ஃப்ரூட் டெஸர்ட்

12 comments
தேவையான பொருட்கள்:-
 • பால் - 200 மில்லி
 • மாம்பழம் - 2
 • மாதுளம்பழம் - 1
 • நன்னாரி சிரப் - 2 ஸ்பூன்
 • டூட்டி ப்ருட்டி - சிறிது
 • சீனி - 1 ஸ்பூன்
 • கஸ்டர்ட் பவுடர் - 2 ஸ்பூன் 
செய்முறை:-
 • கஸ்டர்ட் பௌடரை 50 மில்லி பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவேண்டும்.
 • அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி சீனி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
 • பால் கொதி வரும் போது கரைத்த கஸ்டர்ட் கலவையை ஊற்றி கிளறி கூழ் பதம் வரும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.
 • ஆறிய கலவையில் தோல் எடுத்து நறுக்கிய மாம்பழ துண்டுகள், உதிர்த்த மாதுளம் பழம் சேர்த்து கலந்து கண்ணாடி கிளாசில் போட்டு அதன் மேல் டூட்டி ப்ருட்டி போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
 • தேவைப்படும் பொழுது வெளியே எடுத்து நன்னாரி சிரப்பை சுற்றிலும் மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.
 • நமக்கு பிடித்த பழங்களை சேர்த்து செய்யலாம்.
Read More...

வடு மாங்காய்

14 comments

தேவையான பொருட்கள் :-
 • வடுமாங்காய்           - ஒரு படி 
 • மிளகாய் பொடி        - ஒரு கப் 
 • வெந்தயம்             - 50 கிராம் 
 • கடுகு                  - 50 கிராம்
 • தூள் உப்பு            - 100 கிராம் 
 • கட்டி பெருங்காயம்  - சிறு துண்டு
செய்முறை :-
 • வடுமாங்காய் காம்பை கிள்ளி எடுத்து விட்டு நன்றாக கழுவி துடைத்து கொள்ளவேண்டும்.
 • ஈரம் இல்லாத பிளாஸ்டிக் ஜாடியிலோ அல்லது கண்ணாடி ஜாடியிலோ மாங்காயை போடவேண்டும்.
 • தூள் உப்பை மாங்காயின் மேல் தூவி நன்றாக குலுக்கி விட வேண்டும்.
 • மறுநாள் ஜாடியை திறந்து பார்த்தால் நீர் விட்டிருக்கும்.
 • திரும்பவும் ஜாடியை குலுக்கி விட்டு  மூட வேண்டும்.
 • அடிக்கடி குலுக்கி விடுவதால் 3 நாட்களில் நிறைய நீர்விட்டு மாங்காய் நீரில் மூழ்கி நன்றாக சுருங்கி ஊறியிருக்கும்.
 • மறுநாள் வெந்தயம்,கடுகு,கட்டி பெருங்காயம்,இவற்றை தனித்தனியாக வறுத்து அனைத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.
 • மிளகாய் பொடியை ஊறிய மாங்காயின் மேல் போட்டு நன்றாக கலந்து விட்டு அதன்மேல் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு ஜாடியை மூட வேண்டும்.
 • மிளகாய்பொடியும்,அரைத்த பொடியும்,மேலும் ஊற ஊற மாங்காயில் சேர்ந்து உபயோகிக்க தயாராகிவிடும்.
Read More...

மின்ட்,பொடடோ ஃப்ரை

8 comments
தேவையான பொருட்கள்:-
 • உருளைகிழங்கு               - 4
 • புதினா இலைகள்             - ஒரு கைப்பிடி
 • பச்சை மிளகாய்              - 4
 • பூண்டு                       - 6 இதழ்கள்
 • கருவேப்பிலை,மல்லி இலை  -சிறிது
 • உப்பு                          - தேவையானது
 • எண்ணெய்                   - 2 ஸ்பூன்
செய்முறை:-
 • உருளை கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தோலுடனோ அல்லது தோலை எடுத்து விட்டோ வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
 • அரிந்த கிழங்கை சிறிது உப்பு கலந்த  தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவேண்டும்.
 • மிக்சியில் புதினா,கருவேப்பிலை,மல்லி,உப்பு,மிளகாய்,பூண்டு,
  ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
 • அரிந்த கிழங்கில் அரைத்த கலவையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
 • ஒரு தட்டில் ஒருஸ்பூன் எண்ணெய்யை தடவி அதன் மேல் கிழங்கு கலவையை பரத்தி விட வேண்டும்.
 • மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை கலவையின் மேல் ஸ்பிரே செய்து
  அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
 • மொறுமொறுப்பான எண்ணெய் குறைவான சிப்ஸ் தயார்.
Read More...