முட்டைகாய் கிரேவி ( கத்திரிகாய் கிரேவி)

2 comments
வணக்கம் உறவுகளே..! சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சுவையான கிரேவியுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.   இதை கிராமத்தில முட்டைக் காய் என்று சொல்வாங்க...கிராமத்தில இந்த கிரேவி ரொம்ப பேமஸ் . இந்த கிரேவி சிக்கன், மட்டன் பிரியாணி வகைகளுக்கும், விழா காலங்களில் விருந்து வைக்கும் போது  இடம் பெறும் பல வகை சைட் டிஷ்களில் இதுவும் இடம் பெறும். தயிர் சாதத்துக்கும் இந்த கிரேவி ரொம்ப பொருத்தம். பிஞ்சு கத்திரிக்காயாக இருந்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும். பிஞ்சு காய் கிடைக்கும் போது நீங்களும் செய்து பாருங்க..:)
தேவையான பொருட்கள்:
  • பிஞ்சு கத்தரிக்காய்              - கால் கிலோ
  • சின்ன வெங்காயம்               - 7
  • புளி குழம்பு மசால் பொடி   - இரண்டு ஸ்பூன்
  • மிளகாய் பொடி                       - ஒரு ஸ்பூன்
  • புளி                                               - எலுமிச்சை   அளவு
  • உப்பு                                             - தேவையான அளவு
  • கடுகு உளுந்து                         - ஒரு ஸ்பூன்
  • கருவேப்பிலை                        - ஒரு ஆர்க்கு
  • எண்ணெய்                                 - 100 மில்லி
செய்முறை:
  • கத்திரிகாயை நன்கு கழுவி காம்பை நீக்கி விட்டு காம்பு பகுதியில் நீள வாக்கில் கீறி விட வேண்டும்.
  • வெங்காயத்தை உரித்து பொடியாக கட் பண்ண வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து  இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கிய உடன் கத்தரிகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு  மசால் பொடி, மிளகாய் பொடி போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
  • பிரட்டிய கலவையில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
  • தண்ணீர் வற்றி சுண்டும் போது புளி கரைசலை ஊற்றி வேண்டிய உப்பையும் போட்டு கிளறி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  • காய் வெந்து தண்ணீர் வற்றி கிரேவியாக வந்த பின் வாணலியை இறக்கி வைக்கும் போது மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நன்றாக பிரட்டி விட்டால் முட்டைகாய் கிரேவி தயார்.
  • கிராமங்களில் மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு செய்யும் பொழுது குழம்பு கொதித்து இறக்கி வைக்கும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி வைப்பார்கள். சிலர் வெல்லத்தை சேர்த்தும் செய்வார்கள்.

Read More...