மழை காலத்தில சில காய்கள் அதிகமாக கடைகளில் விற்பனைக்கு வரும். அந்த நேரம் காயும் விலை குறைவாக கிடைக்கும். நம்மில் பலர் அது மாதிரி காய்களை விரும்பி வாங்க மாட்டார்கள். பாகற்காய் , அதளைக்காய் இவைகளை ஒதுக்க பட்ட காய்களாக பயன் படுத்துவதில்லை. ஆனால் அதில்தான் அதிக நன்மை தரும் மருத்துவ பயன்கள் உள்ளது. பல வீடுகளில் அதளைக்காய் வாங்கி சமையல் செய்வாங்க.. ஆனால் அந்த வீட்டில் அதை அனைவரும் சாப்பிடாமல் ஓரிருவர் தான் சாப்பிடுவார்கள். காரணம் அதன் கசப்புத்தன்மை... கசப்பு சுவை தெரியாமல் வெங்காயம் அதிகம் சேர்த்தால் சுவை நன்றாகவே இருக்கும்.அதளைக்காய் சிறந்த மலமிலக்கியாகவும் , வயிற்று புழுக்களை அழிக்கும் காரணியாகவும் செயல் படுகிறது. காயை பார்த்து இது என்ன காய்.. பேர் என்ன..?என்று கேட்கும் நபர்களும் இருக்கிறார்கள். ஏன்னா.. என்னிடம் இந்த கேள்வியை காய் வாங்கும் போது ஒரு நபர் கேட்டார். இது என்ன காலக்கொடுமை.. இந்த காலத்தில இப்பிடியுமா..? அதோட வெளிப்பாடுதாங்க இந்த பதிவு. :) ருசிக்கு சாப்பிடாதே .. பசிக்கு சாப்பிடு.. அப்பிடின்னு ஒரு பழ மொழி இருக்கு. ஆனா என்னை பொறுத்தவரை ருசிக்கோ, பசிக்கோ , ஆரோக்கியத்துக்காக சாப்பிடனும். என்ன நாஞ் சொல்றது சரிதானே.
தேவையான பொருட்கள்:-
- அதளைக்காய் - கால் கிலோ
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- எண்ணெய் - ஒரு குழி கரண்டி
- உப்பு - சிறிது
- கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
செய்முறை:-
- அதளைக்காயின் காம்பை நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைக்க வேண்டும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
- அதனுடன் கீறிய பச்சை மிளகாய் , ஆய்ந்த கருவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு உளுந்து போட்டு வெடித் வெங்காயம் பச்சை மிளகாய் கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கிய பின் அலசி வைத்த காயை போட்டு வதக்க வேண்டும்.
- காய் சுருள வதங்கிய பின் உப்பை போட்டு நன்கு பிரட்டி இறக்கி விட வேண்டும்.
- அசைவ விரும்பிகள் இதனுடன் கருவாட்டை சேர்த்து வதக்கி செய்யலாம்.
இதையெல்லாம் வீட்டில் செய்ததே இல்லை... குறிப்பிற்கு நன்றி...
ReplyDeleteசார்... உடன் வருகைக்கு மிக்க நன்றி.. இனி செய்ய சொல்லுங்கள் .. கசப்பு சுவை தெரியாது.:)
Delete//காயை பார்த்து இது என்ன காய்.. பேர் என்ன..?என்று கேட்கும் நபர்களும் இருக்கிறார்கள். ஏன்னா.. என்னிடம் இந்த கேள்வியை காய் வாங்கும் போது ஒரு நபர் கேட்டார். இது என்ன காலக்கொடுமை.. இந்த காலத்தில இப்பிடியுமா..? அதோட வெளிப்பாடுதாங்க இந்த பதிவு. :) // நானும் அந்த "நபரின்" கேட்டகிரிதானுங்க! இப்பத்தான் இந்தக் காயைப் பற்றியே கேள்விப்படுகிறேன். தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள வைச்சதுக்கு நன்றி! :)
ReplyDeleteஅதளைக்காய் பார்க்க குட்டிக்குட்டியா க்யூட்டா இருக்கு! ஆனா கசக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ;)
மகி.... கோவையில இந்த காய் கண்டிப்பா கிடைக்கும் . பாவக்காய் மாதிரிதான் இதுவும் .. அந்த காயோட தங்கைன்னு சொல்லலாம்.:)) நான் சொன்ன நபர் இதே ஊரில் பிறந்து வளர்ந்து இங்கேயே குடும்பத்தோடு வசிப்பவர். அவரே காய் பேர் கேட்டா ... அவருக்குத்தான் " இந்த காலத்தில இப்பிடியுமா ".:) ஒரு சின்ன விதை நட்டு வைத்தாலே இதன் கொடி பரந்து விரிந்து வளரும்.
Deleteம்.. அப்போ எனக்கு ஒரு பாக்கட் விதை குரியர்ல அனுப்பி வைங்க ராதா. :)
Delete//இது என்ன காலக்கொடுமை.. இந்த காலத்தில இப்பிடியுமா..? // கர்ர்ர்ர்ர்ர்... வாபஸ் வாங்கணும் ராதா. ;))) எங்க ஊர்ல இது இல்ல. சொல்லிக் கொடுங்க, தெரிஞ்சுக்கறோம்.
ReplyDeleteநானும்தான் ஊர்ல எங்க வீட்ல வளர்ந்தது சிலது சொல்லுவேன். முல்லை, முசுட்டை, காரை, கானாந்தி, குறிஞ்சா...(இன்னும் நீ...ளமா இருக்கு லிஸ்ட்) எங்க! இந்த ஐஞ்சும் மட்டும் சாப்பிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம். (ராதா மாட்டிட்டாங்க. ஆமான்னு சொன்னா... இமா இன்னொரு லிஸ்ட் எடுத்துட்டு வருவாங்களாம்.) ;))))
காய் அழகா இருக்கு. பொரியலும் பார்க்க நல்லா இருக்கு. கண்ணுல பட்டா நிச்சயம் வாங்கி சமைச்சுப் பார்க்கிறேன் ராதா.
கமென்ட் தட்டரதுக்குள்ளே கரண்ட் போயிடுத்தே... //இது என்ன காலக்கொடுமை.. இந்த காலத்தில இப்பிடியுமா..? // கர்ர்ர்ர்ர்ர்... வாபஸ் வாங்கணும் ராதா. ;))) மகிக்கு சொன்ன பதில்தான் இமா..:)
Delete//நானும்தான் ஊர்ல எங்க வீட்ல வளர்ந்தது சிலது சொல்லுவேன். முல்லை, முசுட்டை, காரை, கானாந்தி, குறிஞ்சா...(இன்னும் நீ...ளமா இருக்கு லிஸ்ட்) எங்க! இந்த ஐஞ்சும் மட்டும் சாப்பிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்.//
ஆமான்னு சொல்ல மாட்டேனே...:) ஏன்னா இமா நீ....ளமா லிஸ்ட் போட்டீங்கன்னா..:)) விதை என்ன.. அந்த காயே அனுப்பிடுறேன் இமா .. காயை இமா சாப்டா மாதிரி இருக்கும்..காயை காய வைத்தால் விதையும் கிடைத்துவிடும்.:)
அழகான படங்கள், விளக்கங்கள், செய்முறை யாவும் ஜோர்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வருகைக்கு மிக்க நன்றியண்ணா.:)
Deleteசூப்பர்.இதனை வற்றல் கூட போடக் கேள்விபட்டிருக்கிறேன்.
ReplyDeleteகைவசம் வற்றலும் இருக்கிறது ஆசியா..எண்ணெய்யில் வறுத்தால் மொறுமொறுப்பாக நன்றாக இருக்கும். வருகைக்கு மிக்க நன்றி..
ReplyDelete