தர்பூசணி ஜூஸ்

12 comments
கோடையில அதிகமா விளையிற கொடிதாவரம் தர்பூசணி.அது இப்ப எங்க ஊர்ல அதிகமா மார்கெட்ல மலைமலையா குவிஞ்சு விற்பனைக்கு வந்திருக்கு.இந்த பழம் நம்ம ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க.இதுல நீர்சத்து நிறைய இருக்கிறதுனாலே உடலுக்கு குளிர்ச்சியை தரும்.விட்டமின் நிறைந்ததும் கூட.மலச்சிக்கலை தீர்க்கும்.பசியை தூண்டும்.சீசனில் கிடைக்கும் பழங்களை நாம் பயன் படுத்திக்க வேண்டும்.மருத்துவ ரீதியா இந்தப்பழ ஜூஸ் உடன் மிளகு பொடி,சீரகபொடி சேர்த்து சாப்பிடலாம்.சுவைக்காக சாப்பிட ஜூஸ் உடன் தேன்,அல்லது சர்க்கரை உடன் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.

தேவையானவை:-
  • தர்பூசணி துண்டு                  - ஒன்று 
  •  சர்க்கரை                                  - சிறிது 
  •  எலுமிச்சை  சாறு                 - அரை ஸ்பூன் 
  •  ஐஸ் க்யூப்                                - நான்கு 

செய்முறை:-
  • தர்பூசணியை தோல் சீவி சதை பகுதியை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.
  •  சதை பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி முறுக்கு பிழியும் அச்சில் போட்டு பிழிந்தால் சாறு தனியாக விதை தனியாக வந்துவிடும்.
  • பிழிந்த சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கரைய விட்டு ஐஸ் கியூப் உடன் கிளாசில் ஊற்றி பரிமாற வேண்டும்.
Read More...

ஜில்ஜில் ஜிகர்தண்டா

12 comments
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிகர்தண்டா பதிவோட உங்க அனைவருக்கும் வணக்கம்.சந்தர்ப்ப சூழ்நிலையோட கேமிரா ரிப்பேரும் சேர்ந்து பதிவே போட முடியல்லை.இப்ப அடிக்கிற வெயிலுக்கு மக்கள்ஸ் எல்லாருக்கும் ஆரோக்கியத்துல பல பிரச்சினைகள் வரும்.வாய் புண், வயிற்றுப்புண்,சிறுநீர் இறங்குவதில் பிரச்சினை,அதிகமாக தலைமுடி உதிர்தல்,இப்பிடி பல பிரச்சினைகள் வரும்.இதற்கெல்லாம் தீர்வு உணவே மருந்துதான்..இந்த வெயிலுக்கு தண்ணி பழம்,நுங்கு,இளநீர்,மோர்,சாப்பிடலாம்.இதோட வீட்டில நாமளே ஜிகர்தண்டா செய்து சாப்பிடலாம்.இதுல சேர்க்கிற ரோஸ் சிரப், நன்னாரி,பாதாம் பிசினால உடற்சூடு குறையும்.
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு ):-
  • பாதாம் பிசின்                      - இரண்டு கட்டிகள்
  • ரோஸ் சிரப்                          -  எட்டு துளிகள்
  •  பால்                                        - 400 மில்லி
  •  நன்னாரி சிரப்                     - 4 குழி கரண்டி
  •  ஐஸ் க்யூப்                            -6 

செய்முறை:-
  • பாதாம் பிசினை  நன்றாக கழுவி விட்டு எட்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். 
  • ஊறிய பின் பாதாம் பிசின் நன்றாக பூத்து அளவில் அதிகமாக இருக்கும்.
  • ஒரு கிளாஸில் ஊறிய பாதாம் பிசின் சிறிது போட்டு இரண்டு துளிகள் ரோஸ் சிரப்,ஒரு குழி கரண்டி நன்னாரி சிரப்,நூறு மில்லி பால் சேர்த்து ஸ்பூனால் நன்றாக கலக்கி விட்டு இறுதியில் ஐஸ் கியூப்பை சேர்க்க வேண்டும்.
  • தேவை பட்டால் ஐஸ் கிரீம்  சேர்த்து கொள்ளலாம்.

Read More...