- ரவை - கால் கிலோ
- பாசிப்பருப்பு - 50கிராம்
- மிளகு - 1ஸ்பூன்
- சீரகம் - 1ஸ்பூன்
- நெய் - 100 கிராம்
- முந்திரிபருப்பு - 25 கிராம்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
- ரவையை 1ஸ்பூன் நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் 2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் கழுவிய பருப்பை போட்டு வேக விடவேண்டும்.
- பருப்பு நன்றாக வெந்ததும் அதில் உப்பு சேர்த்து,50கிராம் நெய்யையும்,3தம்ளர் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.
- தண்ணீரும், பருப்பும் நன்கு கொதிக்கும் போது வறுத்த ரவையை அதில் தூவி கட்டி இல்லாமல் கிளறி விட வேண்டும்.
- மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடி செய்து கொள்ளவேண்டும்.
- வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து மீதி 50 கிராம் நெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும்.
- நெய் சூடான உடன் அதில் மிளகு, சீரக தூளை போட்டு அடுத்து உடைத்த முந்திரியை போட்டு கலந்து ரவை கலவையில் கொட்டி நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.
- ரவை வெண்பொங்கல் தயார்.
ஆஹா..இங்கே ப்ரேக்ஃபாஸ்ட் டைம்! அந்த ப்ளேட் அப்புடியே கையில்கிடைச்சா...ஹும்!!
ReplyDeleteசூப்பர் பொங்கல்! :P
ரொம்ப ரொம்ப நன்றி மகி.
ReplyDelete