ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்தில அறுவடை செய்யும் நேரம் சுற்றிலும் பறக்கும், ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளை பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு..! வாங்க... சோளம் விதைச்ச தோட்டத்துக்கு போவோம்.சோளதட்டையை பார்த்தாலே சிறு வயதில் கேட்ட கதைதான் நினைவுக்கு வரும்.
எல்லாரும் போயிடுங்க....crop cutter வருது..ஜாக்கிரதை..!
இந்த கட்டிங் மெஷின் சோளத்தோட சோளமா நம்மையும் சேர்த்து சுருட்டி போட்டிருக்கும். யப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸிங்.. நினைத்தாலே ஈரக்குலை நடுங்குது..!
உங்க சோளத்தை திங்கலையே ... தேனைதானே குடிச்சேன்..
ரெக்கைய வெட்டிடீங்களே.. பாவிகளா..!
இந்த முருங்கக்காயை காய விட்டுட்டு போறா மாதிரி இந்த சோளத்தையும் காய விட்டுட்டு போலாமில்ல..நாங்க பிழைச்சிக்குவோம்..
இது என்ன கொடுமை! ஒடி ஒடி போட்டோ எடுக்கிறாங்க.. ச்சீ! வெட்கமா இருக்கு.. இலைக்கு பின்னாலே ஒளிஞ்சுடுவோம்...
அந்த கருத்த மாமா வந்திட்டார் ...எல்லாரும் ஒடுங்க ....! கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்....பாட்டு வேற பாடி பயம் காட்டறார்..இன்னிக்கு யாரு டிக்கெட் வாங்க போறோமோ......ஆண்டவா..!காப்பாத்தப்பா...!!
ஆண்டவன் " ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்" தெரியுமில்லே..நீங்க சோளத்தை எடுத்துட்டு போனா....அட போய்யா.. நாட்டு சோளம் இருக்கில்ல எங்களுக்கு..
செல்லமா வளர்த்த ஒரு பெண் கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போனாளாம்.புகுந்த வீட்டில் மாமியார் பின்புற தோட்டத்தில் மாமரத்தில் மாங்காய் பறிக்க சொல்ல மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி வேலை செய்யாமல் இருக்க, மறுநாள் விடியும் பொழுது துளசி மாடத்திற்கு விளக்கு வைக்க மாமியார் சொல்ல, மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி இருக்கிறாள். மாமியாருக்கு "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பியும் உதவ மாட்டான்" பழ மொழி நினைவுக்கு வர பாடத்தை ஆரம்பிச்சிட்டாங்க...மருமகளிடம் வீட்டு மூலையில் சார்த்தி இருக்கும்சோளதட்டை யில் ஒன்று எடுத்து வர சொல்ல, அவள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு " என்று கூற மாமியார் எழுந்து போய் சோளத்தட்டையை உருவி சுத்தி சுத்தி அடிக்க மருமகள் அலறி கொண்டே ஐயோ! அது மாமரம்,இது மன்னவன் கோயில்,சுத்தி அடிக்கிறது சோளதட்டைன்னு சொல்லி அன்றில் இருந்து சொன்ன வேலையை தட்டாமல் செய்தாளாம்.தோட்டம் வந்தாச்சு...crop cutter ல சோளத்தை கட் பண்ணி போடுறதை பாத்துட்டு அப்பிடியே ஒரு சுத்து வருவோம்.