உக்காரை

4 comments
                           வீட்ல திடீர் விருந்தாளிகள் வந்துட்டாங்கன்னா ஈசியா செய்யகூடிய ரெசிபி இந்த உக்காரை.தீபாவளி,வருடப்பிறப்பு,போன்ற விஷேச  நாட்கள்லயும் அதிகமா இந்த இனிப்பை செய்யறாங்க.இன்னிக்கு இந்த உக்காரையை வீட்ல செய்தேன்.புரட்டாசியில்  பெருமாளுக்கு உக்காரையை படையலாக படைக்கிறார்கள்.இதையே நெய் அதிகமாக ஊற்றி செய்தால் அக்கார வடிசல்னு சொல்லுவாங்க. :-)
தேவையான பொருட்கள்:-
 • கடலைபருப்பு                          - ஒரு கப்
 • சர்க்கரை                                    - ஒரு கப்
 • நெய்                                             - ஒரு குழி கரண்டி
 • முந்திரி                                      - தேவையான அளவு
 • உலர்திராட்சை                      - பத்து கிராம்
 • தேங்காய்                                - சிறிது

செய்முறை:-
 • கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் பருப்பு முழ்கும் அளவிற்கு  சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவேண்டும்.
 • தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
 • வெந்த பருப்பை ஆற விட்டு மிக்சியில்  இரண்டு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
 • பருப்பை  மாவாக அரைத்து விட கூடாது.

 • வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
 • சர்க்கரை சூட்டில் உருகி கரைந்த உடன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
 • சர்க்கரையும்,நெய்யும்,சேர்ந்து வந்தஉடன் மிக்சியில் உள்ள பருப்பை கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
 • சிறிது நெய்யில் நறுக்கிய தேங்காய்,உலர்திராட்சை,முந்திரி, அனைத்தையும் வறுத்து கிளறிய மாவில் கொட்டி கிளறி இறக்கிவிட வேண்டும்.

 • உக்காரை ரெடி..

4 comments:

 1. சூப்பர் ரெசிப்பி. செய்வதும் சுலபமா இருக்கு.

  ReplyDelete
 2. உக்காரை கேள்விப்பட்டதோட சரி..சாப்பிட்டதில்லை, சூப்பரா இருக்கு! தேங்காய்ப்பல்-திராட்சை போடாமல், சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டு செய்த பூரணம் வச்சு போளி, பணியாரம் செய்திருக்கேன். எப்படி செஞ்சா என்ன? இனிப்பு பலகாரம் எப்புடிக் குடுத்தாலும் விட்டு வெளாசிடுவோமுல்ல?? ;):)

  /இதையே நெய் அதிகமாக ஊற்றி செய்தால் அக்கார வடிசல்னு சொல்லுவாங்க. :-)/அவ்வ்வ்வ்...குழப்பமா இருக்கே..ஒரு சில ப்ளாக்ல சக்கரைப்பொங்கல் மாதிரி செய்துட்டு அக்காரவடிசில்னு சொல்றாங்க, நீங்க இப்படி சொல்றீங்க? ஊருக்கு ஊர் ரெசிப்பிபேர் மாறும் போலவே! :)

  மை மைண்ட்வாய்ஸ்:"மகி, நீ இப்புடி போற வர ப்ளாக்ல எல்லாம் அரைப்பக்கத்துக்கு கமென்ட் போட்டுட்டு இருந்தீன்னா எங்கயும் உன்னோட கமென்ட் வரமுடியாத மாதிரி ப்ளாக் பண்ணி வைக்கப்போறாங்க,ஜாக்கிரத! ";);)

  ReplyDelete
 3. ஜெம்ஸ் மிட்டாய் சங்குசக்கரம் சூப்பரா இருக்கு!

  என்னைய காப்பாத்தப்பா...ஏடு குண்டலவாடா, கோவிந்தா,கோவிந்தா!

  :)))))))))))

  ReplyDelete
 4. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)