ரவா வெண் பொங்கல்
- ரவை - கால் கிலோ
- பாசிப்பருப்பு - 50கிராம்
- மிளகு - 1ஸ்பூன்
- சீரகம் - 1ஸ்பூன்
- நெய் - 100 கிராம்
- முந்திரிபருப்பு - 25 கிராம்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
- ரவையை 1ஸ்பூன் நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் 2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் கழுவிய பருப்பை போட்டு வேக விடவேண்டும்.
- பருப்பு நன்றாக வெந்ததும் அதில் உப்பு சேர்த்து,50கிராம் நெய்யையும்,3தம்ளர் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.
- தண்ணீரும், பருப்பும் நன்கு கொதிக்கும் போது வறுத்த ரவையை அதில் தூவி கட்டி இல்லாமல் கிளறி விட வேண்டும்.
- மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடி செய்து கொள்ளவேண்டும்.
- வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து மீதி 50 கிராம் நெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும்.
- நெய் சூடான உடன் அதில் மிளகு, சீரக தூளை போட்டு அடுத்து உடைத்த முந்திரியை போட்டு கலந்து ரவை கலவையில் கொட்டி நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.
- ரவை வெண்பொங்கல் தயார்.
கொத்து ப்ரெட்
தேவையான பொருட்கள்:-
- ப்ரெட் - 6
- முட்டை - 2
- பெரிய வெங்காயம் - 1
- பூண்டு - 3 பல்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
- உப்பு - சிறிது
- எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:-
- பிரெட்டை ஒன்றிரண்டாக பிய்த்து தயாராக வைத்து கொள்ளவும்.
- முதலில் பூண்டையும்,வெங்காயத்தையும்,பொடியாக வெட்ட வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டை முதலில் போட்டு பொன்னிறமாக வதங்கிய பின் வெங்காயத்தை போட்டு வதக்க வெண்டும்.
- அடுத்து மிளகாய் பொடி,மிளகு பொடியை தூவி நன்றாக பிரட்டி விடவேண்டும்.
- முட்டையை உடைத்து வதக்கிய கலவையின் மேல் ஊற்றி சிறிது உப்பை சேர்த்து மேலும் நன்றாக பிரட்டி விடவேண்டும்.
- ரெடியாக உதிர்து வைத்திருக்கும் பிரெட் துண்டுகளை போட்டு அனைத்து கலவைகளும் ஒன்றாக செரும்படி நன்கு வதக்கி இற்க்கி விட வேண்டும்.
மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:-
- மீன் - அரை கிலோ
- சின்ன வெங்காயம் - 10
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மசால் தூள் - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- தேங்காய் - தேவையான அளவு
- பூண்டு - 5 பல்
- பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
- புளீ - பெரிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- கடுகு,உளுந்து - 1 ஸ்பூன்
செய்முறை:-
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெங்காயம்,கீறிய மிளகாய்,கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
- வதக்கிய பொருட்களுடன் மசால் பொடி,மிளகாய் பொடி சேர்த்து வதக்கி புளியை நீரில் கரைத்து வடிகட்டி வதக்கிய பொருட்களுடன் சேர்த்து கொதிக விட வேண்டும்.
- இறுதியில் பூண்டு,தேங்காய்,பெருஞ்சீரகம்,சேர்த்து அரைத்து குழம்புடன் சேர்க்க வேண்டும்.
- கழுவி வைத்த மீன் துண்டுகளை குழம்புடன் சேர்த்து சிறிது உப்பு போட்டு மெதுவாக கிளறி மீன் வெந்த பின் குழம்பை இறக்கி வைக்க வேண்டும்.
மீன் வறுவல்
தேவையான பொருட்கள் :-
செய்முறை :-
Read More...
- மிளகு பொடி - 1ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1ஸ்பூன்
- மஞ்சள்பொடி - 1ஸ்பூன்
- சோள மாவு - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 200 மில்லி
செய்முறை :-
- கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்புடன் தேவையான அனைத்து பொடிகளையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடி அனைத்தும் மீன் துண்டுகளில் பரவுமாறு பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற விடவேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் மீன் துண்டுகளி போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.
- சுவையான மீன் வறுவல் தயார்.
சுரைக்காய் கூட்டு
- சுரைக்காய் - அரை கிலோ
- பாசிப்பருப்பு -நூறு கிராம்
- பச்சை மிளகாய் - 5
- சின்ன வெங்காயம் - 10
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- தேங்காய் - சிறிது
- தக்காளி - சிறியது ஒன்று
- உப்பு - சிறிது
- கடுகு,உளுந்து - ஒரு ஸ்பூன்
- எண்ணெய் - சிறிது
செய்முறை :-
- சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
- தக்காளியை பொடியாக வெட்டி கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலையை ஒவ்வொன்றாக போட்டு வதக்க வேண்டும்.
- அடுத்து தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
- இதனுடன் வெட்டிய சுரைக்காய்,கழுவிய பாசிப்பருப்பு சேர்த்து தேவையான நீர் ஊற்றி மஞ்சள் பொடி சேர்த்து வேக விட வேண்டும்.
- காயும்,பருப்பும் முக்கால் பதம் வெந்த உடன் தேங்காய் சீரகத்தை அரைத்து சேர்க்க வேண்டும்.
- நீர் வற்றும் வரை அதே நேரம் தீய்ந்து விடாமல் அடிக்கடி கிளற வேண்டும்.
- இறுதியில் உப்பை சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.

