தேவையான பொருட்கள் :-
- வடுமாங்காய் - ஒரு படி
- மிளகாய் பொடி - ஒரு கப்
- வெந்தயம் - 50 கிராம்
- கடுகு - 50 கிராம்
- தூள் உப்பு - 100 கிராம்
- கட்டி பெருங்காயம் - சிறு துண்டு
- வடுமாங்காய் காம்பை கிள்ளி எடுத்து விட்டு நன்றாக கழுவி துடைத்து கொள்ளவேண்டும்.
- ஈரம் இல்லாத பிளாஸ்டிக் ஜாடியிலோ அல்லது கண்ணாடி ஜாடியிலோ மாங்காயை போடவேண்டும்.
- தூள் உப்பை மாங்காயின் மேல் தூவி நன்றாக குலுக்கி விட வேண்டும்.
- மறுநாள் ஜாடியை திறந்து பார்த்தால் நீர் விட்டிருக்கும்.
- திரும்பவும் ஜாடியை குலுக்கி விட்டு மூட வேண்டும்.
- அடிக்கடி குலுக்கி விடுவதால் 3 நாட்களில் நிறைய நீர்விட்டு மாங்காய் நீரில் மூழ்கி நன்றாக சுருங்கி ஊறியிருக்கும்.
- மறுநாள் வெந்தயம்,கடுகு,கட்டி பெருங்காயம்,இவற்றை தனித்தனியாக வறுத்து அனைத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.
- மிளகாய் பொடியை ஊறிய மாங்காயின் மேல் போட்டு நன்றாக கலந்து விட்டு அதன்மேல் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு ஜாடியை மூட வேண்டும்.
- மிளகாய்பொடியும்,அரைத்த பொடியும்,மேலும் ஊற ஊற மாங்காயில் சேர்ந்து உபயோகிக்க தயாராகிவிடும்.
அருமையாக செய்திருக்கீங்க ராதா.
ReplyDeleteஅங்கே போட்ட வடுமாங்காய் இங்கே போட்ட வடுமாங்காய்..:) இந்த முறையும் நன்றாக உள்ளது ராதாராணி.
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ஆசியா.
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ஸாதிகா..
ReplyDeleteசெய்முறை அருமை.
ReplyDeleteSuper....:)
ReplyDeleteவருகைக்கு நன்றி காஞ்சனா..
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ரம்யா..:)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவடுமாங்காயை வெட்டாமல் அப்படியே போடுவீங்களா ராதா? பார்க்கவே அருமையா இருக்குபா.
ReplyDeleteவடுவை வெட்டாமல் அப்படியேதான் போடுவேன் அஸ்மா..வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
ReplyDeleteஎங்க மம்மி போன வாரம் தான் இதை செஞ்சு கொடுத்தாங்க.இனி இந்த மாதிரி பண்ண சொல்றேன்
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் நன்றி கோவைநேரம்.:)
ReplyDelete