தேவையான பொருட்கள்:-
- பால் - 200 மில்லி
- மாம்பழம் - 2
- மாதுளம்பழம் - 1
- நன்னாரி சிரப் - 2 ஸ்பூன்
- டூட்டி ப்ருட்டி - சிறிது
- சீனி - 1 ஸ்பூன்
- கஸ்டர்ட் பவுடர் - 2 ஸ்பூன்
செய்முறை:-
- கஸ்டர்ட் பௌடரை 50 மில்லி பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவேண்டும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி சீனி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
- பால் கொதி வரும் போது கரைத்த கஸ்டர்ட் கலவையை ஊற்றி கிளறி கூழ் பதம் வரும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.
- ஆறிய கலவையில் தோல் எடுத்து நறுக்கிய மாம்பழ துண்டுகள், உதிர்த்த மாதுளம் பழம் சேர்த்து கலந்து கண்ணாடி கிளாசில் போட்டு அதன் மேல் டூட்டி ப்ருட்டி போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
- தேவைப்படும் பொழுது வெளியே எடுத்து நன்னாரி சிரப்பை சுற்றிலும் மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.
- நமக்கு பிடித்த பழங்களை சேர்த்து செய்யலாம்.
கோடைக்கேற்ற குளு குளு டெசர்ட்.அருமையாக தயாரித்து காட்டி இருக்கீங்க ராதாராணி.
ReplyDeletesimply superb!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸாதிகா.
ReplyDeleteபகிர்வுக்கு மகிழ்ச்சி இமா.
ReplyDeleteசூப்பர்.. பார்க்கும் போதே சுவை தெரியுது.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி,பாக்யா..:)
ReplyDeleteஅருமையான டெஸர்ட்.
ReplyDeleteஅருமையான தயாரிப்பு . பாராட்டுக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி ஆசியா..
ReplyDeleteநன்றி காஞ்சனா..
ReplyDeleteநன்றி ராஜேஷ்வரி..
ReplyDelete