வீட்டு மருத்துவம் - 3

9 comments
வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.

அவற்றில் சில...
  • பூண்டு  பல் எடுத்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் வெண்ணெய் கலந்து தீக்காயத்தின் மேல்தடவினால் குணம்ஆகும்.
  • சளிக்கு கற்பூரவள்ளி இலையுடன்(ஒரு இலை) 3 மிளகு சேர்த்து சாப்பிட   சளித்தொல்லை தீரும்.
  • எலுமிச்சம் பழம் சாற்றுடன் தேனையும் இஞ்சி சாறையும்  கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
  • ஒரு கப்  பூசணி துருவல் தயிரில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
  • வறட்டு இருமல் நிற்க பாலில் அரை ஸ்பூன் சுக்குப்பொடி போட்டு 1 ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் நிற்கும்.
    • ஜலதோசம் ,தலைவலி,நீங்க சின்ன வெங்காயம் 4 ,5 ,எடுத்து தண்ணீர் விடாமல் அரைத்து எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து நெற்றியில் பற்று போட குணம் ஆகும் .
    • வாய் புண்ணிற்கு தேங்காய் பாலை 2 ஸ்பூன் வாயில் விட்டு அப்படியே  வைத்திருந்து 2 நிமிடம் ஆனதும் சாப்பிடலாம் .
    • வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து தலையில் தேய்த்து குளிக்க கண் எரிச்சல் போகும்.
    Read More...

    உக்காரை

    4 comments
                               வீட்ல திடீர் விருந்தாளிகள் வந்துட்டாங்கன்னா ஈசியா செய்யகூடிய ரெசிபி இந்த உக்காரை.தீபாவளி,வருடப்பிறப்பு,போன்ற விஷேச  நாட்கள்லயும் அதிகமா இந்த இனிப்பை செய்யறாங்க.இன்னிக்கு இந்த உக்காரையை வீட்ல செய்தேன்.புரட்டாசியில்  பெருமாளுக்கு உக்காரையை படையலாக படைக்கிறார்கள்.இதையே நெய் அதிகமாக ஊற்றி செய்தால் அக்கார வடிசல்னு சொல்லுவாங்க. :-)
    தேவையான பொருட்கள்:-
    • கடலைபருப்பு                          - ஒரு கப்
    • சர்க்கரை                                    - ஒரு கப்
    • நெய்                                             - ஒரு குழி கரண்டி
    • முந்திரி                                      - தேவையான அளவு
    • உலர்திராட்சை                      - பத்து கிராம்
    • தேங்காய்                                - சிறிது

    செய்முறை:-
    • கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் பருப்பு முழ்கும் அளவிற்கு  சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவேண்டும்.
    • தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
    • வெந்த பருப்பை ஆற விட்டு மிக்சியில்  இரண்டு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
    • பருப்பை  மாவாக அரைத்து விட கூடாது.

    • வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
    • சர்க்கரை சூட்டில் உருகி கரைந்த உடன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
    • சர்க்கரையும்,நெய்யும்,சேர்ந்து வந்தஉடன் மிக்சியில் உள்ள பருப்பை கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
    • சிறிது நெய்யில் நறுக்கிய தேங்காய்,உலர்திராட்சை,முந்திரி, அனைத்தையும் வறுத்து கிளறிய மாவில் கொட்டி கிளறி இறக்கிவிட வேண்டும்.

    • உக்காரை ரெடி..

    Read More...

    மாவு சட்னி

    15 comments
                     பொதுவா சட்னினா,மனசுல நிக்கறது  தேங்காய் சட்னி,பொரிகடலை சட்னிதான் ஆனா கிராமத்து ஜனங்கள் மத்தியில இந்த சட்னிஎல்லாம் ஓரங் கட்ற மாதிரி ஒரு சட்னி செய்வாங்க..மாவுச்சட்னி .ஒரு ஆச்சி இந்த சட்னிய பண்ணாங்க .எங்கூர்ல ஹோட்டல்ல பஜ்ஜியோட இந்த சட்னிய வச்சு தர்ராங்க..இந்த சட்னி ருசியா வரணும்னா மாவு புளிப்பா இருக்கணும்.வெங்காய வடகத்த வச்சி பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்.முக்கியமா காரம்அதிகம் சேர்த்தால் மாவோட புளிப்பும் இந்த காரமும் சேர்ந்து சூப்பர் டேஸ்ட்...
    தேவையானவை:-
    • இட்லி மாவு                                                     -    ஒரு குழி கரண்டி 
    • வெங்காயம் (or) வெங்காய வடகம்          - சிறிது 
    • மிளகாய் வத்தல்                                           - எட்டு 
    • தேங்காய்                                                          -இரண்டு துண்டு 
    • எண்ணெய்                                                       -ஒரு குழி கரண்டி 
    • கருவேப்பிலை                                              - சிறிது 
    • கடுகு ,உளுந்து                                               - ஒரு ஸ்பூன் 
    • உப்பு                                                                    - சிறிது 
    செய்முறை:-
    • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
    • மிக்சியில் தேங்காய்,வத்தல் இரண்டையும் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
    • மாவை நீர் சேர்த்து கரைத்து கொள்ளவேண்டும்.
    • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காய வடகம் இல்லையென்றால் வெங்காயத்தை போட்டு ,கருவேப்பிலையும் போட்டு முறுகலாக வரும்வரை வதக்கி மிக்சியில் உள்ள கலவையை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
    • கொதித்து  வரும்பொழுது   கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்க்கவேண்டும்.

      • கலவை நன்றாக கொதித்து வரும்பொழுது இறக்கிவிடவேண்டும்.

        பி.கு:-வெங்காயமோ ,வடகமோ ,நன்றாக முறுகல் ஆன பின்பே  மிக்சியில் உள்ள விழுதை சேர்க்க வேண்டும்.
        Read More...

        காரச்சட்னி

        6 comments
                   இட்லிக்கு பொதுவா எல்லாரும் பொரிகடலை சட்னியும்,சாம்பாரும்,வச்சு சாப்பிடுவாங்க..ஆனா எங்க வீட்ல எல்லாருமே பொரிகடலை சட்னியோட   இந்த காரச்சட்னி  செஞ்சு வச்சா சாம்பாரைவிட காரச்சட்னியத்தான் விரும்புவாங்க...இட்லியும் மிச்சமில்லாம காலியாயிடும்.காரப்பிரியர்கள் எல்லாருக்கும் இந்த சட்னி ரொம்ப பிடிக்கும்.
        தேவையான பொருட்கள்:-
        • மிளகாய் வத்தல்                 - 15
        • புளி                                            - நெல்லிகாய் அளவு 
        • பூண்டு                                       -எட்டு 
        • சின்ன வெங்காயம்             - பத்து
        • உப்பு                                          - சிறிது 
        • கருவேப்பிலை                    - மூன்று ஆர்க்கு 
        • உளுந்து                                   - இரண்டு ஸ்பூன் 
        • எண்ணெய்                             -  சிறிது 

        செய்முறை:-
        • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தை போட்டு வறுக்க வேண்டும்.
        • உளுந்து கலர் மாறும் பொழுது மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்க வேண்டும்.

        • மிக்சியில் வதக்கிய பொருட்களை போட்டு உப்பை  சேர்த்து அரைக்க வேண்டும்.
        • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து எண்ணெய்யில் கடுகு,உளுந்து  தாளித்து சேர்க்க வேண்டும்.

        Read More...

        பிரண்டை துவையல்:-

        12 comments
                               ரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி.10 வருசத்திற்கு முன்னே இந்த செடிய  சாதாரணமா பாக்க முடிந்தது..இப்ப இதுவும் அபூர்வமாகிபோச்சு.நல்லா பசியை தூண்டுற சக்தி இந்த செடிக்கு இருக்கு .வாந்தி வரும் உணர்வு,அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
         தேவையான பொருட்கள்:-
        • பிரண்டை                        - சிறிது
        • மிளகாய் வற்றல்         - எட்டு  
        •  புளி                                   - கொட்டையளவு 
        • தேங்காய்                      - சிறிது 
        • கருவேப்பிலை            -சிறிது
        • பெருங்காயம்              -ஒரு சிட்டிகை
        • உப்பு                                -சிறிது
        •  எண்ணெய்                 - மூன்று ஸ்பூன்
        செய்முறை:-
        • பிரண்டையை சுத்தம் செய்து வென்னீரில் இரண்டுநிமிடம் போட்டு எடுத்து தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும்.
        • வாணலியை அடுப்பில் வைத்து  சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு வதக்கவேண்டும். 
        • நன்கு வதக்கிய உடன் அதனுடன் வத்தல்,புளி,தேங்காய், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

        • மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.
        • ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை கொட்டி சிறிது எண்ணெய்யில்  கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து ஊற்றவேண்டும்.
                பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும்.          
        Read More...

        தூள் பஜ்ஜி

        2 comments

        தேவையான பொருட்கள்:-

        • கடலை மாவு                           - நூறு கிராம்
        • கார்ன் ப்ளார்                             - 2  ஸ்பூன்
        • வெங்காயம்                               - கால் கிலோ
        • இஞ்சி                                           - விரலளவு
        • பச்சை மிளகாய்                      - 5
        • பூண்டு                                          - 5 பல் 
        • உப்பு                                              - தேவையான அளவு
        • கேசரி கலர்                               - சிறிது
        • எண்ணெய்                                  - தேவையான அளவு


        செய்முறை:-

        • ஒரு பாத்திரத்தில் வெங்காயம் உப்பை போட்டு நன்கு பிசறி,கடலை மாவு,கேசரி கலரை அதனுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
        • இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்,இவற்றை விழுதாக அரைக்க வேண்டும்.
        • அரைத்த விழுதை மாவு கலவையுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
        • வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன் மாவை சிறிது சிறிதாக போட்டு எடுத்து மொறு மொறுப்பாக வெந்தவுடன் ஒரு தட்டில் எண்ணெயை நன்கு வடித்து விட்டு எடுக்க வேண்டும்.

        Read More...

        குக்கர் அல்வா

        14 comments
                            அல்வா செய்வதற்கு கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து செய்வதற்கு நேரமாகும். கோதுமை மாவிலேயே இப்படி செய்தால் எளிதாக இருக்கிறதென்று  நான் இந்த முறையில்தான் செய்வேன்.நெய் அதிகமாக சேர்த்தால் கொலஸ்ட்ரால் பிராப்ளம் வரும். ஆலிவ் ஆயில் நல்லது,வாசனைக்காக சிறிது நெய் சேர்த்து செய்தேன்.வாங்க!அல்வா சாப்பிடுங்க.:-)

        தேவையான  பொருட்கள்:-
        கோதுமை மாவு           - ஒரு கப்
        சீனி                                    - 2 கப்
        கேசரி கலர்                   - சிறிது 
        முந்திரி                            - 50 கிராம்
        ஆலிவ் ஆயில்           - ஒரு கப் + 2 ஸ்பூன் நெய்


        செய்முறை:-
        • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும்.
        • குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அதனுள்  மாவு பாத்திரத்தை வைத்து மூடி மாவை வேகவிட வேண்டும்.
        • ஒரு விசில் சத்தம் வந்த உடன் இறக்கி மாவை வெளியே எடுத்து ஆறவிட வேண்டும்
        •  ஆறியமாவை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவேண்டும்.


        •  வாணலியை அடுப்பில் வைத்து அரை டம்ளர் தண்ணீருடன் கேசரிகலர் கலந்து சீனியை சேர்த்து கரையவிட்டு அதனுடன் மிக்சியில் உள்ள மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.  
        •  பக்கத்து அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து ஆலிவ் ஆயில்,நெய் ஊற்றி சூடுபண்ணி,அல்வா கிளறி முடியும்வரை சூடாக இருக்கும்மாறு அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

        • மாவு லேசாக கெட்டி படும் போது கொதிக்கும் எண்ணெய்யை ஒரு கரண்டியால் எடுத்து மாவின் மேல் ஊற்றி கிளற வேண்டும்.
        • எண்ணெய்யை ஊற்றி கிளற கிளற மாவு எண்ணெய்யை உள்வாங்கும்.
        • அப்பொழுது மாவும் தளதள வென்று பாத்திரத்தில் ஒட்டாமல் கலர் மாறி பளபளப்பாக வரும்.
        • கடைசி கரண்டி எண்ணெய்யை விடும் பொழுது மாவு எண்ணெய்யை உள்வாங்கி கிளற கிளற இரண்டு நிமிடத்தில்மாவிலிருந்து  எண்ணெய் பிரிந்து வரும்.
        • இந்த பக்குவம் வந்த உடன் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிநெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி  விட வேண்டும்.

        Read More...

        முந்திரி பிஸ்கட்

        7 comments

         தேவையான பொருட்கள்:-
        • முட்டை வெள்ளை கரு     - 3
        • முந்திரி                                    - 25   கிராம்                   
        • சீனி                                           - 50 கிராம்
        • கோதுமை மாவு                - 100 கிராம்
        • வெனிலா எசன்ஸ்          2 துளி
        • பட்டர்                               - சிறிது
        செய்முறை:-
        •     முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து நுரை வர நன்கு அடித்து பட்டர்,சீனி ,எசன்ஸ்  இவற்றை முட்டையுடன் சேர்த்து நன்றாக கலந்து பொடித்த முந்திரி ,கோதுமை மாவை இதனுடன் கலந்து வெண்ணை தடவிய தட்டில் மாவுக்கலவையை ஒரு ஸ்பூனால் சிறு சிறு வட்டமாக ஊற்றி அவனில் 200  டிகிரி  பாரன்ஹீட்டில் 15 நிமிடங்கள்  வைத்து எடுக்க வேண்டும்.
        Read More...

        ஸ்டஃப்ட் உருண்டை குழம்பு

        Leave a Comment
        தேவையான பொருட்கள்:-         
        • கடலை பருப்பு        - 2கப்        
        • காலிபிளவர்           - சிறிய பூ                                        
        • கார்ன்ப்ளார்           - 3 ஸ்பூன்
        • பனீர்               - 1/2 கப்
        • உப்பு               - சிறிது
        • வெங்காயம்          - 10
        • பூண்டு              - 8 இதழ்கள்
        • தக்காளி            - 2      
        • பெருஞ்சீரகம்        - 1ஸ்பூன்
        • இஞ்சி               - சிறு துண்டு
        • மிளகாய் பொடி       - 1 ஸ்பூன்
        • தேங்காய்         - 1/4 மூடி
        • கரம் மசாலா பொடி - 2ஸ்பூன்
        • எண்ணெய்            - 2 குழி கரண்டி
        • எண்ணெய்             - பொரிக்க தேவையான அளவு
        • கடுகு,உளுந்து    -சிறிது      
           செய்முறை:-

          •  ஒரு மணி நேரம் கடலை பருப்பை ஊற  வைக்க வேண்டும்.
          • காலிபிளவரை மிக பொடிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.
          • . நறுக்கிய காலிபிளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு நீரை நன்றாக வடிய விட வேண்டு   மிக்சியில் கடலை பருப்பை நீரை வடித்து விட்டு போட்டு உப்பு,பெருஞ்சிரகம்,பூண்டு,சேர்த்து கொர கொரப்பாகவும் இல்லாமல் வழுவழுப்பாகவும் இல்லாமல் மீடியமாக  அரைக்க வேண்டும். 
          • இதனுடன் காலிபிளவரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
          •   இந்த கலவையில் கார்ன்  .பிளாரை சேர்த்து பிசைய வேண்டும்.
          • பிசைந்த கலவையை உருண்டையாக உருட்டி நடுவில் ஒரு  குழி செய்து 
          . பனிரை அதில் வைத்து ஸ்டப் செய்ய வேண்டும்.
          •   இதே போல் கலவை முழுவதையும் செய்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
          • .,  மிக்சியில் தேங்காய்,பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி,அனைத்தையும் போட்டு அரைக்கவேண்டும்.    
          • வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு,உளுந்து போட்டு தாளித்து வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி ,உடன் கரம்மசாலா சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் நன்றாக பிரட்டி விட்டு மிக்சியீல் அரைத்த விழுதை போட்டு சிறிது உப்புடன் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
          • நன்றாக கொதித்து வரும் பொழுது எண்ணெயில் பொறித்த உருண்டைகளை போட்டு கிளறி மல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.




          Read More...

          கைவினை

          6 comments
            அறுசுவை தளத்தில் இமாவின்  ரெக்கார்ட் வாசை பார்த்து எக்ஸ்ரே பிலிமில்  நான் முயற்சி செய்த வாஸ் . இமாவும் பிலிமில் வாஸ் வருமா ,முயன்று  பாருங்கள் என்று கூறினார்.

           
          Read More...

          ரவா வெண் பொங்கல்

          2 comments

          தேவையான பொருட்கள்:-                             

          • ரவை - கால் கிலோ

          • பாசிப்பருப்பு - 50கிராம்

          • மிளகு - 1ஸ்பூன்

          • சீரகம் - 1ஸ்பூன்

          • நெய் - 100 கிராம்

          • முந்திரிபருப்பு - 25 கிராம்

          • உப்பு - தேவையான அளவு
          செய்முறை:-

          • ரவையை 1ஸ்பூன் நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

          • ஒரு வாணலியில் 2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் கழுவிய பருப்பை போட்டு வேக விடவேண்டும்.

          • பருப்பு நன்றாக வெந்ததும் அதில் உப்பு சேர்த்து,50கிராம் நெய்யையும்,3தம்ளர் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.

          • தண்ணீரும், பருப்பும் நன்கு கொதிக்கும் போது வறுத்த ரவையை அதில் தூவி கட்டி இல்லாமல் கிளறி விட வேண்டும்.

          • மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடி செய்து கொள்ளவேண்டும்.

          • வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து மீதி 50 கிராம் நெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும்.

          • நெய் சூடான உடன் அதில் மிளகு, சீரக தூளை போட்டு அடுத்து உடைத்த முந்திரியை போட்டு கலந்து ரவை கலவையில் கொட்டி நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

          • ரவை வெண்பொங்கல் தயார்.
          Read More...

          கோலங்கள் :-

          4 comments
          கடந்த  வருட பொங்கல் அன்று வாசலில் போட்ட கோலம். பதிவை போட நினைத்து பல தடங்கல்களால் பதிவிட முடியாமல் போனது.







          Read More...

          கொத்து ப்ரெட்

          4 comments













          தேவையான பொருட்கள்:-
          • ப்ரெட்    - 6
          • முட்டை  - 2
          • பெரிய வெங்காயம்   - 1
          • பூண்டு       - 3 பல்
          • மிளகு தூள்     - 1 ஸ்பூன்
          • மிளகாய் தூள்   - அரை ஸ்பூன்
          • உப்பு      - சிறிது
          • எண்ணெய்    - 2 ஸ்பூன்

          செய்முறை:-
          • பிரெட்டை ஒன்றிரண்டாக பிய்த்து தயாராக வைத்து கொள்ளவும்.
          • முதலில் பூண்டையும்,வெங்காயத்தையும்,பொடியாக வெட்ட வேண்டும்.
          • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டை முதலில் போட்டு பொன்னிறமாக வதங்கிய பின் வெங்காயத்தை போட்டு வதக்க வெண்டும்.
          • அடுத்து மிளகாய் பொடி,மிளகு பொடியை தூவி நன்றாக பிரட்டி விடவேண்டும்.
          • முட்டையை உடைத்து வதக்கிய கலவையின் மேல் ஊற்றி சிறிது உப்பை சேர்த்து மேலும் நன்றாக பிரட்டி விடவேண்டும்.
          • ரெடியாக உதிர்து வைத்திருக்கும் பிரெட் துண்டுகளை போட்டு அனைத்து கலவைகளும் ஒன்றாக செரும்படி நன்கு வதக்கி இற்க்கி விட வேண்டும்.
          Read More...

          மீன் குழம்பு

          4 comments
           












          தேவையான பொருட்கள்:-                                    
          • மீன்                  - அரை கிலோ
          • சின்ன வெங்காயம்     - 10
          • மிளகாய் தூள்        - 1 ஸ்பூன்
          • மசால் தூள்         - 2 ஸ்பூன்
          • பச்சை மிளகாய்     - 3
          • தேங்காய்            - தேவையான அளவு
          • பூண்டு               - 5 பல்
          • பெருஞ்சீரகம்       - 1 ஸ்பூன்
          • புளீ                  - பெரிய நெல்லிக்காய் அளவு
          • உப்பு                  - தேவையான அளவு
          • கருவேப்பிலை          - சிறிது
          • எண்ணெய்               - 1 குழி கரண்டி
          • கடுகு,உளுந்து       - 1 ஸ்பூன்

          செய்முறை:-
          • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெங்காயம்,கீறிய மிளகாய்,கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
          • வதக்கிய பொருட்களுடன் மசால் பொடி,மிளகாய் பொடி சேர்த்து வதக்கி புளியை நீரில் கரைத்து வடிகட்டி வதக்கிய பொருட்களுடன் சேர்த்து கொதிக விட வேண்டும்.
          • இறுதியில்  பூண்டு,தேங்காய்,பெருஞ்சீரகம்,சேர்த்து அரைத்து குழம்புடன் சேர்க்க வேண்டும். 
          • கழுவி வைத்த மீன் துண்டுகளை குழம்புடன் சேர்த்து சிறிது உப்பு போட்டு மெதுவாக கிளறி மீன் வெந்த பின் குழம்பை இறக்கி வைக்க வேண்டும்.
          Read More...

          மீன் வறுவல்

          2 comments
           தேவையான பொருட்கள் :-                                        
          • சுத்தம் செய்த மீன்    - அரை கிலோ
          • மிளகு பொடி           - 1ஸ்பூன்
          • மிளகாய் பொடி         - 1ஸ்பூன்
          • மஞ்சள்பொடி           - 1ஸ்பூன்
          • உப்பு                - தேவையான அளவு
          • சோள மாவு         - 2 ஸ்பூன்
          • எண்ணெய்              - 200 மில்லி


          செய்முறை :-
          • கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்புடன் தேவையான அனைத்து பொடிகளையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடி அனைத்தும் மீன் துண்டுகளில் பரவுமாறு பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற விடவேண்டும்.
          • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் மீன் துண்டுகளி போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.
          • சுவையான மீன் வறுவல் தயார்.
          Read More...

          சுரைக்காய் கூட்டு

          1 comment
           












          தேவையான பொருட்கள்  :-
          • சுரைக்காய்                         - அரை கிலோ                   
          • பாசிப்பருப்பு                      -நூறு கிராம்  
          • பச்சை மிளகாய்              - 5
          • சின்ன  வெங்காயம்      - 10
          • சீரகம்                                 - ஒரு ஸ்பூன் 
          • தேங்காய்                         - சிறிது 
          • தக்காளி                            - சிறியது ஒன்று 
          •  உப்பு                                  - சிறிது
          •  கடுகு,உளுந்து             - ஒரு ஸ்பூன்
          •  எண்ணெய்                  - சிறிது
          செய்முறை  :-
          • சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
          • வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
          • பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
          • தக்காளியை பொடியாக வெட்டி கொள்ள வேண்டும்.
          • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலையை ஒவ்வொன்றாக போட்டு வதக்க  வேண்டும்.
          • அடுத்து தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
          • இதனுடன் வெட்டிய சுரைக்காய்,கழுவிய பாசிப்பருப்பு சேர்த்து  தேவையான நீர் ஊற்றி மஞ்சள் பொடி சேர்த்து வேக விட வேண்டும்.
          • காயும்,பருப்பும் முக்கால் பதம் வெந்த உடன் தேங்காய் சீரகத்தை அரைத்து சேர்க்க வேண்டும்.
          • நீர் வற்றும் வரை அதே நேரம் தீய்ந்து விடாமல் அடிக்கடி கிளற வேண்டும்.
          • இறுதியில் உப்பை சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.
          Read More...

          கொண்டை கடலை பலாகொட்டை குழம்பு

          Leave a Comment
          தேவையான பொருட்கள் :- 
          • கொண்டை கடலை       - கால் கிலோ 
          • பலா கொட்டை               - 15       
          • தக்காளி                             -  இரண்டு  
          • சின்ன வெங்காயம்      - 10               
          • மசால் பொடி                  - இரண்டு ஸ்பூன்  
          • மிளகாய் பொடி             - 1 ஸ்பூன்
          • புளி                                   -  நெல்லிக்காய் அளவு     
          • கருவேப்பிலை            -  1 ஆர்க்கு   
          • கடுகு, உளுந்து            - 1 ஸ்பூன் 
          • எண்ணெய்                   - தேவையான அளவு 
          • உப்பு                              - சிறிது 
          • பெருங்காயம்           - ஒரு சிட்டிகை

          அரைக்க :-
          • தேங்காய்                      - சிறிது  
          • வேக வைத்த பலா கொட்டை    -  10 
          • பூண்டு                                                 - 10 பல் 
          • பெருஞ் சீரகம்                                  -  சிறிது 

          செய்முறை :-
          • கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
          • பலா கொட்டை யை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும் .
          • வெங்காயத்தை நீளமாக வெட்டியும் ,தக்காளியை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
          • மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவேண்டும்.
          • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, போட்டுவெடித்த உடன் கருவேப்பிலை போட்டு ,அடுத்து வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்த உடன் மிளகாய் ,மசால் பொடிகளை போட்டு கலர் மாறிய உடன் புளியை கரைத்து ஊற்றி இறுதியில் அரைத்த விழுதை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான உப்பை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும்.
          • குழம்பு சிறிது கெட்டி யானவுடன் இறக்கி பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
          Read More...

          வீட்டு மருத்துவம் - 2

          1 comment
          தேள் கடி :
                           வெற்றிலையுடன் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்கி சிறிது தேங்காய் துண்டுகளை மென்று தின்றால் விஷம் உடனே இறங்கும்
          தலைவலி :
                                    இரண்டு வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். 


          Read More...

          வீட்டு மருத்துவம் - 1

          7 comments
                                நம் வீட்டிற்கு அருகில் முலிகை செடிகள் வளர்ந்திருந்தாலும் அதன் மருத்துவ பயன் தெரியாமல் நம்மில்  பலர் இருக்கின்றோம்.வீட்டில் நாம் பயன் படுத்தும் மளிகை பொருட்களிலும் மருத்துவ பயன் தெரியாமல் பலர் இருக்கின்றோம்.நான் பயன்பெற்று பயனடைந்த சில மருத்துவ குறிப்புக்களை இந்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

                                                                             குப்பைமேனி 


          உடலில் படை, பத்து,அலர்ஜியினால் அரிப்பு இவை இருந்தால் குப்பைமேனிசெடியின் இலைகள் ஒரு கைபிடி அளவு எடுத்து கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் ஓரிரண்டு நாட்களில் குணம் காணலாம். 

          Read More...

          கற்பனையில் உருவானவை

          5 comments
          எனது  மகன் பிரதீப் .இவருக்கு கிரியேட்டிவ் மைன்ட் அதிகம். மார்க்கட்டில் வாங்கிய பச்சை மிளகாயில் சில காய்கள் வட்டமாக சுருண்டு இரட்டை காய்களாக இருந்தன .அவற்றை பிரதீப்பிடம் கொடுத்தேன் .அதை நடனம் ஆடும் மிளகாய்  பெண்ணாக உருவாக்கியதைதான் நீங்கள் போட்டோவில் பார்க்கின்றீர்கள் .நன்றாக உள்ளதா...கற்பனையில் உருவானவைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .கற்பனை தொடரும்...

          Read More...

          இஞ்சி சட்னி

          Leave a Comment
          தேவை யான பொருட்கள் :
          • இஞ்சி                          - 50 கிராம்   
          • மிளகாய் வத்தல்    - 5 
          • புளி                               - நெல்லி அளவு 
          • தேங்காய்                  - சிறிது 
          • பெருங்காயம்          - ஒரு சிட்டிகை
          • எண்ணெய்                - இரண்டு தேக்கரண்டி
          • கருவேப்பிலை       - ஒரு ஆர்க்கு 
          செய்முறை :
          • இஞ்சியை நன்றாக  கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.  
          • தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். 
          • அடுப்பில் வாணலியை  வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி ,தேங்காயை அதில் போட்டு சிவப்பு நிறம் வரும் வரை வறுத்து பின்பு புளி, வத்தல், கருவேப்பிலை, பெருங்காயம்,போட்டு வதக்கி மிக்சியில்சிறிது உப்புடன் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
          • இதனுடன் சிறிது எண்ணையில் கடுகு,உளுந்து தாளித்து சேர்க்கவேண்டும்.






          .



          Read More...

          இட்லி சாம்பார்

          2 comments

          தேவையான பொருட்கள் :
          • துவரம் பருப்பு           -  ஒரு கப்
          • மஞ்சள்பொடி           -  ஒரு சிட்டிகை
          • பெருங்காயம்           - ஒரு சிட்டிகை
          • சின்ன வெங்காயம்  -  பத்து
          • தக்காளி                     -  இரண்டு
          • மிளகாய் பொடி       - ஒரு  ஸ்பூன்
          • கருவேப்பிலை,மல்லி தழை   - சிறிது
          • எலுமிச்சை                  - அரை  முடி
          • கடுகு                           -ஒரு  ஸ்பூன்
          • எண்ணெய்                 - இரண்டு ஸ்பூன்    
          செய்முறை :
          • துவரம் பருப்பை  நன்றாக  கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர்  விட்டு அதில் மஞ்சள்பொடி,பெருங்காயத்துடன் பருப்பை சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிட  வேண்டும்.
          • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் ,தக்காளி  சேர்த்து  வதக்க வேண்டும்..
          • வதக்கிய பொருட்களுடன்  மிளகாய்பொடியை சேர்த்து சிறிது  வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன்  வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாக கொதித்தவுடன்  தேவையான அளவு உப்பை சேர்த்து இறக்கி விடவேண்டும்,
          • இறக்கி வைத்த சாம்பாரில் அரை முடி எலுமிச்சை பிளிந்துவிடவேண்டும்,,


            Read More...