ரங்கோலி

10 comments
ரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார் செய்தாலோ அதை அப்படியே ரங்கோலியின் மேல் போடாமல் அதை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்தால் மிக நைசாக பொடிவரும் .  இந்த பொடியை கோலத்தின் மேல், ரங்கோலியின் மேல்போட்டால் போட்ட டிசைன் பெயிண்ட் செய்தது போல் அழகாக வரும்.டிஷைனுக்கு ஏற்றவாறு கலர் பொடியை சல்லடையை உபயோகித்தும் தூவலாம். வேலை சுலபத்தில் முடியும்.அவ்வாறு போட்ட ரங்கோலிதான் இது.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க..;)




Read More...

ரகடா பேட்டீஸ்

12 comments
வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்பும்மான ஒரு சிற்றுண்டி .. உருளையில் செய்ய கூடிய  இது வெஜ் பேட்டீஸ் ஆக சிக்கன் பேட்டீஸ் ஆக கீரை வகைகள் சேர்த்து செய்யும் பேட்டீஸாக செய்யலாம்.பட்டாணியில் செய்யும் ரகடாவை பேட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்பும்மாக மாலைநேர சிற்றுண்டிக்கு பொருத்தமாக இருக்கும்.

பேட்டீஸ்:-

தேவையான பொருட்கள் :-
  • உருளை கிழங்கு                 - கால் கிலோ
  • பிரட்                                          - 3 சிலைஸ்
  • பூண்டு                                     - சிறிது
  • காரன் ப்ளார்                         - 4 டீ ஷ்பூன்
  • உப்பு                                         - சிறிது
  • மிளகாய் பொடி                  - அரை ஸ்பூன்
செய்முறை:-
  • உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ரெடியாக வைக்கவும்.
  • பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் உருளையை நன்றாக மசித்து வைக்கவும்.
  • அதனுடன் பிரட்,பொடியாக நறுக்கிய பூண்டு, கார்ன் ப்ளார் , மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  • அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொரு மொறுப்பாக சிவந்த வுடன் எடுத்து வைக்கவும்.
  • பேட்டீஸ் தயார்.

ரகடா:-

தேவையான பொருட்கள் :-
  • பட்டாணி    - ஒரு கப்
  • பல்லாரி                           - ஒன்று (பெரியது)
  • மசால் பொடி                  - 2 ஸ்பூன்
  • டொமாட்டோ சாஸ்   - சிறிது
  • லெமன் ஜூஸ்              - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி            - அரை ஸ்பூன்
  • உப்பு                                  - சிறிது
  • சர்க்கரை                        - அரை ஸ்பூன்
  • இஞ்சி                              - சிறு துண்டு
  • பூண்டு                            - 4இதழ்கள்
  • மல்லித்தழை               -சிறிது
செய்முறை:-
  • பட்டாணியை குக்கரில் வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து  கொள்ள வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.
  • மசால் பொடி, மிளகாய் பொடியை வெங்காயத்தில் சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
  • மிக்சியில் இஞ்சி,பூண்டு, வெங்காயம், மீதியுள்ள பட்டாணி, மல்லி தழை சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
  • இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து மல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.
இது எங்க வீட்டு செல்லம் ஸ்கூபி... 10 நாள் குட்டியாக இருந்த போது...

இப்போது 2 மாத குட்டியாக...
Read More...