பிரண்டை துவையல்:-

11 comments
                       ரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி.10 வருசத்திற்கு முன்னே இந்த செடிய  சாதாரணமா பாக்க முடிந்தது..இப்ப இதுவும் அபூர்வமாகிபோச்சு.நல்லா பசியை தூண்டுற சக்தி இந்த செடிக்கு இருக்கு .வாந்தி வரும் உணர்வு,அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
 தேவையான பொருட்கள்:-
 • பிரண்டை                        - சிறிது
 • மிளகாய் வற்றல்         - எட்டு  
 •  புளி                                   - கொட்டையளவு 
 • தேங்காய்                      - சிறிது 
 • கருவேப்பிலை            -சிறிது
 • பெருங்காயம்              -ஒரு சிட்டிகை
 • உப்பு                                -சிறிது
 •  எண்ணெய்                 - மூன்று ஸ்பூன்
செய்முறை:-
 • பிரண்டையை சுத்தம் செய்து வென்னீரில் இரண்டுநிமிடம் போட்டு எடுத்து தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து  சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு வதக்கவேண்டும். 
 • நன்கு வதக்கிய உடன் அதனுடன் வத்தல்,புளி,தேங்காய், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

 • மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை கொட்டி சிறிது எண்ணெய்யில்  கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து ஊற்றவேண்டும்.
        பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும்.          

11 comments:

 1. பிரண்டை கிடைச்சா செய்றேன் ராதா

  போட்டோ அருமையா இருக்கு

  ReplyDelete
 2. ராதா திரட்டியில் இணைத்தால் அதிக வாசகர்கள் கிடைப்பார்களே......... முயற்ச்சிக்கலாமே

  ReplyDelete
 3. பிரண்டை துவையல் இது வரை சாப்பிட்டதில்லை... சாப்பிட்டு பார்ப்போம்... அழகான செய்முறை விளக்கங்களுடன் அருமையான சமையல் பதிவு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. பிரண்டை - இப்ப தான் கேள்விப் படுறேன். நான் எங்கே போவேன் பிரண்டைக்கு? அழகான படங்கள் & ரெசிப்பி.

  ReplyDelete
 5. செய்து பாருங்க ஆமி.உங்க டிப்ஸ் முயற்சிக்கிறேன்...மிக்க நன்றி!

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி ராஜேஷ் ..

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி வாணி..

  ReplyDelete
 8. அருமையா இருக்கு பிரண்டை துவயல்.

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி பிரியா.

  ReplyDelete
 10. தோட்டத்தில் தொட்டியில் பிரண்டை வளர்க்கிறேன். எப்போது மனதுக்கு பிரண்டை துவையல் சாப்பிட தோன்றுமோ அப்போ எடுத்து துவையல் செய்து சாப்பிடுவேன். உளுந்து , மிளகாய், கடுகு, புளி உப்பு வறுத்து பிரண்டையை வதக்கி துவையல் செய்வேன். தேங்காய் சேர்ந்து செய்கிறேன் ஒரு முறை உங்கள் பக்குவத்தில்.

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)