வீட்டு மருத்துவம் - 3

9 comments
வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.

அவற்றில் சில...
  • பூண்டு  பல் எடுத்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் வெண்ணெய் கலந்து தீக்காயத்தின் மேல்தடவினால் குணம்ஆகும்.
  • சளிக்கு கற்பூரவள்ளி இலையுடன்(ஒரு இலை) 3 மிளகு சேர்த்து சாப்பிட   சளித்தொல்லை தீரும்.
  • எலுமிச்சம் பழம் சாற்றுடன் தேனையும் இஞ்சி சாறையும்  கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
  • ஒரு கப்  பூசணி துருவல் தயிரில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
  • வறட்டு இருமல் நிற்க பாலில் அரை ஸ்பூன் சுக்குப்பொடி போட்டு 1 ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் நிற்கும்.
    • ஜலதோசம் ,தலைவலி,நீங்க சின்ன வெங்காயம் 4 ,5 ,எடுத்து தண்ணீர் விடாமல் அரைத்து எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து நெற்றியில் பற்று போட குணம் ஆகும் .
    • வாய் புண்ணிற்கு தேங்காய் பாலை 2 ஸ்பூன் வாயில் விட்டு அப்படியே  வைத்திருந்து 2 நிமிடம் ஆனதும் சாப்பிடலாம் .
    • வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து தலையில் தேய்த்து குளிக்க கண் எரிச்சல் போகும்.

    9 comments:

    1. அருமையான வீட்டு வைத்திய குறிப்புகள் நன்றி

      ReplyDelete
    2. அருமையான வீட்டு வைத்தியம்
      நானும் கூடுமான வரை வீட்டு வைத்தியம் தான்

      ReplyDelete
    3. உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
      http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
      இப்படிக்கு
      ஜலீலாகமால்

      ReplyDelete
    4. அருமையான மருந்து குறிப்புகள்.

      ReplyDelete
    5. http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263
      இன்றைய வலைச்சரத்தில் இந்த பதிவு.
      வாழ்த்துக்கள் ராதாராணி.

      ReplyDelete
    6. வணக்கம்
      வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
    7. வலைச்சரம் மூலம் வந்தேன்...
      தள வடிமைப்பு சூப்பர்
      நன்றி ....
      தொடர்கிறேன்...சகோதரி

      ReplyDelete
    8. 27.12.2013 வலைச்சர அறிமுகம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

      ReplyDelete
    9. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
      அன்பு வாழ்த்துகள்.

      மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

      வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

      ReplyDelete

    Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)