வெண்டைக்காய் தீயல்

16 comments
தேவையான பொருட்கள் :-
  • வெண்டைகாய்                                   -அரை கிலோ
  • சின்ன வெங்காயம்                           - 10
  • மசால் பொடி                                       -  2ஸ்பூன்
  • மிளகாய் பொடி                                   - 1ஸ்பூன்
  • சர்க்கரை                                               - 2 ஸ்பூன்
  • எலுமிச்சை                                          - அரை மூடி
  • உப்பு                                                        - சிறிது
  • எண்ணெய்                                          - தேவையான அளவு
  • கடுகு, உளுந்து                                 - 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை                               - சிறிது
செய்முறை :-
  • வெண்டை காயை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது  எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய காயை போட்டு விழு விழுப்பு நீங்க வதக்க வேண்டும்.
  • காயை வதக்கும் போதே உப்பை சேர்த்து  வதக்கினால் விழு விழுப்பு தன்மை விரைவில் மாறி காய் உதிரியாக இருக்கும்.
  • உதிரியாக காய் வதங்கிய உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும்வரை  வதக்க வேண்டும்.
  •  அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து சிறிது எண்ணெய்  ஊற்றி  சூடானதும் கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் கருவேப்பிலை சேர்த்து  வதக்கிய காயை போட்டு  அதனுடன் மிளகாய் பொடி,மசாலா பொடி சேர்த்து சுருள பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  •  சேர்த்த தண்ணீர்  கொதித்து  வற்றும் பொது  சர்க்கரையை  சேர்த்து அதனுடன் எலுமிச்சையை பிழிந்து  விட வேண்டும்.

  • அனைத்தும்  நன்றாக சேர்ந்து கொதித்து சுருளும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். தீயல்  தயார்.
Read More...

சுண்டல்

12 comments
தேவையான பொருட்கள்:-
  • பாசிப்பயறு                         - 200கிராம்
  • தேங்காய் துருவல்            -சிறிது
  • மாங்காய்                              -  அரை காய்
  • மிளகாய் வற்றல்                - 3
  • கடுகு,உளுந்தம்பருப்பு      -     1ஸ்பூன் 
  • கருவேப்பிலை                     -சிறிது 
  • உப்பு                                          -     சிறிது 
செய்முறை:-
  • பாசிப்பயறை  நன்றாக கழுவி 3டம்ளர் தண்ணீர்  விட்டு குழையாமல் வேகவைத்து  எடுக்க வேண்டும்.
  • அடுப்பில்  வாணலியை வைத்து சிறிது எண்ணெய்  விட்டு கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வற்றலை ஒடித்து போட்டு அதனுடன் கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கிய  மாங்காய்,துருவிய தேங்காய்,வேக வைத்த  பாசிபயறு,சேர்த்து தேவையான  உப்பையும்  சேர்த்து நன்றாக  பிரட்டி எடுத்து வைக்க  வேண்டும்.
  • சுண்டல் தயார். இது  சர்க்கரை  நோயாளிகளுக்கு  ஏற்ற மாலை நேர சிற்றுண்டி
Read More...

அக்கரை பச்சை

17 comments
காலையில எழுந்தவுடனே பகவானே இன்னைக்கு நாள் நல்லா விடியனும்னு நல்ல சிந்தனைய நினைக்கிற ஆட்களை விட காபியை நினைத்து கொண்டே எழும்புற ஆட்கள் தான் 90% இருக்காங்க.. இதுல பெட் காபின்னு ஒரு நாமகரணம் அதுக்கு வச்சிட்டாங்க.. அதுக்கு அப்பறம் குடிக்கிற காபிக்கு டீ பிரேக்,காபி பிரேக்னு எதோ ஒரு பேர் வச்சி இந்த காபி குடிக்கு அடிமையானவங்க நிறைய பேர் நம்ம நாட்டிலதாங்க இருக்காங்க.. இந்த குடி காபியோட போச்சான்னா இல்லை,சாராயம்,ஒயின் பீர்,விஸ்கின்னு பலதரப்பட்ட குடிக்கு அடிமையானவங்க தான் இருக்காங்க.ஆக மொத்தம் இந்திய குடிமகனா யாரும் இல்லை.. என்னதான் சொல்ல வர்றாங்க.. மேட்டர் ஒன்னும் புரியலைன்னு நீங்க சொல்றது என் மைன்ட் வாய்ஸ்கு கேட்குது..ஆமாங்க நம்ம மக்கள் அயல் நாட்டு மோகத்தில் அடிமையானது முதன் முதலா இந்த காபி,டீ குடிக்க பழக ஆரம்பித்ததுல இருந்துதான் தொடங்கி இருக்கும்.. என் சிறுவயதில் கேள்விப்பட்ட விஷயம் இது. என் தாத்தா காலையில எழும்போதே நகைசுவையா பிளாக்&வொயிட் இன்னும் போடலையான்னு கேட்பார்.. அதுக்கு எங்க அம்மா சொல்வாங்க பிளாக் இறங்கி ரெடியா இருக்கு.. வொயிட் கறக்க இன்னும் ஆள் வரல்லைன்னு சொல்வாங்க .உடனே தாத்தா இவன் என்ன தினம் லேட்டா கறக்க வர்றான்னு புலம்பிட்டு தெருமுனையில இருக்கிற டீ ஸ்டாலுக்கு போய் காபி குடிச்சிட்டு வந்துடுவார்.. அடுத்த அரை மணி நேரத்தில வீட்டு காபியும் குடிப்பார்.. ஏன் தாத்தா பிளட் சுகர் உங்களுக்கு இருக்கிறப்ப காபி குடிக்கிறத விட்டுறலாம்மில்லன்னு கேட்டா.. முடியலையே, இந்திய சுதந்திரத்துக்கு முன்னாலே நம்ம ஜனங்களுக்கு காபி,டீன்னா என்னன்னு தெரியாது.. இந்த வெள்ளைக்காரன் அப்ப தினமும் இலவசமா வீட்டுக்கு வீடு வந்து காபிய சுடசுட ஊத்திட்டு போவான்.. (இலவச திட்டம் கூட வெள்ளைக்காரன் உபயத்துலதான்  நம்ம நாட்டுக்கு வந்தது போல) காசா.. பணமா.. தினமும் வீட்டு வாசல்ல கிடைக்குதேன்னு நம்ம ஆளுங்களும் ருசி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. 10,15 நாள் கழித்து வெள்ளைக்காரன் தெருமுனைல காபிய வேன்ல கொண்டுவந்து ஒரு பெல் அடிப்பானாம்.. எல்லாரும் தெருமுனைக்கு போய் காபிய வாங்கிட்டு வந்து குடிச்சாங்கலாம்.. கொஞ்ச நாள்ல வேன் வராம இருக்கவும் நம்ம ஜனங்க காபிக்கு ஏங்கி தவிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. (டார்வின் சிஸ்டம் தான்) அதுக்கு பிறகு காபித்தூளை வெள்ளைக்காரன் விற்க ஆரம்பிச்சான்.. இந்தியால விளையாத காபிய அவங்க நாட்டில இருந்து விதை கொண்டு வந்து விதைத்து காபி உற்பத்தி பண்ணி இந்திய ஜனங்களுக்கே விற்க ஆரம்பிச்சுட்டான்னு காபிக்கு அடிமையான கதைய சொன்னார்.. பாருங்க,நம்ம மண்ணுல விதைத்து உற்பத்தி பண்ணி நம்மகிட்டயே விற்று சம்பாதித்து இருக்காங்க.. தெல்லாம் சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது.. சுதந்திரத்துக்கு பிறகும் நம்ம மக்கள் ஏன் அயல் நாட்டு மோகத்தில ஊறி போய் இருக்காங்கன்னு புரியல.. அவங்க நாட்டு சீதோஷ்ணநிலைக்கு அவங்க பீர்,விஸ்கின்னு குடிக்கிறாங்க.. ஆடை அணியும் விஷயத்திலயும் கோட் போடுறது,டை கட்டுறதுன்னு அவங்க சீதோஷ்ணத்துக்கு ஏற்ற மாதிரி. அணியுறாங்க.. இதனால அவங்க ஆரோக்கியத்துக்கு பாதிப்பு வராது. ஆனா நம்ம ஆளுங்க இதைபற்றி யோசிக்காமல் வெளிநாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி தானும் கெட்டு தன்னை சுற்றி இருக்கிறவர்களையும் மாற்றி விடுகிறார்கள்.. பள்ளி சீருடையில் இருந்து தினமும் அணியும் ஆடை வரை வெளிநாட்டு மோகம்தான் தலை விரித்து ஆடுகிறது.. ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்க சீருடை தேவைதான்.. டை,சட்டை, சட்டையின் மேல் ஒரு சர்தாரி கோட்,ஷு,சாக்ஸ் தேவைதானா..? நல்ல வேளை தொப்பி போடணும்னு இதுவரை யாரும் சொல்லல.. இப்பிடியெல்லாம் படித்து பட்டம் வாங்கி நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு உழைக்கிறாங்களான்னா அதுவும் கிடையாது.. படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாம வெளிநாட்டுக்குதான் ஓடுறாங்க.. இதுல பசுமை புரட்சி.. தொழில் புரட்சின்னு கோஷம் வேறு போடுறாங்க.. இந்த புரட்சியை பற்றி அடுத்த பதிவில போடுறேன்.. 
Read More...

முதல் விருது

23 comments
வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ."awesome blogger award" வழங்கிய விஜி பார்த்திக்கு "http://vijiparthi.blogspot.in/" மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான இத் தருணத்தை தோழர்,தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!என் வலைக்கு கிடைத்த முதல் விருது இது . 
"awesome blogger award" 


இந்த விருதை நான் எனது வலையுலக தோழர், தோழிகளான உங்களுக்கு வழங்குகிறேன்.
  1. தோழர் தனபாலன் அவர்கள் - http://dindiguldhanabalan.blogspot.com/
  2. தோழி சசி கலா அவர்கள் - http://veesuthendral.blogspot.in/
  3. தோழர் வரலாற்று சுவடுகள் - http://varalaatrusuvadugal.blogspot.in/
  4. தோழி ரம்யா அவர்கள் - http://www.craftoframya.blogspot.in/
  5. தோழி இமா அவர்கள் - http://imaasworld.blogspot.com/
 விருதை பெற்று கொண்ட பதிவர்கள் பின்பற்றும் விதி முறைகள்
  1. விருது வழங்கியவருக்கு நன்றி கூ றுதல்.
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக விருதின் சின்னத்தை தங்கள் வலையில் பதிந்து கொள்ளலாம்.
  3. தாங்கள் பெற்ற விருதை நீங்கள் விரும்பும் 5 பதிவர்களுக்கு வழங்கலாம்.
Read More...

வண்ண மயில்

22 comments
என் மகன் பிரதீப்பின் கைவண்ணத்தில் உருவான வண்ண மயில் இது.
தேவையான பொருட்கள்:-
  • காட்டன் ரோல்              - 1
  • காப்பர் வயர்                - சிறிது
  • காட்டன் பட்                -1
  • செலோ டேப்               - 1
  • கட்டிங் ப்ளேயர்            - 1
  • ஸ்டிக்கர் பொட்டு          -2 அட்டை
  • குந்தன் ஸ்டோன்         - சிறிது
  • acrylic colour                - ப்ளு,வெள்ளை,மஞ்சள்.
  • gauze cloth                 - சிறிது
  • மயில் இறகு              - 3
  • ரேடியம் பால்             - 1
  • பெவிகால்                 - 1

    செய்முறை:-
    • ரேடியம் பந்தில் முழுவதும் பெவிகால் தடவி ஒரு லேயர் காட்டனை ஒட்டி  விட வேண்டும்.
    • மயிலின் உடல் பகுதி வருமளவிற்கு காட்டனை சுற்றி கட் பண்ணாமல் தொடர்ந்து தலை பகுதிக்கு காட்டனை கொண்டு வந்து சிறிது காட்டனை விட்டு கட் பண்ணி விட வேண்டும்.

    • கட் பண்ணிய காட்டனை உருட்டி உடல் பகுதியோடு சேர்த்து பாண்டேஜ் துணியால் தலை, உடல் அமைப்பு வருமாறு சுற்ற வேண்டும்.
    • சுற்றிய துணியை பெவிகால் வைத்து ஒட்டி விட்டு அதன் மேல் ப்ளு கலர்  பெயிண்ட் அடித்து விட வேண்டும்.

    • மயில் இறகில் கண் போல் உள்ளதை தவிர்த்து இருபுறம் உள்ள முடிகளை கட்பண்ணி எடுக்க வேண்டும்.
    • கிராப்ட் சீட்டில் ரோஜா இதழ் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியிலும் அதே போல் கட் பண்ணி இரண்டையும் பெவிகால் கொண்டு ஒட்டி காய்ந்த உடன் இதழின் குறுக்கே மடிப்பு வருமாறு மடக்கி விட வேண்டும்.
    • இதுபோல் மூன்று இதழ்கள் செய்து மயிலிறகில் வெட்டியமுடிகளை ஒட்டி விட வேண்டும்.

    • இதை உடல் பாகத்தின் பின் பகுதியில் ஓட்ட வேண்டும்.காப்பர் வயரை மயிலின் கொண்டை போன்றும்,கால் விரல்களை போன்றும் வளைத்து கட் பண்ண வேண்டும்.
    • காட்டன் பட் எடுத்து நடுப்பகுதியில் கட் பண்ண வேண்டும்.இது இரண்டு பகுதிகளாக ஒரு முனை துளையோடும் மறுமுனை பஞ்சு உருண்டையோடும் இருக்கும்.
    • பஞ்சு உருண்டை உள்ள முனையை கால்களாக பாவித்து வயிற்றுப் பகுதியின் அடியில் ஓட்ட வேண்டும்.
    • இரண்டையும் ஒட்டிய பின் மறு முனையில் உள்ள துளையில் விரல்களாக வெட்டிய வயரை  செருகி விட வேண்டும்.
    • ஒட்டிய கால்கள் பிரிந்து விடாமல் இருக்க சிறிது பாண்டேஜ் துணியை கட் பண்ணி வயிற்று பகுதியோடு சேர்த்து ஓட்ட வேண்டும்.

    • கிராப்ட் சீட்டில் சிறகுகள் போல் வரைந்து கட் பண்ணி  பாண்டேஜ் துணியை அதே அளவில் வெட்டி இரண்டையும் பெவிகால் வைத்து ஒட்டி விட வேண்டும். 
    • இதன் மேல் லைட் ப்ளு கலரும்,மற்றொரு சிறகில் ஆரஞ்சு கலரும் அடித்து இவை இரண்டையும் உடலின் மேல் பாகத்தில் இரு புறமும் ஒட்டி விட வேண்டும்.
    • தலையில் கொண்டை போன்று வளைத்த வயரை குத்தி விட்டு வெள்ளை,கருப்பு பெயிண்ட் வைத்து கண்கள் வரைந்து முடிக்க வேண்டும்.
    • பச்சை நிற குந்தன் கற்களை  பின்புறம் வைத்துள்ள தோகையில் அங்கங்கே இடைவெளி விட்டு ஒட்டி விட்டால் வண்ண மயில் ரெடி.

      Read More...

      பெட் பாட்டில் வளையல்

      19 comments
      தேவையான பொருட்கள்:-
      • பெட் பாட்டில்                       - 1
      • கம் பாட்டில்                        - 1
      • கோல்டன் பேப்பர்                  - 1
      • சில்வர் பேப்பர்                     - 1
      • க்ளிட்டர்ஸ் (கோல்டன் கலர்)     - 1
      • க்ளிட்டர்ஸ் (சில்வர் கலர்)        - 1
      • சிசர்                                - 1
      • செல்லோ டேப்                    - 1
      • நோஸ் பிளேயர்                   - 1
      செய்முறை:-
      • பாட்டிலை சிறு துளை போட்டு அரை செ.மீ அகலத்திற்கு வளையம் போல் வெட்டி எடுக்க வேண்டும்.
      • எடுத்த வளையத்தில் கம்மினை தடவி அதன் மேல் கோல்டன் கலர் கிளிட்டரையோ அல்லது சில்வர் கிளிட்டரையோ தூவி 5 நிமிடம் உலர வைக்க வேண்டும்.

      • சில்வர் கலர் தூவிய வளையத்தின் இரு ஓரங்களிலும் மெலிதாக நறுக்கிய கோல்டன் பேப்பரை சிறிது கம் தடவி கவனமாக ஒட்டி விட வேண்டும்.

      • 5 நிமிடம் உலர விட்டு செல்லோ டேப்பை வளையத்தை சுற்றிலும் ஒட்டி கட் பண்ண வேண்டும்.

      • அவரவர் விருப்பம் போல் கலர் குந்தன் கற்களை வைத்து மேலும் அழகு படுத்தலாம்.
      Read More...

      வாழை இலை மீன்

      11 comments
      தேவையான பொருட்கள்:-
      • மீன்                      -அரை கிலோ
      • சின்ன வெங்காயம்      - 10
      • மிளகாய் பொடி          - ஒரு ஸ்பூன்
      • மசாலா பொடி           - 2 ஸ்பூன்
      • பூண்டு                   - 4
      • இஞ்சி                    - சிறிது
      • புதினா,மல்லி இலை    - சிறிது
      • கருவேப்பிலை          - 2 ஆர்க்கு
      • தக்காளி                 - 2
      • பச்சை மிளகாய்         - 2
      • உப்பு                     - தேவையான அளவு
      • எண்ணெய்               - 2 ஸ்பூன்
        செய்முறை:-
        • மீனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி,மசாலாபொடி சேர்த்து தனியாக வைக்க வேண்டும்.
        • வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை  நறுக்கி வைக்க வேண்டும்.
        • அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
        • சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா,மல்லி இலை தட்டிய இஞ்சி,பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.
        • வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் மசாலாவில் பிரட்டிய மீனை வைத்து அதனுடன் வதக்கிய கலவையை வைத்து நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

        • இதனை நீராவியில் வேக வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
        Read More...