அக்கரை பச்சை

17 comments
காலையில எழுந்தவுடனே பகவானே இன்னைக்கு நாள் நல்லா விடியனும்னு நல்ல சிந்தனைய நினைக்கிற ஆட்களை விட காபியை நினைத்து கொண்டே எழும்புற ஆட்கள் தான் 90% இருக்காங்க.. இதுல பெட் காபின்னு ஒரு நாமகரணம் அதுக்கு வச்சிட்டாங்க.. அதுக்கு அப்பறம் குடிக்கிற காபிக்கு டீ பிரேக்,காபி பிரேக்னு எதோ ஒரு பேர் வச்சி இந்த காபி குடிக்கு அடிமையானவங்க நிறைய பேர் நம்ம நாட்டிலதாங்க இருக்காங்க.. இந்த குடி காபியோட போச்சான்னா இல்லை,சாராயம்,ஒயின் பீர்,விஸ்கின்னு பலதரப்பட்ட குடிக்கு அடிமையானவங்க தான் இருக்காங்க.ஆக மொத்தம் இந்திய குடிமகனா யாரும் இல்லை.. என்னதான் சொல்ல வர்றாங்க.. மேட்டர் ஒன்னும் புரியலைன்னு நீங்க சொல்றது என் மைன்ட் வாய்ஸ்கு கேட்குது..ஆமாங்க நம்ம மக்கள் அயல் நாட்டு மோகத்தில் அடிமையானது முதன் முதலா இந்த காபி,டீ குடிக்க பழக ஆரம்பித்ததுல இருந்துதான் தொடங்கி இருக்கும்.. என் சிறுவயதில் கேள்விப்பட்ட விஷயம் இது. என் தாத்தா காலையில எழும்போதே நகைசுவையா பிளாக்&வொயிட் இன்னும் போடலையான்னு கேட்பார்.. அதுக்கு எங்க அம்மா சொல்வாங்க பிளாக் இறங்கி ரெடியா இருக்கு.. வொயிட் கறக்க இன்னும் ஆள் வரல்லைன்னு சொல்வாங்க .உடனே தாத்தா இவன் என்ன தினம் லேட்டா கறக்க வர்றான்னு புலம்பிட்டு தெருமுனையில இருக்கிற டீ ஸ்டாலுக்கு போய் காபி குடிச்சிட்டு வந்துடுவார்.. அடுத்த அரை மணி நேரத்தில வீட்டு காபியும் குடிப்பார்.. ஏன் தாத்தா பிளட் சுகர் உங்களுக்கு இருக்கிறப்ப காபி குடிக்கிறத விட்டுறலாம்மில்லன்னு கேட்டா.. முடியலையே, இந்திய சுதந்திரத்துக்கு முன்னாலே நம்ம ஜனங்களுக்கு காபி,டீன்னா என்னன்னு தெரியாது.. இந்த வெள்ளைக்காரன் அப்ப தினமும் இலவசமா வீட்டுக்கு வீடு வந்து காபிய சுடசுட ஊத்திட்டு போவான்.. (இலவச திட்டம் கூட வெள்ளைக்காரன் உபயத்துலதான்  நம்ம நாட்டுக்கு வந்தது போல) காசா.. பணமா.. தினமும் வீட்டு வாசல்ல கிடைக்குதேன்னு நம்ம ஆளுங்களும் ருசி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. 10,15 நாள் கழித்து வெள்ளைக்காரன் தெருமுனைல காபிய வேன்ல கொண்டுவந்து ஒரு பெல் அடிப்பானாம்.. எல்லாரும் தெருமுனைக்கு போய் காபிய வாங்கிட்டு வந்து குடிச்சாங்கலாம்.. கொஞ்ச நாள்ல வேன் வராம இருக்கவும் நம்ம ஜனங்க காபிக்கு ஏங்கி தவிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. (டார்வின் சிஸ்டம் தான்) அதுக்கு பிறகு காபித்தூளை வெள்ளைக்காரன் விற்க ஆரம்பிச்சான்.. இந்தியால விளையாத காபிய அவங்க நாட்டில இருந்து விதை கொண்டு வந்து விதைத்து காபி உற்பத்தி பண்ணி இந்திய ஜனங்களுக்கே விற்க ஆரம்பிச்சுட்டான்னு காபிக்கு அடிமையான கதைய சொன்னார்.. பாருங்க,நம்ம மண்ணுல விதைத்து உற்பத்தி பண்ணி நம்மகிட்டயே விற்று சம்பாதித்து இருக்காங்க.. தெல்லாம் சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது.. சுதந்திரத்துக்கு பிறகும் நம்ம மக்கள் ஏன் அயல் நாட்டு மோகத்தில ஊறி போய் இருக்காங்கன்னு புரியல.. அவங்க நாட்டு சீதோஷ்ணநிலைக்கு அவங்க பீர்,விஸ்கின்னு குடிக்கிறாங்க.. ஆடை அணியும் விஷயத்திலயும் கோட் போடுறது,டை கட்டுறதுன்னு அவங்க சீதோஷ்ணத்துக்கு ஏற்ற மாதிரி. அணியுறாங்க.. இதனால அவங்க ஆரோக்கியத்துக்கு பாதிப்பு வராது. ஆனா நம்ம ஆளுங்க இதைபற்றி யோசிக்காமல் வெளிநாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி தானும் கெட்டு தன்னை சுற்றி இருக்கிறவர்களையும் மாற்றி விடுகிறார்கள்.. பள்ளி சீருடையில் இருந்து தினமும் அணியும் ஆடை வரை வெளிநாட்டு மோகம்தான் தலை விரித்து ஆடுகிறது.. ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்க சீருடை தேவைதான்.. டை,சட்டை, சட்டையின் மேல் ஒரு சர்தாரி கோட்,ஷு,சாக்ஸ் தேவைதானா..? நல்ல வேளை தொப்பி போடணும்னு இதுவரை யாரும் சொல்லல.. இப்பிடியெல்லாம் படித்து பட்டம் வாங்கி நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு உழைக்கிறாங்களான்னா அதுவும் கிடையாது.. படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாம வெளிநாட்டுக்குதான் ஓடுறாங்க.. இதுல பசுமை புரட்சி.. தொழில் புரட்சின்னு கோஷம் வேறு போடுறாங்க.. இந்த புரட்சியை பற்றி அடுத்த பதிவில போடுறேன்.. 

17 comments:

  1. பதிவு நல்லா இருக்குங்க, அது ஏன் //Labels: புலம்பல்//னு வைச்சீங்க? :)))))

    ReplyDelete
  2. ஆமாம் அக்கா சரியாக கூறினீர்கள்.. காபி டீ போன்று இன்றைக்கு மற்றவைகளும் வந்துவிட்டன நம்மக்களிடம்... அருமையான பகிர்வு.....

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி மகி.மன ஆதங்கத்திற்கு மற்றொரு பெயர் புலம்பல்.

    ReplyDelete
  4. என்னக்க இப்பிடி சொல்லிபுட்டீங்க!

    நாங்க என்ன வேணும்னா வெளிநாட்டுக்கு போறோம். உள்ளூர்ல ஒரு பய வேலை கொடுக்க மாட்றான் (நம்மளை பத்தி தெரிஞ்சிருப்பான் போல, நாம ஒன்னத்துக்கும் ஆக மாட்டோம்னு ஹி ஹி). எங்களுக்கு வெளிநாட்ல தான் கேணையன் சிக்கிருக்கான் நாங்க என்ன செய்யது :D :D :D

    ReplyDelete
  5. தெருவுக்கு ரெண்டு காபி,டீ கடை இருக்கிற மாதிரி இப்பல்லாம் தெருவுக்கு ஒரு ஒயின் ஷாப் திறந்துட்டாங்க..இதனால நல்ல மனுஷங்களை அடையாளம் காண முடியல்லை..வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க மகிழ்ச்சி விஜி.:)

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு ! வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  7. வருகைக்கு மகிழ்ச்சி தம்பி வரலாற்று சுவடுகள்..நம்ம நாட்டுல எல்லாரும் அறிவாளிகள், கேனையன் யாரும் கிடையாதுன்னு நீங்களே சொல்லிட்டிங்க தம்பி...அறிவு,உழைப்பு,தன்னம்பிக்கை,மூன்றையும் வைத்து இளைய சமுதாயம் நம்ம நாட்டிலேயே முன்னேறி காட்டலாமே .:)

    ReplyDelete
  8. கருத்திற்கும்,வருகைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

    ReplyDelete
  9. ராதா ராணி இனி பத்தி பிரித்து எழுதுங்களேன் .படிப்பதற்கு சுலபமாக இருக்கும்:)

    ReplyDelete
  10. இப்பிடியெல்லாம் படித்து பட்டம் வாங்கி நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு உழைக்கிறாங்களான்னா அதுவும் கிடையாது.. படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாம வெளிநாட்டுக்குதான் ஓடுறாங்க.. இதுல பசுமை புரட்சி.. தொழில் புரட்சின்னு கோஷம் வேறு போடுறாங்க.
    என் ஆதங்கத்தை தங்கள் வரிகளில் கண்டேன் தோழி தொடருங்கள்.

    ReplyDelete
  11. எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாக
    எளிமையாகச் சொல்லிப்போகிறீர்கள்
    அதிகம் யோசிக்கவைத்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சுதந்திரத்துக்கு பிறகும் நம்ம மக்கள் ஏன் அயல் நாட்டு மோகத்தில ஊறி போய் இருக்காங்கன்னு புரியல.
    ஆதங்கமான பகிர்வுகள்..

    ReplyDelete
  13. நல்ல பயனுள்ள விஷயங்களைச் சொல்லி சிந்திக்க வைத்துள்ளீர்கள். அயல் நாட்டு மோகம் தான் எங்கும் எதிலும் காணமுடிகிறது என்கிற ஆதங்கம் தெரிவிக்கும் கட்டுரை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_27.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  15. வருகைக்கு மிக்க நன்றி அருள் சார் .

    ReplyDelete
  16. அறியபடுத்தியமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)