ஒரு ஞானி தன் சீடருடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய போயிருந்தார். அவ ஊர் மக்கள் ஞானியை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள் . அவ் ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்லும் போது ஞானி இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.மறுநாள் வேறு ஊருக்கு சீடருடன் சென்றார். அங்கு மக்கள் அவரை மதிக்கவில்லை. அவரின் உபதேசத்தை கேட்கவில்லை. அவ் ஊரை விட்டு சென்ற ஞானி இறைவனிடம் இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார். சீடர் ஒன்றும் புரியாமல் நம்மை மதித்து மரியாதை செய்த மக்களை பிரிய சொல்கிறீர்கள், நாகரீகம் தெரியாத இம் மக்களை அவர்கள் பிரியாமல் இவ் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று தாங்கள் கூறும் காரணம் எனக்கு விளங்க வில்லை என்று சீடர் கேட்டார். அதற்கு ஞானி நல்ல மனிதர்கள் நான்கு திசைகளில் பிரிந்து போனால் அவர்களிடம் பழகும் தீய மனிதர்கள் நல்லவர்களாக மாறுவதற்கு வழி கிடைக்கும், ஆனால் ஒரே ஊரில் உள்ள தீய மனிதர்கள் பிரிந்து போகாமல் ஒரே இடத்தில் இருந்தால் அவர்களிடம் உள்ள தீய குணங்கள் மற்றவர்களிடம் பரவாமல் இருக்கும் . அதனால்தான் இவ்வாறு கூறினேன என்றார்.
இந்த கதையை படித்து விட்டு என் மகன் சின்னவர் என்னிடம் கேட்ட கேள்வி அம்மா...பூவோட சேர்ந்த நாறும் மணம் பெறும்.. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.. அதெப்பிடி இந்த கதையால இந்த பழமொழியோட லாஜிக் எங்கியோ உதைக்குதே..? ஏன் அந்த ஊரில் இருந்து பிரிந்து செல்லும் நல்லவர்கள் கெட்டவர்களுடன் சேர்ந்து கெட்டவர்களாக மாறிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? என்ற கேள்வியை என் முன் வைத்தார். எனக்கு பதில் தெரியல்லை... படிக்கிற நீங்க என்ன சொல்றீங்க...?












