செம்பருத்தி ஜூஸ்

7 comments

வலையுலக உறவுகளுக்கு அன்பான வணக்கம்...! நீ.........ண்ட  இடைவெளிக்கு பின் ஒரு குளுமையான பதிவு...:) கோடை முடிந்தாலும் அதன் தாக்கம் தொடர்கிறது. இயற்கையான முறையில் நம் உடலை ஆரோக்கியமாக குளுமையாக வைத்து கொள்ள உதவும் மிக சிறந்த பானம் இந்த பதிவில் பதிவிடுகிறேன். இந்த சர்பத்தில் நம் ரத்தத்தின் சிவப்பு அணுக்களை அதிகரிக்கும் திறனும்  எதிர்ப்பு சக்தியும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த நல்ல பானம் ..( லேட்டா பதிவை கொடுத்து பீடிகை வேறயா ...உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது...:)) அதாங்க செம்பருத்தி ஜூஸ்...!

தேவையான பொருட்கள்:-

 1. செம்பருத்தி பூ             -   5
 2. சர்க்கரை                      -  தேவையான அளவு 
 3. எலுமிசசை                  - 1பழம் 
 4. ஐஸ் க்யூப்ஸ்               - 5

செய்முறை:-

 1. செம்பருத்தியை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
 2. கொதித்த தண்ணீரை மறறொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவேண்டும்.வடிகட்டிய நீர் மெரூன் நிறத்தில் இருக்கும்.
 3. வடிகட்டிய நீருடன் எலுமிசசையை பிழிந்து சர்க்கரை சேர்த்து கரைத்தால் ரத்த சிவப்புடன் ஜூஸ் தயார்.

எளிமையான ஜூஸ் .... நீங்களும் முயன்று பாருங்கள்.
Read More...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!

10 comments
பிறக்கும் புத்தாண்டில்  வலையுலக நண்பர்கள்  அனைவருக்கும்  இனிய  புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்..!

Read More...

முட்டைகாய் கிரேவி ( கத்திரிகாய் கிரேவி)

2 comments
வணக்கம் உறவுகளே..! சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சுவையான கிரேவியுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.   இதை கிராமத்தில முட்டைக் காய் என்று சொல்வாங்க...கிராமத்தில இந்த கிரேவி ரொம்ப பேமஸ் . இந்த கிரேவி சிக்கன், மட்டன் பிரியாணி வகைகளுக்கும், விழா காலங்களில் விருந்து வைக்கும் போது  இடம் பெறும் பல வகை சைட் டிஷ்களில் இதுவும் இடம் பெறும். தயிர் சாதத்துக்கும் இந்த கிரேவி ரொம்ப பொருத்தம். பிஞ்சு கத்திரிக்காயாக இருந்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும். பிஞ்சு காய் கிடைக்கும் போது நீங்களும் செய்து பாருங்க..:)
தேவையான பொருட்கள்:
 • பிஞ்சு கத்தரிக்காய்              - கால் கிலோ
 • சின்ன வெங்காயம்               - 7
 • புளி குழம்பு மசால் பொடி   - இரண்டு ஸ்பூன்
 • மிளகாய் பொடி                       - ஒரு ஸ்பூன்
 • புளி                                               - எலுமிச்சை   அளவு
 • உப்பு                                             - தேவையான அளவு
 • கடுகு உளுந்து                         - ஒரு ஸ்பூன்
 • கருவேப்பிலை                        - ஒரு ஆர்க்கு
 • எண்ணெய்                                 - 100 மில்லி
செய்முறை:
 • கத்திரிகாயை நன்கு கழுவி காம்பை நீக்கி விட்டு காம்பு பகுதியில் நீள வாக்கில் கீறி விட வேண்டும்.
 • வெங்காயத்தை உரித்து பொடியாக கட் பண்ண வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து  இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
 • வெங்காயம் வதங்கிய உடன் கத்தரிகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு  மசால் பொடி, மிளகாய் பொடி போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
 • பிரட்டிய கலவையில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
 • தண்ணீர் வற்றி சுண்டும் போது புளி கரைசலை ஊற்றி வேண்டிய உப்பையும் போட்டு கிளறி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 • காய் வெந்து தண்ணீர் வற்றி கிரேவியாக வந்த பின் வாணலியை இறக்கி வைக்கும் போது மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நன்றாக பிரட்டி விட்டால் முட்டைகாய் கிரேவி தயார்.
 • கிராமங்களில் மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு செய்யும் பொழுது குழம்பு கொதித்து இறக்கி வைக்கும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி வைப்பார்கள். சிலர் வெல்லத்தை சேர்த்தும் செய்வார்கள்.

Read More...

வீட்டு தோட்டம்

8 comments
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து ஒரு ஈடுபாட்டோட வீட்டில் ஆரம்பித்த தொட்டி தோட்டம் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் தோட்டம் போட ஐடியா வந்தது. பஸ், லாரி கழுவிய தண்ணீர் வீணாகாமல் அது போகும் பாதையில் தோட்டம் அமைத்தேன். ஆயில் சேர்ந்த தண்ணீரால் விளைச்சல் கம்மியாகி போனது.  வீட்டிற்கு தேவையான காய் வந்தது. பூசணி காய் அங்கு வேலை செய்பவர்களும் பயன் பெறும் வகையில்  நன்றாக காய்த்தது. இப்பொழுது ஆயில் பில்டராகி தண்ணீர் சுத்தமாக வரும்வகையில் வேலை செய்தாகி விட்டது. இனி வாழை , தென்னை வைக்க வேண்டும். இப்போல்லாம் புதினா தேவையானது வீட்டிலேயே கிடைக்கிறது. கடையில் வாங்குவது இல்லை.

தட்டை பயிர்

பாகற்காய்

பூசணி

தர்பூசணி, வெண்டைகாய்

புதினா

வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்

Read More...

கருவேப்பிலை ஜுஸ்

9 comments
வலையுலக  உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதிக வெயிலால் நிறைய பேருக்கு உடல் சூடும், வாய் புண்ணும் , கொப்புளங்களும் வருவதுண்டு. வருமுன் காப்பது நன்று.. இல்லீங்களா... வந்தாலும் இந்த கருவேப்பிலை ஜுஸ் செய்து சாப்பிட்டால் இந்த தொந்தரவுகள் எல்லாம் போயே போச்சு.. என் அனுபவத்தைதான் பதிவுல சொல்றேன். வாய் புண்ணினால் பட்ட அவஸ்தை இந்த ஜுஸ் குடித்தவுடன் போயிந்தி.. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:
 • கருவேப்பிலை               - ஒரு கைபிடி
 • பனங் கற்கண்டு              - 50 கிராம்
 • தேங்காய்  பால்               - அரை கப் (முதல் பால்)
 • எலுமிச்சை சாறு            - அரை ஸ்பூன்
செய்முறை:
 • கருவேப்பிலையை  நன்றாக கழுவி  மிக்சியில் போட்டு சிறிது நீர் விட்டு (அரை கப்) அரைத்து 100 மில்லி அளவிற்கு ஜுஸ் எடுக்க வேண்டும்.
 • தேங்காயின் பாதி மூடியில் துருவி எடுத்த துருவலை மிக்சியில் போட்டு திக்கான பாலாக அரை கப் எடுக்க வேண்டும்.
 • பனங் கற்கண்டை நன்றாக பொடித்து அதில் எலுமிச்சை ரசம், தேங்காய் பால், கருவேப்பிலை ஜுஸ், அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்தால் ஜுஸ் ரெடி.
Read More...

Quilling: Greeting Card

16 comments
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:)

வலையுலக நண்பர்களுக்காக செய்த இந்த மலர்கொத்து மயில் தோகை, கப் கேக் பேப்பர் வைத்து க்வில்லிங் வேலையில் முயற்சித்தது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
Read More...

வெண்டைகாய் ஃப்ரை

17 comments
வெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு  பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.காயில் இருக்கும் விதைகளை முழுவதும் எடுத்துவிட்டு செய்வதால் விலுவிலுப்பு இல்லாமல் வேலையும் மிக வேகமாக எளிதாக முடிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
 • வெண்டைகாய்                                   - 500 கிராம்
 • மசால் பொடி                                       - 2 ஸ்பூன்
 • மிளகாய் பொடி                                   - 1 ஸ்பூன்
 • உப்பு                                                         - 1 ஸ்பூன்
 • கடலை மாவு                                       - ஒரு கைபிடி
 • எண்ணெய்                                           - வறுக்க தேவையான அளவு
செய்முறை:-
 • வெண்டைகாயை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து நீள வாக்கில் கீறி விதை முழுவதையும் எடுத்து விடவும்.
 • விதை எடுத்த காயை விரல் நீளத்திற்கு துண்டுகள் போட்டு நறுக்கவும்.
 • நறுக்கிய  காயை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, கடலைமாவு,மிளகாய் பொடி, மசால் பொடி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிறிது சிறிதாக காய் கலவையை அதில் போட்டு பொன்னிறமாக சிவந்து வந்தஉடன் எடுத்து தட்டில் போடவும்.
 • வெண்டைகாய் ஃப்ரை தயார். சாம்பார், ரசம் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.


முதல் நாள் மொட்டாக இருந்த போது எடுத்த படம் இது.


மறுநாள் மலர்ந்தும் மலராமல் பாதி மலரா உதிர்ந்து விட்டது. இதோட பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Read More...