வரைவு கோலம்

21 comments
பொங்கலன்று போட்ட வரைவு கோலம்.எல்லார் வீட்டு வாசல்லயும் பொங்கலுக்கு பொங்கல் பானை ,கரும்பு போடுவார்கள். அன்று தெருவில்  வரைவு கோல போட்டின்னு சொன்னதுனால நான் இந்த நடன பெண்   போட்டேன்.. 9மணிக்கு ஜட்ஜ்ஜஸ் வர்றதுக்குள்ள கோலம் மழை பெய்து அழிஞ்சு போச்..


21 comments:

 1. நாட்டியத் தாரகை தத்ரூபமாக இருக்கிறார்! ரொம்ப அழகா வரைஞ்சிருக்கீங்க! பாராட்டுக்கள்.

  //9மணிக்கு ஜட்ஜ்ஜஸ் வர்றதுக்குள்ள கோலம் மழை பெய்து அழிஞ்சு போச்..// அடடா! என்ன ஒரு துரதிர்ஷ்டம்!! போட்டோவைப் பார்த்து பரிசுக்கு கன்ஸிடர் பண்ணலாமில்லையா? மழை வந்ததற்கு என்ன செய்யமுடியும்? நான் ஜட்ஜா இருந்தா பரிசு உங்களுக்கே! :)

  கிருஷ்ணரும் நல்லா இருக்கார்.

  ReplyDelete
  Replies
  1. மகி..உங்க ஊக்கமான கருத்தும் பாராட்டும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அன்று போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மழையின் காரணமாக வீட்டின் அருகேயுள்ள பெருமாள் கோவிலில் போட்டியில் கலந்து கொள்ள அழைத்தனர்.நான் வேறு வேலை காரணமாக கலந்து கொள்ளவில்லை
   கிருஷ்ணர் வரைவு கோலம் மார்கழி 27ல் போட்டது.மழை பெய்து அழிந்தாலும்
   உங்க பாராட்டே பரிசு வாங்கின திருப்திதான் மகி..:)

   Delete
 2. முதல் படம் வெகு அழகாக வரைந்துள்ளீர்கள். இரண்டு கரும்புகளுக்கு இடையே மற்றொரு அழகிய கரும்பே நடனம் ஆடுவது போன்று அவளுக்குக் கருப்புக்க்லரில் மேலாடையும் சட்டையும் கொடுத்திருப்பது அருமையோ அருமை. அதைவிட அழகு பின்னியுள்ள அவளின் சடையே ஓர் கரும்புபோலக் காட்டியுள்ளதும் வெகு சிறப்பாக அமைந்து விட்டது.

  >>>>>>>

  ReplyDelete
  Replies
  1. கோலத்தை நிதானமா ரசிச்சு கலையுணர்வோட கருத்தை சொல்றீங்க அண்ணா...:)மிக்க நன்றி..!

   Delete
 3. இவ்வளவு அழகாக வரைந்தால் மழை வராமல் என்ன செய்யும்?

  உங்களுடைய அற்புதமான ஓவியத்தைக்கண்டு தேவர்களே மழைபெய்து ஆசீர்வதித்துள்ளனர் என நினைத்துகொள்ளுங்கள்.

  அதைவிட இவர்கள் [மனிதர்களாகிய ஜட்ஜஸ்] கொடுக்கும் பரிசா பெரிசு? என நினைத்து மனதை சமாதனம் செய்து கொள்ளுங்கள். வேறு என்ன வழி?

  தாங்கள் தினமலர் பெண்கள் மலர் போன்ற பத்திரிகைகள் நடத்தும் கோலப்போட்டியில் கலந்து கொள்ளலாமே. ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் நவம்பரில் நடத்துகிறார்கள்.

  அடுத்த வருடம் கலந்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்குப்பரிசும் அங்கீகாரமும் கிடைக்கும்.

  >>>>>>>

  ReplyDelete
  Replies
  1. அந்த போட்டி மழையின் காரணமாக தவிர்க்க பட்டு கலந்து கொண்ட அனைவரையும் வீட்டு வாசலில் போடாமல் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் போட அழைத்தார்கள்.நான் கலந்து கொள்ள வில்லை..

   //உங்களுடைய அற்புதமான ஓவியத்தைக்கண்டு தேவர்களே மழைபெய்து ஆசீர்வதித்துள்ளனர் என நினைத்துகொள்ளுங்கள்.// :)

   Delete
 4. தவறாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்கிறேன். முதல் படத்துடன் ஒப்பிடும்போது அந்த இரண்டாவது படம் சரியாக வரையப்படவில்லை. இரண்டையும் சேர்த்து வரைந்து காட்டியிருந்தால், முதல் படத்திற்கு கிடைக்க வேண்டிய பரிசையும் இது ஒருவேளை தடுத்திருக்கலாம்.

  அவ்வாறு ஏதும் நிகழக்கூடாது என்பதற்காகவும் மழை பெய்திருக்கலாம்.

  போட்டிக்கு வரையும் போது, ஒரே ஒரு படம் மட்டும் வரையுங்கோ. அத்வும் முதல் படம் போல சூப்பராக வரையுங்கோ. இது என் ஆலோசனை.

  மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. குறை நிறைகளை சொல்லத்தானே கருத்து பெட்டி..அண்ணன் சொல்வதை ஊக்கமாக நினைப்பேன். ஒரு படம் தான் வரைந்தேன் அண்ணே .. கிருஷ்ணர் படம் மார்கழி 27 அன்று கூடாரை வெல்லும் கோவிந்த பாசுரம் வருமே ..அன்று போட்டது., முதல் கோலம் , வாசல்ல பொங்கலுக்கு வெள்ளை பெயிண்ட் வைத்து நெளி போட்டிருக்கேனே ..ரெண்டாவதில் அது இருக்காது ..:) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணே.

   Delete
 5. நேற்றைய வலைச்சரத்தில் வைரமாக மின்னியதற்கு என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி அண்ணா.:)

   Delete
 6. நாட்டிய பெண் ரொம்ப அழகா வரைஞ்சிருகீங்க...... சூப்பர்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிரியா..கருத்திற்கு நன்றி.

   Delete
 7. சமையலோடு சேர்ந்து உங்களுக்கு ஓவியமும் சிறப்பாக வரும் போல அழகோ அழகுங்க.

  ReplyDelete
 8. மிக்க நன்றி சசி..:)

  ReplyDelete
 9. இரண்டையும் தனித்தனி இடுகையில் கண்டிருந்தால் 'கிருஷ்ணர் அருமையாக இருக்கிறார்,' என்று சொல்லி இருப்பேன். :-) ஒன்றாகப் பார்க்கும்போது மனம் ஒப்பீடு செய்வதைத் தவிர்க்க இயலவில்லை.

  முதலாவது - அருமை, அற்புதம். குறையேதும் இல்லை. அந்த முகபாவத்திற்கே தனியாக முதற் பரிசு கொடுக்கலாம். பரிசு அனுப்ப இயலாததால் ராதாவுக்கு ஒரு @}->-- :)

  இரண்டாவது - அவசர வேலையா! அல்லது வரைந்த பொழுதில் மனதில் வேறு ஏதாவது சஞ்சலமா! சின்னச்சின்னக் குறைகள். :)
  கிருஷ்ணரின் கண்கள் & கைகள் -
  (2 முழங்கை!!, கூரான விரல்நுனிகள் & புல்லாங்குழல் வாசிக்கையில்... 'எப்பொழுதும்' வலது கை, இடது கைக்கு எதிர்த்தாற்போல் வரவேண்டும். க்ர்ர்ர் ;) இமாவுக்கு விளக்கத் தெரியவில்லை. ;) படம் பாருங்கள், புரியும். :) http://media.beta.photobucket.com/user/vadicjagat/media/hindu%20gods/SriVishnuKrishna.jpg.html?filters[term]=Hindu%20Gods&filters[primary]=images&sort=1&o=20 இப்படிப் பிடிக்காவிட்டால் பிடிமானம் போதாது; வாசிக்கவே இயலாது. மற்றொன்று - குழல் வளைந்திருந்தால் ஓசை வரும்; இசை வராது.)
  கிருஷ்ணர் இன்னும் கொஞ்சம் நகைகள் அணிந்திருப்பாரோ! இவர் கொஞ்..சம் நாரதர் பக்கம் சாய்ந்துவிட்டார். ;))
  கிருஷ்ணர் சிரிப்பு +++

  இவற்றைக் குறை கண்டுபிடிக்கவென்று சொல்லவில்லை ராதா. வெகு அழகாக வரைய முடிந்த நீங்கள் இப்படிக் குறை வைத்துவிட்டீர்களே என்கிற ஆதங்கத்தில், உங்கள் திறமையை மெருகேற்றிக்கொள்ள உதவவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டும் குறிப்பிட்டேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. //பரிசு அனுப்ப இயலாததால் ராதாவுக்கு ஒரு @}->-- :)// இமாவின் அன்பு மலரை பெற்றுக் கொண்டேன்..
   //இரண்டாவது - அவசர வேலையா! அல்லது வரைந்த பொழுதில் மனதில் வேறு ஏதாவது சஞ்சலமா!// அதெப்படி இமா.. வரையும் பொழுது என் மன நிலையை கரெக்ட் ஆக புரிந்து கொண்டீர்கள்.. உண்மைதான் அந்த நேரம் கோவிலுக்கு கிளம்பிய மாமா சொன்னார் வாசலில் கிருஷ்ணர் படம் வரைவது தப்பு என்று..)ஒரு நடுக்கத்துடன் போட்டது. மேலும் கொசுத்தொல்லை வேறு..:) ////இப்படிப் பிடிக்காவிட்டால் பிடிமானம் போதாது; வாசிக்கவே இயலாது. மற்றொன்று - குழல் வளைந்திருந்தால் ஓசை வரும்; இசை வராது.)இப்படிப் பிடிக்காவிட்டால் பிடிமானம் போதாது; வாசிக்கவே இயலாது. ////மற்றொன்று - குழல் வளைந்திருந்தால் ஓசை வரும்; இசை வராது.
   குற்றம் கண்டு பிடிக்கும் இமாவே (புலவரே) ....இவை அனைத்திற்கும் காரணம் கொசுக்கடியும் அடியேன் மனநிலையும்..;)
   கிருஷ்ணர் சிரிப்பு.... கோவிலுக்கு போய்விட்டு வந்த மாமா சொன்னது, வெற்றிலை போட்ட கிருஷ்ணர் நாக்கை வெளியே நீட்டி மிரட்டுகிறார்..;))
   //இவற்றைக் குறை கண்டுபிடிக்கவென்று சொல்லவில்லை ராதா. வெகு அழகாக வரைய முடிந்த நீங்கள் இப்படிக் குறை வைத்துவிட்டீர்களே என்கிற ஆதங்கத்தில், உங்கள் திறமையை மெருகேற்றிக்கொள்ள உதவவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டும் குறிப்பிட்டேன்.// டீச்சர் சொன்னா சரிதான்..இமா மாதிரி வை.கோ அண்ணன் மாதிரி அன்பு உள்ளங்கள் சொல்வது ஊக்கமாக சுறுசுறுப்பாக ஏன் மன சந்தோஷத்தையும் அளிக்கின்றது இமா..மிக்க நன்றி.

   Delete
  2. கொசு தொல்லையால் முதல் படமும் சொதப்பி விடும் என்று பயந்துதான் இரவு நேரத்தில் ஒரு சிலர் போடும்போது நானும் வாசலில் போட்டேன் . எங்கள் ஊரில் பொங்கலுக்கு முந்தைய இரவு பாதி பேர் கோல வேலையை இரவே முடித்து விடுவர். இதை போட்டி என்று அறிவித்து விட்டார்களா..மறுநாள் தானே வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது ... அதனால் இரவே போட்டது இந்த வரைவு கோலம்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. மிக அருமையாக கோலம் போட்டுள்ளீர்கள்.கை தேர்ந்த ஓவியர் அழகிய சித்திரத்தை வடிவமைத்ததை போல் உள்ளது.வாழ்த்துக்கள் ரதாராணி.

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)