தேவையான பொருட்கள்:-
- வெள்ளரிகாய் - கால் கிலோ
- எலுமிச்சம் பழம் - பெரியது ஒன்று
- மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
- உப்பு - 2ஸ்பூன்
செய்முறை:-
- வெள்ளரி காய்களை நன்கு கழுவி ஈரம் போக துடைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் வெள்ளரியை நீள நீளமாக வெட்டி போட வேண்டும்.
- வெட்டிய காயின் மேல் மிளகாய் பொடி உப்பை போட்டு அதன் மேல் எலுமிச்சையை பிழிந்து நன்றாக குலுக்கி விட வேண்டும்.
- 5 நிமிடத்தில் நீர் விட ஆரம்பிக்கும்.அரை மணி நேரம் கழித்து நன்றாக பிரட்டி விட்டு ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும்.
- இது 2 வாரத்திற்கு நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வினிகர் சேர்த்து கொள்ளவேண்டும்.














