வீட்டு தோட்டம்

8 comments
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து ஒரு ஈடுபாட்டோட வீட்டில் ஆரம்பித்த தொட்டி தோட்டம் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் தோட்டம் போட ஐடியா வந்தது. பஸ், லாரி கழுவிய தண்ணீர் வீணாகாமல் அது போகும் பாதையில் தோட்டம் அமைத்தேன். ஆயில் சேர்ந்த தண்ணீரால் விளைச்சல் கம்மியாகி போனது.  வீட்டிற்கு தேவையான காய் வந்தது. பூசணி காய் அங்கு வேலை செய்பவர்களும் பயன் பெறும் வகையில்  நன்றாக காய்த்தது. இப்பொழுது ஆயில் பில்டராகி தண்ணீர் சுத்தமாக வரும்வகையில் வேலை செய்தாகி விட்டது. இனி வாழை , தென்னை வைக்க வேண்டும். இப்போல்லாம் புதினா தேவையானது வீட்டிலேயே கிடைக்கிறது. கடையில் வாங்குவது இல்லை.

தட்டை பயிர்

பாகற்காய்

பூசணி

தர்பூசணி, வெண்டைகாய்

புதினா

வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்

8 comments:

 1. வீட்டுதோட்டம்னாலே ..அது தனி சந்தோஷம் ..நாமே விதைத்து அந்த அறுவடையை அனுபவிப்பது உண்மையில் அருமையான விஷயம் ..நானும் சம்ம்மருக்கு போட்டுட்டேன் இன்னிக்குதான் வெந்தயம் ,கொத்தமல்லி ,கர்பான்சோ பீன்ஸ் அதாங்க கொண்ட கடலை ,மணத்தக்காளி .....அருமையான பகிர்வு .

  Angelin.

  ReplyDelete
  Replies
  1. நாமே விதைத்து அறுவடை செய்வது மனதிற்கு தனி மகிழ்ச்சிதான் ஏஜ்லின்..வருகைக்கு நன்றி..:)

   Delete
 2. அட! வீட்டுத்தோட்டம் வந்தாச்சா? :)

  தண்ணீர் வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவு பண்ணறீங்க..படிக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நேரில் பார்க்கையில் என்ன ஒரு சந்தோஷமா இருக்கும்! :) பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

  புதினா தளதளன்னு அருமையா இருக்குங்க. மற்ற செடிகளும் நன்றாக இருக்கு. கூடவே பூச்செடிகளும் வளர்க்கலாமே!

  //தண்ணீர் சுத்தமாக வரும்வகையில் வேலை செய்தாகி விட்டது. இனி வாழை , தென்னை வைக்க வேண்டும்.// மிக நன்று! ஹேப்பி கார்டனிங் அண்ட் ஆல் த வெரி பெஸ்ட்! :)

  ReplyDelete
  Replies
  1. பூசெடி வைத்து பார்த்தேன்....வாங்கி ஒரு மாதம் நன்றாக பூக்கும் அப்புறம் பூ சைஸ் சிறிதாகி விடும் அல்லது பூச்சி வந்து செடியே பட்டுவிடும். முயற்சிக்கணும் மகி. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 3. அட...! மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்...:)

   Delete
 4. அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி விஜி..:)

   Delete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)