தேவையான பொருட்கள்:
- பருத்தி விதை - 2 கைபிடி
- கருப்பட்டி - 100 கிராம்
- தேங்காய் பால் - அரை மூடி
- சுக்கு - அரைவிரளளவு
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
- கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .
- ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
- இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
- சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.
அருமையாக இருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி ஆசியா .
ReplyDeleteநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு
நான் தேடியது கிடைத்தது.அருமை ராதா அவர்களே!!!
ReplyDelete