வீட்டு தோட்டம்

8 comments
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து ஒரு ஈடுபாட்டோட வீட்டில் ஆரம்பித்த தொட்டி தோட்டம் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் தோட்டம் போட ஐடியா வந்தது. பஸ், லாரி கழுவிய தண்ணீர் வீணாகாமல் அது போகும் பாதையில் தோட்டம் அமைத்தேன். ஆயில் சேர்ந்த தண்ணீரால் விளைச்சல் கம்மியாகி போனது.  வீட்டிற்கு தேவையான காய் வந்தது. பூசணி காய் அங்கு வேலை செய்பவர்களும் பயன் பெறும் வகையில்  நன்றாக காய்த்தது. இப்பொழுது ஆயில் பில்டராகி தண்ணீர் சுத்தமாக வரும்வகையில் வேலை செய்தாகி விட்டது. இனி வாழை , தென்னை வைக்க வேண்டும். இப்போல்லாம் புதினா தேவையானது வீட்டிலேயே கிடைக்கிறது. கடையில் வாங்குவது இல்லை.

தட்டை பயிர்

பாகற்காய்

பூசணி

தர்பூசணி, வெண்டைகாய்

புதினா

வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்

Read More...

கருவேப்பிலை ஜுஸ்

9 comments
வலையுலக  உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதிக வெயிலால் நிறைய பேருக்கு உடல் சூடும், வாய் புண்ணும் , கொப்புளங்களும் வருவதுண்டு. வருமுன் காப்பது நன்று.. இல்லீங்களா... வந்தாலும் இந்த கருவேப்பிலை ஜுஸ் செய்து சாப்பிட்டால் இந்த தொந்தரவுகள் எல்லாம் போயே போச்சு.. என் அனுபவத்தைதான் பதிவுல சொல்றேன். வாய் புண்ணினால் பட்ட அவஸ்தை இந்த ஜுஸ் குடித்தவுடன் போயிந்தி.. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:
  • கருவேப்பிலை               - ஒரு கைபிடி
  • பனங் கற்கண்டு              - 50 கிராம்
  • தேங்காய்  பால்               - அரை கப் (முதல் பால்)
  • எலுமிச்சை சாறு            - அரை ஸ்பூன்
செய்முறை:
  • கருவேப்பிலையை  நன்றாக கழுவி  மிக்சியில் போட்டு சிறிது நீர் விட்டு (அரை கப்) அரைத்து 100 மில்லி அளவிற்கு ஜுஸ் எடுக்க வேண்டும்.
  • தேங்காயின் பாதி மூடியில் துருவி எடுத்த துருவலை மிக்சியில் போட்டு திக்கான பாலாக அரை கப் எடுக்க வேண்டும்.
  • பனங் கற்கண்டை நன்றாக பொடித்து அதில் எலுமிச்சை ரசம், தேங்காய் பால், கருவேப்பிலை ஜுஸ், அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்தால் ஜுஸ் ரெடி.
Read More...