கருவேப்பிலை ஜுஸ்

9 comments
வலையுலக  உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதிக வெயிலால் நிறைய பேருக்கு உடல் சூடும், வாய் புண்ணும் , கொப்புளங்களும் வருவதுண்டு. வருமுன் காப்பது நன்று.. இல்லீங்களா... வந்தாலும் இந்த கருவேப்பிலை ஜுஸ் செய்து சாப்பிட்டால் இந்த தொந்தரவுகள் எல்லாம் போயே போச்சு.. என் அனுபவத்தைதான் பதிவுல சொல்றேன். வாய் புண்ணினால் பட்ட அவஸ்தை இந்த ஜுஸ் குடித்தவுடன் போயிந்தி.. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:
 • கருவேப்பிலை               - ஒரு கைபிடி
 • பனங் கற்கண்டு              - 50 கிராம்
 • தேங்காய்  பால்               - அரை கப் (முதல் பால்)
 • எலுமிச்சை சாறு            - அரை ஸ்பூன்
செய்முறை:
 • கருவேப்பிலையை  நன்றாக கழுவி  மிக்சியில் போட்டு சிறிது நீர் விட்டு (அரை கப்) அரைத்து 100 மில்லி அளவிற்கு ஜுஸ் எடுக்க வேண்டும்.
 • தேங்காயின் பாதி மூடியில் துருவி எடுத்த துருவலை மிக்சியில் போட்டு திக்கான பாலாக அரை கப் எடுக்க வேண்டும்.
 • பனங் கற்கண்டை நன்றாக பொடித்து அதில் எலுமிச்சை ரசம், தேங்காய் பால், கருவேப்பிலை ஜுஸ், அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்தால் ஜுஸ் ரெடி.

9 comments:

 1. அருமையான ஜீஸ் ராதாராணி.
  செய்து பார்த்து விடுகிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி கோதி அக்கா..:)

   Delete
 2. செய்து பார்த்திடுவோம்... நன்றி சகோதரி...

  ReplyDelete
 3. நன்றி தனபாலன் சார்..:)

  ReplyDelete
 4. வாஸனையா கமகமன்னு ருக்கும் போலிருக்கு. கட்டாயம் செய்து சாப்பிடுகிறேன். புது மாதிரி இருக்கு ஸந்தோஷம். அன்புடன்

  ReplyDelete
 5. வாங்க அம்மா... உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. நான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வேன்.இதுவும் சூப்பர்.

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)