தேன்மிட்டாய்

30 comments
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்டரில் சுத்தும் போது மாவின் அளவு பொங்கி கிரைண்டர் விளிம்பில் வழியும் அளவு பொங்கி வந்தது. உளுந்து அளவு அதிகமாக இருந்தால் இட்லி நன்றாக வராது என்ற காரணத்தால் சிறிது மாவை தனியாக எடுத்து விட்டு இட்லிக்கு மாவு கலந்தேன்.அந்த சிறிது மாவில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது தோன்றிய ஐடியாதான் இந்த தேன்மிட்டாய்.
செய்து பார்த்தேன்... மிக நன்றாக வந்தது.
தேவையான பொருட்கள்:-
 • உளுந்து மாவு (கிரைண்டரில் அரைத்தது)                 - 2 கைபிடி
 • மைதா மாவு                   - 2 ஸ்பூன்
 • அரிசி மாவு                     - 2 ஸ்பூன்
 • ஜீனி                                 - 100 கிராம்
 • எண்ணெய்                    - தேவையான அளவு
செய்முறை:-
 • உளுந்து,மைதா,அரிசி மாவுகளை ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் ஜீனியை கொட்டி அது முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கம்பி பதத்திற்கு பாகு வைக்க வேண்டும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் மாவு கலவையை சிறிது சிறிதாக ஊற்றி அது நன்றாக பொரிந்து வந்த உடன் எண்ணெய்யை வடித்து விட்டு ஜீனிப்பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தனியாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும்.
 • தேன் மிட்டாய் தயார்.
 • சீனிப்பாகு சூடாக இருக்கும் போதே எண்ணெய்யில் வடித்த உருண்டையை போட வேண்டும்.இவ்வாறு செய்தால் உருண்டை பாகை நன்றாக உள்வாங்கும்.

30 comments:

 1. நல்லா இருக்குங்க... உங்களின் செய்முறையும் செய்து பார்ப்போம்...

  நன்றி...

  ReplyDelete
 2. உடன் வருகைக்கு நன்றி சகோ..:)

  ReplyDelete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி வாணி..:)

   Delete
 4. உளுந்துமாவில் தேன்மிட்டாய்!! புதுசா இருக்குங்க, ஆனா ஹோம் மேட் தேன்மிட்டாய்னா ஒண்ணுக்கு நாலா சாப்பிடலாமே! ரெட் கலர் மட்டும்தான் மிஸ்ஸிங், பட் இட்ஸ் ஓகே, மஞ்சக் கலர் மிட்டாயும் பார்த்திருக்கேனே! அந்த பவுலை அப்படியே இங்க அனுப்பிவிடுங்க! ;):)

  ReplyDelete
  Replies
  1. உளுந்து மாவில் அந்த நேரம் தோன்றிய ஐடியா இப்பிடி செய்து பார்த்தேன்.கருத்திற்கு நன்றி மகி.:)

   Delete
 5. தேன் போன்ற இனிமையான பதிவு.
  புதிய கண்டுபிடிப்புக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணா..:)

   Delete
 6. சுவையான சமையல் குறிப்பு...ட்ரை பண்ணிப் பார்க்கணும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மேடம்..:)

   Delete
 7. சுவையான கண்டு பிடிப்பு ராதா! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 8. வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மேடம்.:)

  ReplyDelete
 9. http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

  இங்க கொஞ்சம் வாங்க

  ரொம்ப அருமையாக இருக்கு
  முன்பு சின்ன சின்ன பொட்டி கடையில் எல்லாஅம் இருக்கும்
  பிள்ளைக்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  ReplyDelete
 10. அழைப்புக்கு மிக்க நன்றி ஜலீ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

  ReplyDelete
 11. ஆஹா ! சூப்பர் தேன்மிட்டாய்.குருவி ரொட்டி குறிப்பும் எதிர்பார்க்கிறோம்.:)!

  ReplyDelete
 12. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா..

  ReplyDelete
 13. இவ்வளவுதானா! கலர் கம்மியாக இருந்தாலும் பார்க்க சுவையாகத் தெரிகிறது. சமைத்தால் இமாவே எல்லாம் சாப்பிட்டுருவாங்க. அதனால்... இமா செய்யவே மாட்டாங்க. நீங்க ஒரே ஒரு மிட்டாய் மட்டும் பார்சல் ப்ளீஸ்.

  ReplyDelete
 14. :) இமாக்கு சர்க்கரை பிராப்ளம் ,,, அதனால ஒரே ஒரு மிட்டாய் அனுப்பியாச்சு..சாப்பிடுங்க..:)

  ReplyDelete
 15. சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. நன்றி ராஜி மேடம்.

  ReplyDelete
 17. கண்டுபிடிப்புக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 18. ஆஹா...தேன் மிட்டாய் குறிப்பை இத்தனை சுலபமாக ச்ய்ய கற்றுத்த்ந்து விட்டீர்கள் ராதாராணி.அவசியம் செய்து பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி ஸாதிகா..

   Delete
 19. I loved it when i was kid.thanks for sharing the recipe.I would definitely try it one day .Thank you for your visit and comments in my blog.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி மீனா..:) தொடர்வதற்கும் மிக்க மகிழ்ச்சி

   Delete
 20. நான் கண்டிப்பா செய்து பார்த்து சொல்கிறேன் ..மிட்டாய் பார்க்க அருமையா நாவூறும் வண்ணம் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள் ... அருமையாக வரும் ..கருத்திற்கு மிக்க நன்றி..

   Delete
 21. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

  வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)