பருத்திப்பால்

4 comments
தேவையான பொருட்கள்:
  • பருத்தி விதை         - 2 கைபிடி 
  • கருப்பட்டி             - 100 கிராம் 
  • தேங்காய் பால்        - அரை மூடி
  • சுக்கு                - அரைவிரளளவு
  • அரிசி மாவு           - 2 ஸ்பூன் 
  • ஏலக்காய்          - 2
செய்முறை:
  •  பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.  
  • கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .
  • ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய்  பாலையும் ஊற்றி காய்ச்ச  வேண்டும்.
  • இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
  • சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.
Read More...

தக்காளி காரசட்னி

Leave a Comment


 தேவையானவை:
  • தக்காளி - 5
  • பூண்டூ - 5 பல்
  • மிளகாய் பொடி - 2ஸ்பூன்
  • மல்லி இலை - 2 தழைகள்
  • சின்னவெங்காயம் - 5
  • உப்பு - 1 ஸ்பூன்
  • எண்ணை - 50மில்லி
  • கடுகு,கருவேப்பிலை - சிறிது
 செய்முறை :
  • எண்ணை தவிர அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து 50மில்லி எண்ணையை ஊற்றி ,காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை போட்டு வெடித்தவுன் அரைத்த விழுதை சேர்த்து தளதளவென எண்ணை பிரியும்வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.


Read More...