காரச்சட்னி

6 comments
           இட்லிக்கு பொதுவா எல்லாரும் பொரிகடலை சட்னியும்,சாம்பாரும்,வச்சு சாப்பிடுவாங்க..ஆனா எங்க வீட்ல எல்லாருமே பொரிகடலை சட்னியோட   இந்த காரச்சட்னி  செஞ்சு வச்சா சாம்பாரைவிட காரச்சட்னியத்தான் விரும்புவாங்க...இட்லியும் மிச்சமில்லாம காலியாயிடும்.காரப்பிரியர்கள் எல்லாருக்கும் இந்த சட்னி ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:-
  • மிளகாய் வத்தல்                 - 15
  • புளி                                            - நெல்லிகாய் அளவு 
  • பூண்டு                                       -எட்டு 
  • சின்ன வெங்காயம்             - பத்து
  • உப்பு                                          - சிறிது 
  • கருவேப்பிலை                    - மூன்று ஆர்க்கு 
  • உளுந்து                                   - இரண்டு ஸ்பூன் 
  • எண்ணெய்                             -  சிறிது 

செய்முறை:-
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தை போட்டு வறுக்க வேண்டும்.
  • உளுந்து கலர் மாறும் பொழுது மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்க வேண்டும்.

  • மிக்சியில் வதக்கிய பொருட்களை போட்டு உப்பை  சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து எண்ணெய்யில் கடுகு,உளுந்து  தாளித்து சேர்க்க வேண்டும்.

6 comments:

  1. சிம்பிளா இருக்கு ராதா

    நானும் கார சட்னி செய்து தோசையில் தடவி கார தோசைன்னு கொடுத்துடுவேன் :-)

    இம்முறையில் செய்து பார்க்கிறேன்

    ReplyDelete
  2. சட்னி நல்லா இருக்குங்க. நானும் இப்படி செய்வதுண்டு. எங்கவீட்டுல இட்லிக்கு சட்னிய விட சட்னிக்கு இட்லிதான்!;)

    ReplyDelete
  3. ஆமி,மகி,பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சட்னி ரொம்ப நல்லா இருக்கு...
    http://mahagowri.blogspot.in/

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)