ரவா வெண் பொங்கல்

2 comments

தேவையான பொருட்கள்:-                             

  • ரவை - கால் கிலோ

  • பாசிப்பருப்பு - 50கிராம்

  • மிளகு - 1ஸ்பூன்

  • சீரகம் - 1ஸ்பூன்

  • நெய் - 100 கிராம்

  • முந்திரிபருப்பு - 25 கிராம்

  • உப்பு - தேவையான அளவு
செய்முறை:-

  • ரவையை 1ஸ்பூன் நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

  • ஒரு வாணலியில் 2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் கழுவிய பருப்பை போட்டு வேக விடவேண்டும்.

  • பருப்பு நன்றாக வெந்ததும் அதில் உப்பு சேர்த்து,50கிராம் நெய்யையும்,3தம்ளர் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.

  • தண்ணீரும், பருப்பும் நன்கு கொதிக்கும் போது வறுத்த ரவையை அதில் தூவி கட்டி இல்லாமல் கிளறி விட வேண்டும்.

  • மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடி செய்து கொள்ளவேண்டும்.

  • வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து மீதி 50 கிராம் நெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும்.

  • நெய் சூடான உடன் அதில் மிளகு, சீரக தூளை போட்டு அடுத்து உடைத்த முந்திரியை போட்டு கலந்து ரவை கலவையில் கொட்டி நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

  • ரவை வெண்பொங்கல் தயார்.
Read More...

கோலங்கள் :-

4 comments
கடந்த  வருட பொங்கல் அன்று வாசலில் போட்ட கோலம். பதிவை போட நினைத்து பல தடங்கல்களால் பதிவிட முடியாமல் போனது.







Read More...

கொத்து ப்ரெட்

4 comments













தேவையான பொருட்கள்:-
  • ப்ரெட்    - 6
  • முட்டை  - 2
  • பெரிய வெங்காயம்   - 1
  • பூண்டு       - 3 பல்
  • மிளகு தூள்     - 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள்   - அரை ஸ்பூன்
  • உப்பு      - சிறிது
  • எண்ணெய்    - 2 ஸ்பூன்

செய்முறை:-
  • பிரெட்டை ஒன்றிரண்டாக பிய்த்து தயாராக வைத்து கொள்ளவும்.
  • முதலில் பூண்டையும்,வெங்காயத்தையும்,பொடியாக வெட்ட வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டை முதலில் போட்டு பொன்னிறமாக வதங்கிய பின் வெங்காயத்தை போட்டு வதக்க வெண்டும்.
  • அடுத்து மிளகாய் பொடி,மிளகு பொடியை தூவி நன்றாக பிரட்டி விடவேண்டும்.
  • முட்டையை உடைத்து வதக்கிய கலவையின் மேல் ஊற்றி சிறிது உப்பை சேர்த்து மேலும் நன்றாக பிரட்டி விடவேண்டும்.
  • ரெடியாக உதிர்து வைத்திருக்கும் பிரெட் துண்டுகளை போட்டு அனைத்து கலவைகளும் ஒன்றாக செரும்படி நன்கு வதக்கி இற்க்கி விட வேண்டும்.
Read More...

மீன் குழம்பு

4 comments
 












தேவையான பொருட்கள்:-                                    
  • மீன்                  - அரை கிலோ
  • சின்ன வெங்காயம்     - 10
  • மிளகாய் தூள்        - 1 ஸ்பூன்
  • மசால் தூள்         - 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய்     - 3
  • தேங்காய்            - தேவையான அளவு
  • பூண்டு               - 5 பல்
  • பெருஞ்சீரகம்       - 1 ஸ்பூன்
  • புளீ                  - பெரிய நெல்லிக்காய் அளவு
  • உப்பு                  - தேவையான அளவு
  • கருவேப்பிலை          - சிறிது
  • எண்ணெய்               - 1 குழி கரண்டி
  • கடுகு,உளுந்து       - 1 ஸ்பூன்

செய்முறை:-
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெங்காயம்,கீறிய மிளகாய்,கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
  • வதக்கிய பொருட்களுடன் மசால் பொடி,மிளகாய் பொடி சேர்த்து வதக்கி புளியை நீரில் கரைத்து வடிகட்டி வதக்கிய பொருட்களுடன் சேர்த்து கொதிக விட வேண்டும்.
  • இறுதியில்  பூண்டு,தேங்காய்,பெருஞ்சீரகம்,சேர்த்து அரைத்து குழம்புடன் சேர்க்க வேண்டும். 
  • கழுவி வைத்த மீன் துண்டுகளை குழம்புடன் சேர்த்து சிறிது உப்பு போட்டு மெதுவாக கிளறி மீன் வெந்த பின் குழம்பை இறக்கி வைக்க வேண்டும்.
Read More...

மீன் வறுவல்

2 comments
 தேவையான பொருட்கள் :-                                        
  • சுத்தம் செய்த மீன்    - அரை கிலோ
  • மிளகு பொடி           - 1ஸ்பூன்
  • மிளகாய் பொடி         - 1ஸ்பூன்
  • மஞ்சள்பொடி           - 1ஸ்பூன்
  • உப்பு                - தேவையான அளவு
  • சோள மாவு         - 2 ஸ்பூன்
  • எண்ணெய்              - 200 மில்லி


செய்முறை :-
  • கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்புடன் தேவையான அனைத்து பொடிகளையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடி அனைத்தும் மீன் துண்டுகளில் பரவுமாறு பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற விடவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் மீன் துண்டுகளி போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.
  • சுவையான மீன் வறுவல் தயார்.
Read More...

சுரைக்காய் கூட்டு

1 comment
 












தேவையான பொருட்கள்  :-
  • சுரைக்காய்                         - அரை கிலோ                   
  • பாசிப்பருப்பு                      -நூறு கிராம்  
  • பச்சை மிளகாய்              - 5
  • சின்ன  வெங்காயம்      - 10
  • சீரகம்                                 - ஒரு ஸ்பூன் 
  • தேங்காய்                         - சிறிது 
  • தக்காளி                            - சிறியது ஒன்று 
  •  உப்பு                                  - சிறிது
  •  கடுகு,உளுந்து             - ஒரு ஸ்பூன்
  •  எண்ணெய்                  - சிறிது
செய்முறை  :-
  • சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
  • தக்காளியை பொடியாக வெட்டி கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலையை ஒவ்வொன்றாக போட்டு வதக்க  வேண்டும்.
  • அடுத்து தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
  • இதனுடன் வெட்டிய சுரைக்காய்,கழுவிய பாசிப்பருப்பு சேர்த்து  தேவையான நீர் ஊற்றி மஞ்சள் பொடி சேர்த்து வேக விட வேண்டும்.
  • காயும்,பருப்பும் முக்கால் பதம் வெந்த உடன் தேங்காய் சீரகத்தை அரைத்து சேர்க்க வேண்டும்.
  • நீர் வற்றும் வரை அதே நேரம் தீய்ந்து விடாமல் அடிக்கடி கிளற வேண்டும்.
  • இறுதியில் உப்பை சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.
Read More...

கொண்டை கடலை பலாகொட்டை குழம்பு

Leave a Comment
தேவையான பொருட்கள் :- 
  • கொண்டை கடலை       - கால் கிலோ 
  • பலா கொட்டை               - 15       
  • தக்காளி                             -  இரண்டு  
  • சின்ன வெங்காயம்      - 10               
  • மசால் பொடி                  - இரண்டு ஸ்பூன்  
  • மிளகாய் பொடி             - 1 ஸ்பூன்
  • புளி                                   -  நெல்லிக்காய் அளவு     
  • கருவேப்பிலை            -  1 ஆர்க்கு   
  • கடுகு, உளுந்து            - 1 ஸ்பூன் 
  • எண்ணெய்                   - தேவையான அளவு 
  • உப்பு                              - சிறிது 
  • பெருங்காயம்           - ஒரு சிட்டிகை

அரைக்க :-
  • தேங்காய்                      - சிறிது  
  • வேக வைத்த பலா கொட்டை    -  10 
  • பூண்டு                                                 - 10 பல் 
  • பெருஞ் சீரகம்                                  -  சிறிது 

செய்முறை :-
  • கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • பலா கொட்டை யை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும் .
  • வெங்காயத்தை நீளமாக வெட்டியும் ,தக்காளியை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, போட்டுவெடித்த உடன் கருவேப்பிலை போட்டு ,அடுத்து வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்த உடன் மிளகாய் ,மசால் பொடிகளை போட்டு கலர் மாறிய உடன் புளியை கரைத்து ஊற்றி இறுதியில் அரைத்த விழுதை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான உப்பை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும்.
  • குழம்பு சிறிது கெட்டி யானவுடன் இறக்கி பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
Read More...