கீரை வடை

22 comments
தேவையான பொருட்கள் :-
 • கடலை பருப்பு               - 200 கிராம்
 •  பச்சரிசி                      - ஒரு கைபிடி
 • வெங்காயம்                 - பெரியது ஒன்று
 • பொன்னாங்கன்னி கீரை    - ஒரு கட்டு 
 • மிளகாய் பொடி             - 1 ஸ்பூன் 
 • உப்பு                        -  தேவையான அளவு
 • எண்ணெய்                 - தேவையான அளவு
செய்முறை :-
 • கடலை பருப்பையும் பச்சரிசியையும் நன்றாக கழுவி அரை மணி நேரம்ஊற விட வேண்டும்.
 • ஊறிய அரிசியையும் பருப்பையும் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
 • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொன்னாங்கன்னி கீரை,மிளகாய் பொடி இவைகளை விழுதுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.
 • சூடான எண்ணெயில் வடை மாவை தட்டையாக தட்டி போட்டு முறுகலாக வந்த உடன் எடுத்து தட்டில் போடவேண்டும்.
 • கீரை வடை தயார்.
Read More...

அவல் கட்லட்

4 comments
தேவையான பொருட்கள்:-
 • அவல்              - 1கப்
 • உருளை கிழங்கு   - 2
 • காரட்                - 1
 • மல்லி இலை       - சிறிது
 • பிரட்                - 3
 • உப்பு                - சிறிது
 • மிளகாய் பொடி     - 1 ஸ்பூன்
 • பூண்டு              - 5 இதழ்
 • எண்ணெய்          - தேவையான அளவு
செய்முறை:-
 • உருளைகிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவேண்டும்.காரட்டை துருவி கொள்ளவேண்டும்.
 • அவலை கழுவி வடித்து கொள்ளவேண்டும்.
 • பிரட் துண்டுகளை மிக்சியில் தூளாக்கி கொள்ளவேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல் வேக வைத்த கிழங்கை சேர்த்து உப்புடன் பிசைந்து அதனுடன் துருவிய காரட்,பொடியாக நறுக்கிய மல்லி இலை,பொடியாக நறுக்கிய பூண்டு இவைகளையும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
 • பிசைந்த மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி தட்டையாக தட்டி அதை பிரட் தூளில் பிரட்டி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு முறுகலாக வந்த உடன் எண்ணெய்யை வடித்து தட்டில் போட வேண்டும்.
 • அவல் கட்லட் தயார்...
 • இதை சூடாக தக்காளி சாஸ் உடன்,மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Read More...

கிரீன் சிக்கன் வறுவல்

6 comments
தேவையான பொருட்கள்
 • எலும்பு இல்லாத சிக்கன்       - அரை கிலோ
 • புதினா இலைகள்               - இரண்டு கைப்பிடி
 • பூண்டு                          - 10 இதழ்கள்
 • இஞ்சி                           - சிறிது
 • பச்சை மிளகாய்                - 3
 • பட்டை                         - சிறிது
 • கார்ன் ப்ளார்                   - இரண்டு ஸ்பூன்
 • உப்பு                           - தேவையான அளவு
 • எண்ணெய்                     - 250 மில்லி
செய்முறை
 • சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
 • மிக்சியில் புதினாஇலைகள்,மிளகாய்,பட்டை,இஞ்சி,பூண்டு,இவைகளை போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
 • அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் கார்ன் ப்ளார்,உப்பை சேர்த்து பிசற வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக வந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் போட வேண்டும்.
 • சிக்கன் வறுவலில் தேவைப்பட்டால் மிளகு பொடி,எலுமிச்சை 2 துளி சேர்த்து கொள்ளலாம்.
Read More...

வெள்ளரி ஊறுகாய்

10 comments
தேவையான பொருட்கள்:-
 • வெள்ளரிகாய்            - கால் கிலோ
 • எலுமிச்சம் பழம்         - பெரியது ஒன்று
 • மிளகாய் பொடி          - 2 ஸ்பூன்
 • உப்பு                     - 2ஸ்பூன்
செய்முறை:-
 • வெள்ளரி காய்களை நன்கு கழுவி ஈரம் போக துடைக்க வேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் வெள்ளரியை நீள நீளமாக வெட்டி போட வேண்டும்.
 • வெட்டிய காயின் மேல் மிளகாய் பொடி உப்பை போட்டு அதன் மேல் எலுமிச்சையை பிழிந்து நன்றாக குலுக்கி விட வேண்டும்.
 • 5 நிமிடத்தில் நீர் விட ஆரம்பிக்கும்.அரை மணி நேரம் கழித்து நன்றாக பிரட்டி விட்டு ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும்.
 • இது 2 வாரத்திற்கு நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வினிகர் சேர்த்து கொள்ளவேண்டும்.
Read More...