்ஸில் பெவிகால் தடவி கேப்ஸ்யூல் துகள்களில் புரட்டி எடுத்து காயவிட வேண்டும்.
- பல்பை எடுத்து மேல்புறம் உள்ள பின்னை அகற்றி விட்டு மஞ்சள் நூலை இறுக்கமாக சுற்ற வேண்டும்.
- சுற்றிய நூலில் முழுவதுமாக பெவிகாலை தடவி காயவிட வேண்டும்.
- காய்ந்த பின் பல்பில் இருந்து மஞ்சள் நூலை கையால் ஒரு சுற்று சுற்றி இழுத்தால் தனியாக கழன்று வந்துவிடும். இது பார்க்க தொட்டி போல் இருக்கும்.
- இன்சுலேசன் டேப்பை 2செ.மீ அளவு நறுக்கி அதன் உயர அளவிலேயே மடக்கி வைத்து கொள்ளவேண்டும்.
- காட்டன் பட் தண்டு பகுதியில் இன்சுலேசன் டேப்பை சுற்றி வைக்க வேண்டும்.
- தண்டு பகுதியில் உள்ள துளையில் மெல்லிய கம்பியை நுழைத்து வெட்டி விட வேண்டும்.
- தொட்டியில் தெர்மகோல் வைத்து மடக்கி வைத்த இன்சுலேசன் டேப்பையும்,பூக்களையும் தெர்மகோலில் சொருகி விட வேண்டும்.
- மினியேச்சர் பூத் தொட்டி தயார்.





