தேவையான பொருட்கள்:-
- உருளைகிழங்கு - 4
- புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய் - 4
- பூண்டு - 6 இதழ்கள்
- கருவேப்பிலை,மல்லி இலை -சிறிது
- உப்பு - தேவையானது
- எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:-
- உருளை கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தோலுடனோ அல்லது தோலை எடுத்து விட்டோ வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
- அரிந்த கிழங்கை சிறிது உப்பு கலந்த தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவேண்டும்.
- மிக்சியில் புதினா,கருவேப்பிலை,மல்லி,உப்பு,மிளகாய்,பூண்டு,
ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவேண்டும். - அரிந்த கிழங்கில் அரைத்த கலவையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
- ஒரு தட்டில் ஒருஸ்பூன் எண்ணெய்யை தடவி அதன் மேல் கிழங்கு கலவையை பரத்தி விட வேண்டும்.
- மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை கலவையின் மேல் ஸ்பிரே செய்து
அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
- மொறுமொறுப்பான எண்ணெய் குறைவான சிப்ஸ் தயார்.
நல்ல மணத்துடன் சூப்பர் குறிப்பு.
ReplyDeleteஆசியா.. வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteசூப்பர் குறிப்பு..
ReplyDeleteநன்றி காஞ்சனா.
ReplyDeleteஅட..எண்ணை குறைவான சிப்ஸ் ,மிண்ட் மணத்துடன் சூப்பராக இருக்குமே.அவசியம் டிரை பஃண்ணுகிறேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸாதிகா..:)
ReplyDeleteபார்க்கவே நன்றாக இருக்கிறது ராதா
ReplyDeleteசூப்பர் உருளைக்கிழங்கு சிப்ஸ் .......
ReplyDelete