
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து ஒரு ஈடுபாட்டோட வீட்டில் ஆரம்பித்த தொட்டி தோட்டம் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் தோட்டம் போட ஐடியா வந்தது. பஸ், லாரி கழுவிய தண்ணீர் வீணாகாமல் அது போகும் பாதையில் தோட்டம் அமைத்தேன். ஆயில் சேர்ந்த தண்ணீரால் விளைச்சல் கம்மியாகி போனது. வீட்டிற்கு தேவையான காய் வந்தது. பூசணி...