தேவையான பொருட்கள் :-
- கொண்டை கடலை - கால் கிலோ
- பலா கொட்டை - 15
- தக்காளி - இரண்டு
- சின்ன வெங்காயம் - 10
- மசால் பொடி - இரண்டு ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
- கருவேப்பிலை - 1 ஆர்க்கு
- கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - சிறிது
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
அரைக்க :-
- தேங்காய் - சிறிது
- வேக வைத்த பலா கொட்டை - 10
- பூண்டு - 10 பல்
- பெருஞ் சீரகம் - சிறிது
செய்முறை :-
- கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
- பலா கொட்டை யை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும் .
- வெங்காயத்தை நீளமாக வெட்டியும் ,தக்காளியை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
- மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, போட்டுவெடித்த உடன் கருவேப்பிலை போட்டு ,அடுத்து வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்த உடன் மிளகாய் ,மசால் பொடிகளை போட்டு கலர் மாறிய உடன் புளியை கரைத்து ஊற்றி இறுதியில் அரைத்த விழுதை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான உப்பை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும்.
- குழம்பு சிறிது கெட்டி யானவுடன் இறக்கி பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment