தேவையான பொருட்கள்:-
- வெள்ளரிகாய் - கால் கிலோ
- எலுமிச்சம் பழம் - பெரியது ஒன்று
- மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
- உப்பு - 2ஸ்பூன்
செய்முறை:-
- வெள்ளரி காய்களை நன்கு கழுவி ஈரம் போக துடைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் வெள்ளரியை நீள நீளமாக வெட்டி போட வேண்டும்.
- வெட்டிய காயின் மேல் மிளகாய் பொடி உப்பை போட்டு அதன் மேல் எலுமிச்சையை பிழிந்து நன்றாக குலுக்கி விட வேண்டும்.
- 5 நிமிடத்தில் நீர் விட ஆரம்பிக்கும்.அரை மணி நேரம் கழித்து நன்றாக பிரட்டி விட்டு ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும்.
- இது 2 வாரத்திற்கு நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வினிகர் சேர்த்து கொள்ளவேண்டும்.
சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteவெள்ளரிக்காயை வற்றல்பொடி உப்பு தடவி சாப்பிடுவதுண்டு,லைம் சேர்த்தால் ஊறுகாய்,சூப்பர். செய்து விட்டால் போச்சு.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி ராஜேஸ்வரி..:)
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா..:)
ReplyDeleteவெள்ளரிக்காயுல ஊறுகாயா?! புதுசா இருக்கு. செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்.
ReplyDeleteசெஞ்சு பாருங்க ராஜி..வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅட வெள்ளரியில் ஊறுகாய் சிம்பிளா இருக்கு.
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி ஸாதிகா..:)
ReplyDeleteஅட ஈசியான வெள்ளரிக்காய் ஊறுகாய் அருமை.......
ReplyDeleteவருகைக்கு நன்றி விஜி..
ReplyDelete