கார்ன் சிக்கன்

17 comments
தேவையான பொருட்கள் :-
  • சிக்கன் - அரைகிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
  • கார்ன் ப்ளார் - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கார்ன் சிப்ஸ் - 50 கிராம்
  • முட்டை - ஒன்று
செய்முறை :-
  • சிக்கனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஊறிய சிக்கனை போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்.
  • கார்ன் சிப்சை மிக்சியில் பொடி செய்து வைத்து கொண்டு வறுத்த சிக்கனை சூடாக இருக்கும் போதே சிப்ஸ் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்க வேண்டும்.
  • கார்ன் சிக்கன் தயார்.

Read More...

Quilling - Swan

24 comments
ரொம்ப நாளா க்வில்லிங் செய்ய முயற்சித்து அந்த கிட் கிடைக்காம க்வில்லிங் சரியா வரல்லை.. நம்ம ஏஜ்சலின் சொன்னாங்க டூத் பிக் முனை பகுதியை கீற்றாக வெட்டி பேப்பருக்கு கிரிப்பாக வைத்து எளிதாக க்வில்லிங் செய்யலாம்னு சொன்னாங்க . அதே முறையை பின்பற்றி நான் செய்த அன்னப்பறவை. நன்றி ஏஜ்சலின்... :)


Read More...

குந்தன் கோலம்

12 comments
அட்டையில் கோலம் வரைந்து பெவிகால் வைத்து குந்தன் கற்களை  கலர் கலராக ஓட்டினால் குந்தன் கோலம் ரெடி. இதை கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்து ஒட்டி பூஜை அறையில் வைக்கலாம். சுவர் அலங்காரமாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாக தரலாம். ஒரே கோலத்தை 5,6, எண்ணிக்கையில் செய்து அதை அளவில் பெரிய அட்டையில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு பெரிய கோலமாக ஒட்டி விழா காலங்களில் பயன் படுத்தலாம். நான் இதில் சுற்றிலும் கிளிட்டர் பேப்பரை ஒட்டி அலங்கரித்துள்ளேன்.

Read More...

வெள்ளை புலாவ்

19 comments
தேவையான பொருட்கள்:-
  • அரிசி - 500 கிராம்
  • தயிர் - 100 கிராம்
  • சின்ன வெங்காயம் - 20
  • புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது)
  • பட்டை - ஒன்று
  • கிராம்பு - 3
  • அன்னாசி பூ - 2
  • பிரிஞ்சி இல்லை - 1
  • ஏலக்காய் - 2
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  • நெய் - 50 கிராம்
  • முந்திரி - 10 கிராம்
  • பச்சை மிளகாய் - 5
  • தேங்காய் பால் - 100 மில்லி
செய்முறை:-
  • அரிசியை நன்றாக கழுவி 10நிமிடம் ஊறவிடவேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி காய்ந்த உடன் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, நசுக்கிய ஏலக்காய், போட்டு வதக்க வேண்டும்.
  • அடுத்து சின்ன வெங்காயம், வெட்டிய பச்சை மிளகாய்,போட்டு வதக்கி பின் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
  • இதனுடன் தயிரையும், தேங்காய் பாலையும் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு புதினா இலைகளை போட்டு 500கிராம் அரிசிக்கு தேவையான நீரை (4 டம்ளர் ) விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதித்த  பின் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் வந்த உடன் இறக்கி விட வேண்டும்.
  • 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சிறிது நெய்யில் முந்திரியை போட்டு வறுத்து புலாவில் கொட்டி கிளறி விட வெள்ளை புலாவ் தயார்.
  • குருமா, ரெய்தா உடன் பரிமாற சுவையாக இருக்கும்.
Read More...

கார் ஹேங்கிங்

13 comments
எப்பொழுதோ வாங்கிய உல்லன் நூல், பாசி, ஜமிக்கி அனைத்தும் உபயோகிக்காமல்... உபயோகிக்காமல் என்ன கிராப்ட் ஒர்க் செய்ய நேரம் இல்லாமல் இன்று திடீர்னு ஐடியா வந்தது.. முன்பு பெரிய 2 லிட்டர் பாட்டிலில் wind chime செய்து பார்த்தேன்.. அது பாசி மணி வெயிட் தாங்காமல் கீழ் நோக்கி ரொம்ப இழுத்ததால் பாதியிலே முடிக்காமல் விட்டுவிட்டேன். இன்று குட்டியூண்டு பாட்டில் கண்ணில் பட கார் ஹேங்கிங் செய்து பார்த்தேன். அரை மணி நேரத்தில் முடித்தாயிற்று.
தேவையான பொருட்கள் :-
  • குட்டி பிளாஸ்டிக் பாட்டில் - 1
  • கிரிஸ்டல் பாசி - ஏதாவது இரண்டு கலர்
  • பிளாஸ்டிக் பூ - 10
  • சிஷர் - 1
  • வயர் - ஒரு ரோல்
  • ஊசி - 1
  • உல்லன் பாம் பாம் - ஒன்று (சிறிதாக செய்தது )
Read More...

தயிர் வடை

8 comments
தேவையான பொருட்கள் :-
வடை செய்ய :-
  • உளுந்து - 100 கிராம்
  • மிளகு - அரை ஸ்பூன்
  • உப்பு - சிறிது
  • தயிர் - 300 மில்லி
மிக்ஸர் செய்ய :-
  • கடலை மாவு - 100கிராம்
  • அரிசி மாவு - 3 ஸ்பூன்
  • பெருங்காய பொடி - சிறிது
  • உப்பு - சிறிது
  • கடலை பருப்பு - 50 கிராம்
  • கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  • மல்லி தழை - சிறிது
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை :-
  • கடலை பருப்பை கழுவி விட்டு நீரில் அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.
  • கடலை மாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் விட்டு கட்டியாக முறுக்கு மாவு பதத்தில் முதலில் பிசைய வேண்டும்.
  • அதை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பிழிய வேண்டும்.
  • பாதி மாவு பிழிந்த உடன் மீதி மாவில் மேலும் சிறிது நீர் சேர்த்து தளர கரைத்து சூடான எண்ணெய்யில் பூந்தி கரண்டியை வைத்து மாவை தேய்த்து கார பூந்தியாக எடுக்க வேண்டும்.
  • அதே சூடான எண்ணெய்யில் ஊறிய கடலை பருப்பை போட்டு கோல்டன் கலர் வந்தஉடன் எடுத்து ஓமப்பொடி, காரபூந்தியில் போட்டு கருவேப்பிலையையும் எண்ணெய்யில் போட்டு முறுகலாக எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
  • இறுதியில் அனைத்தையும் ஒரு சேர கைகளால் பிசைந்து நொறுக்கினால் மிக்சர் தயார்.
  • வடை செய்ய ஊறிய உளுந்தை நைஸாக அரைத்து அதனுடன் உப்பையும், தூளாக்கிய மிளகையும் சேர்த்து பிசைந்து வடைகளாக எண்ணெய்யில் சுட்டு எடுக்க வேண்டும்.
  • பரிமாறும் பொழுது தட்டில் இரண்டு வடைகளை வைத்து அதன் மேல் 4 கரண்டி தயிரை ஊற்றி மிக்சரை அதன் மேல் வைத்து மிளகாய் பொடி தூவி சிறிது மில்லி இலைகளை பொடியாக நறுக்கி மேலே வைத்து பரிமாற வேண்டும்.
  • தயிர் வடை தயார்.
Read More...

அவல் கொழுக்கட்டை

17 comments
கொழுக்கட்டை பிள்ளையாருக்கு ரொம்ப பிடித்தமான நைவேத்யம். அதை பல விதத்துல செய்து பல பெயரும் வைப்பாங்க. சின்ன வயசுல கொழுக்கட்டையை பத்தி ஒரு பாட்டு நாம எல்லாம் கேள்வி பட்டிருப்போம்.
சின்ன பிள்ளைங்க இந்த பாட்டை பாடிக்கிட்டே விளையாடுவாங்க.. அந்த பாட்டு..
மா கொழுக்கட்டை
மஞ்ச கொழுக்கட்டை
மாமியார் தந்தார்
பிடி கொழுக்கட்டை
அத்தை தந்தார்
அவல் கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்திக்கு பண்ணிய கொழுக்கட்டையை போட்டோ எடுத்து வைத்தாச்சு. ஆனா எழுத தட்டினது அரை குறையா முடிக்க முடியாம தள்ளி போய்கிட்டே இருந்தது. இன்னிக்கு முழுசும் முடித்து கொழுக்கட்டை பதிவை தேத்தியாச்சு..:)
தேவையான பொருட்கள் :-
  • அவல்                     - கால் கிலோ
  • பிட்டரிசி மாவு     - 100 கிராம் 
  • நெய்                       - 1 ஸ்பூன் 
  • வெல்லம்               - 200 கிராம் 
  • தேங்காய் துருவல் - சிறிது 
செய்முறை :-
  • அவலை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக கழுவி வடிகட்டி 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல்,பிட்டரிசி மாவு , நெய்,தேங்காய் துருவல் அனைத்தையும் போட்டு ரெடியாக வைக்க வேண்டும்.
  • வெல்லத்தை முழ்கும் அளவு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை பாகு வைத்து வடிகட்டி மீண்டும் காய்ச்சி இறக்க வேண்டும்.
  • வெல்ல கரைசலை பாத்திரத்தில் உள்ள அவல் கலவையில் ஊற்றி கரண்டி வைத்து கிளற வேண்டும்.
  • கட்டியாக கிளறிய அவல் கலவையை கொலுகட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • அவல் கொழுக்கட்டை தயார்.
Read More...