பொதுவா சட்னினா,மனசுல நிக்கறது தேங்காய் சட்னி,பொரிகடலை சட்னிதான் ஆனா கிராமத்து ஜனங்கள் மத்தியில இந்த சட்னிஎல்லாம் ஓரங் கட்ற மாதிரி ஒரு சட்னி செய்வாங்க..மாவுச்சட்னி .ஒரு ஆச்சி இந்த சட்னிய பண்ணாங்க .எங்கூர்ல ஹோட்டல்ல பஜ்ஜியோட இந்த சட்னிய வச்சு தர்ராங்க..இந்த சட்னி ருசியா வரணும்னா மாவு புளிப்பா இருக்கணும்.வெங்காய வடகத்த வச்சி பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்.முக்கியமா காரம்அதிகம் சேர்த்தால் மாவோட புளிப்பும் இந்த காரமும் சேர்ந்து சூப்பர் டேஸ்ட்...
தேவையானவை:-- இட்லி மாவு - ஒரு குழி கரண்டி
- வெங்காயம் (or) வெங்காய வடகம் - சிறிது
- மிளகாய் வத்தல் - எட்டு
- தேங்காய் -இரண்டு துண்டு
- எண்ணெய் -ஒரு குழி கரண்டி
- கருவேப்பிலை - சிறிது
- கடுகு ,உளுந்து - ஒரு ஸ்பூன்
- உப்பு - சிறிது
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
- மிக்சியில் தேங்காய்,வத்தல் இரண்டையும் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- மாவை நீர் சேர்த்து கரைத்து கொள்ளவேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காய வடகம் இல்லையென்றால் வெங்காயத்தை போட்டு ,கருவேப்பிலையும் போட்டு முறுகலாக வரும்வரை வதக்கி மிக்சியில் உள்ள கலவையை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- கொதித்து வரும்பொழுது கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்க்கவேண்டும்.
- கலவை நன்றாக கொதித்து வரும்பொழுது இறக்கிவிடவேண்டும்.
நான் முதல் முறையா கேள்வி படுறேங்க.. மாவு சட்னியா.. செய்முறை விளக்கம் ஈஸியா இருக்கு பகிருவுக்கு நன்றி.
ReplyDeleteஇட்லி மாவு சட்னி ரெசிப்பி சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன்..இன்னும் செய்து பார்க்கலை,சீக்கிரம் செய்துபார்த்து சொல்லறேன். :)
ReplyDeleteரெசிப்பிக்கு நன்றி!
Never heard about this chutney. Looking very colorful. Thanks for sharing.
ReplyDeleteகேள்விபடாதது....
ReplyDeleteசெய்து பாக்குறேன் ராதா......
சின்ன சந்தேகம்
மாவு விட்டதும் அடி பிடிக்காதா? மாவு வாசனை இருக்குமா?
சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅட! ட்ரை பண்ணுறேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ராஜேஷ்.
ReplyDeleteசெய்து பாருங்க மகி,நல்லா இருக்கும்.
ReplyDeleteவாணி பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஆமி..தண்ணீர் சேர்த்துதானே கொதிக்க விடுகிறோம்.நீர்க்க கரைத்து செய்வதால் அடி பிடிக்காது :)
ReplyDeleteவாங்க பகிர்வுக்கு மிக்க நன்றி ராஜி.
ReplyDeleteநலமா ,இமா ..செய்து பாருங்க ..ரொம்ப நல்லா இருக்கும்..
ReplyDeleteநாக்கு ஊருது
ReplyDeleteசுவையான தகவல் ..
ReplyDeleteVery interesting recipe.Never heard of before...
ReplyDelete