என் மகன் பிரதீப்பின் கைவண்ணத்தில் உருவான வண்ண மயில் இது.
தேவையான பொருட்கள்:-
- காட்டன் ரோல் - 1
- காப்பர் வயர் - சிறிது
- காட்டன் பட் -1
- செலோ டேப் - 1
- கட்டிங் ப்ளேயர் - 1
- ஸ்டிக்கர் பொட்டு -2 அட்டை
- குந்தன் ஸ்டோன் - சிறிது
- acrylic colour - ப்ளு,வெள்ளை,மஞ்சள்.
- gauze cloth - சிறிது
- மயில் இறகு - 3
- ரேடியம் பால் - 1
- பெவிகால் - 1
செய்முறை:-
- ரேடியம் பந்தில் முழுவதும் பெவிகால் தடவி ஒரு லேயர் காட்டனை ஒட்டி விட வேண்டும்.
- மயிலின் உடல் பகுதி வருமளவிற்கு காட்டனை சுற்றி கட் பண்ணாமல் தொடர்ந்து தலை பகுதிக்கு காட்டனை கொண்டு வந்து சிறிது காட்டனை விட்டு கட் பண்ணி விட வேண்டும்.
- கட் பண்ணிய காட்டனை உருட்டி உடல் பகுதியோடு சேர்த்து பாண்டேஜ் துணியால் தலை, உடல் அமைப்பு வருமாறு சுற்ற வேண்டும்.
- சுற்றிய துணியை பெவிகால் வைத்து ஒட்டி விட்டு அதன் மேல் ப்ளு கலர் பெயிண்ட் அடித்து விட வேண்டும்.
- மயில் இறகில் கண் போல் உள்ளதை தவிர்த்து இருபுறம் உள்ள முடிகளை கட்பண்ணி எடுக்க வேண்டும்.
- கிராப்ட் சீட்டில் ரோஜா இதழ் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியிலும் அதே போல் கட் பண்ணி இரண்டையும் பெவிகால் கொண்டு ஒட்டி காய்ந்த உடன் இதழின் குறுக்கே மடிப்பு வருமாறு மடக்கி விட வேண்டும்.
- இதுபோல் மூன்று இதழ்கள் செய்து மயிலிறகில் வெட்டியமுடிகளை ஒட்டி விட வேண்டும்.
- இதை உடல் பாகத்தின் பின் பகுதியில் ஓட்ட வேண்டும்.காப்பர் வயரை மயிலின் கொண்டை போன்றும்,கால் விரல்களை போன்றும் வளைத்து கட் பண்ண வேண்டும்.
- காட்டன் பட் எடுத்து நடுப்பகுதியில் கட் பண்ண வேண்டும்.இது இரண்டு பகுதிகளாக ஒரு முனை துளையோடும் மறுமுனை பஞ்சு உருண்டையோடும் இருக்கும்.
- பஞ்சு உருண்டை உள்ள முனையை கால்களாக பாவித்து வயிற்றுப் பகுதியின் அடியில் ஓட்ட வேண்டும்.
- இரண்டையும் ஒட்டிய பின் மறு முனையில் உள்ள துளையில் விரல்களாக வெட்டிய வயரை செருகி விட வேண்டும்.
- ஒட்டிய கால்கள் பிரிந்து விடாமல் இருக்க சிறிது பாண்டேஜ் துணியை கட் பண்ணி வயிற்று பகுதியோடு சேர்த்து ஓட்ட வேண்டும்.
- கிராப்ட் சீட்டில் சிறகுகள் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியை அதே அளவில் வெட்டி இரண்டையும் பெவிகால் வைத்து ஒட்டி விட வேண்டும்.
- இதன் மேல் லைட் ப்ளு கலரும்,மற்றொரு சிறகில் ஆரஞ்சு கலரும் அடித்து இவை இரண்டையும் உடலின் மேல் பாகத்தில் இரு புறமும் ஒட்டி விட வேண்டும்.
- தலையில் கொண்டை போன்று வளைத்த வயரை குத்தி விட்டு வெள்ளை,கருப்பு பெயிண்ட் வைத்து கண்கள் வரைந்து முடிக்க வேண்டும்.
- பச்சை நிற குந்தன் கற்களை பின்புறம் வைத்துள்ள தோகையில் அங்கங்கே இடைவெளி விட்டு ஒட்டி விட்டால் வண்ண மயில் ரெடி.
Beautiful! Peacock looks ssssssooooo real! Great job Pradeep! :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவண்ணமயில் நல்ல அழகோ அழகு.
ReplyDeleteசெல்வன் பிரதீப்புக்கு என் அன்பான வாழ்த்துகள்.
பகிர்வுக்கு பாராட்டுக்கள் + நன்றிகள்.
அருமை :) :) :)
ReplyDeleteவண்ண மயில் அழகு சகோ
ReplyDeleteஅழகு மயில் சூப்பர்.கைவேலை அருமை.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅழகு பாராட்டுக்கள் தோழி.
ReplyDeleteஆஹா .... சூப்பர்... பாராட்டுக்கள் சகோதரி !
ReplyDeleteபதிவு வெளியிட்ட உடன் முதலாவதாக வந்து கருத்தை சொன்னதற்கு மகிழ்ச்சி!நன்றி மகி..
ReplyDeleteபகிர்விற்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா..
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ..
ReplyDeleteகருத்திற்கு நன்றி சகோ..
ReplyDeleteபகிர்விற்கும் பாராட்டிற்கும் நன்றி ஆசியா..
ReplyDeleteவருகைக்கு நன்றி சசி..
ReplyDeleteபாராட்டிற்கு மிக்க நன்றி தனபாலன் சார்..
ReplyDeleteவாவ்..குட்டி மயில் என்னே அழகு!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சாதிகா..
ReplyDeleteஅருமை அக்கா.நீங்கள் தான் கைவேலைகள் நிறைய செய்வீர்கள் என்று பார்த்தால் உங்கள் மகன் பிரதீப்பின் கைவண்ணத்தில் உருவான வண்ண மயில் உங்களுக்கு இன்னும் பெருமை சேர்த்து விட்டது அக்கா.
ReplyDeleteஅக்கா என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பாருங்கள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி காத்துகொண்டிருக்கிறது வாருங்கள்.....
ReplyDeleteமுதல் விருதை பெற்றுக் கொண்டேன் விஜி...மிக்க மகிழ்ச்சி.நன்றி!
ReplyDeleteவாவ்! சுப்பர்ப் குட்டிப்பையா! சொல்ல இயலாத அழகு மயில்.
ReplyDeleteகுட்டி 16 அடி பாய்வது என்பது இதுதான். ;) பாராட்டுக்கள்.
கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி இமா.
ReplyDelete