தூள் பஜ்ஜி

2 comments

தேவையான பொருட்கள்:-

 • கடலை மாவு                           - நூறு கிராம்
 • கார்ன் ப்ளார்                             - 2  ஸ்பூன்
 • வெங்காயம்                               - கால் கிலோ
 • இஞ்சி                                           - விரலளவு
 • பச்சை மிளகாய்                      - 5
 • பூண்டு                                          - 5 பல் 
 • உப்பு                                              - தேவையான அளவு
 • கேசரி கலர்                               - சிறிது
 • எண்ணெய்                                  - தேவையான அளவு


செய்முறை:-

 • ஒரு பாத்திரத்தில் வெங்காயம் உப்பை போட்டு நன்கு பிசறி,கடலை மாவு,கேசரி கலரை அதனுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
 • இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்,இவற்றை விழுதாக அரைக்க வேண்டும்.
 • அரைத்த விழுதை மாவு கலவையுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன் மாவை சிறிது சிறிதாக போட்டு எடுத்து மொறு மொறுப்பாக வெந்தவுடன் ஒரு தட்டில் எண்ணெயை நன்கு வடித்து விட்டு எடுக்க வேண்டும்.

2 comments:

 1. வாவ்... சூப்பர்ங்க.. இனி தூள் பச்சி செஞ்சி சாப்பிட்ட்ர வேண்டியதான்... டிப்ஸ் தூளா குடுத்துட்டீங்க... நன்றியுடன் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வருகைக்கும் பதிவிற்கும்,மிக்க நன்றி ராஜேஷ்..

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)