குக்கர் அல்வா

14 comments
                    அல்வா செய்வதற்கு கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து செய்வதற்கு நேரமாகும். கோதுமை மாவிலேயே இப்படி செய்தால் எளிதாக இருக்கிறதென்று  நான் இந்த முறையில்தான் செய்வேன்.நெய் அதிகமாக சேர்த்தால் கொலஸ்ட்ரால் பிராப்ளம் வரும். ஆலிவ் ஆயில் நல்லது,வாசனைக்காக சிறிது நெய் சேர்த்து செய்தேன்.வாங்க!அல்வா சாப்பிடுங்க.:-)

தேவையான  பொருட்கள்:-
கோதுமை மாவு           - ஒரு கப்
சீனி                                    - 2 கப்
கேசரி கலர்                   - சிறிது 
முந்திரி                            - 50 கிராம்
ஆலிவ் ஆயில்           - ஒரு கப் + 2 ஸ்பூன் நெய்


செய்முறை:-
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும்.
  • குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அதனுள்  மாவு பாத்திரத்தை வைத்து மூடி மாவை வேகவிட வேண்டும்.
  • ஒரு விசில் சத்தம் வந்த உடன் இறக்கி மாவை வெளியே எடுத்து ஆறவிட வேண்டும்
  •  ஆறியமாவை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவேண்டும்.


  •  வாணலியை அடுப்பில் வைத்து அரை டம்ளர் தண்ணீருடன் கேசரிகலர் கலந்து சீனியை சேர்த்து கரையவிட்டு அதனுடன் மிக்சியில் உள்ள மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.  
  •  பக்கத்து அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து ஆலிவ் ஆயில்,நெய் ஊற்றி சூடுபண்ணி,அல்வா கிளறி முடியும்வரை சூடாக இருக்கும்மாறு அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

  • மாவு லேசாக கெட்டி படும் போது கொதிக்கும் எண்ணெய்யை ஒரு கரண்டியால் எடுத்து மாவின் மேல் ஊற்றி கிளற வேண்டும்.
  • எண்ணெய்யை ஊற்றி கிளற கிளற மாவு எண்ணெய்யை உள்வாங்கும்.
  • அப்பொழுது மாவும் தளதள வென்று பாத்திரத்தில் ஒட்டாமல் கலர் மாறி பளபளப்பாக வரும்.
  • கடைசி கரண்டி எண்ணெய்யை விடும் பொழுது மாவு எண்ணெய்யை உள்வாங்கி கிளற கிளற இரண்டு நிமிடத்தில்மாவிலிருந்து  எண்ணெய் பிரிந்து வரும்.
  • இந்த பக்குவம் வந்த உடன் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிநெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி  விட வேண்டும்.

14 comments:

  1. ஹல்வா ஈஸியா இருக்கு! ஆரஞ்ச் கலர் போட்டாலும் இப்படி ப்ரவுன் கலரா மாறிடுமா? திருநெல்வேலி அல்வா கலர்லயே வந்திருக்கே! :P

    ReplyDelete
  2. சொல்லிட்டீங்கள்ள .. இந்த பதிவ பாத்து அல்வாவ செஞ்சி எல்லாருக்கும் அல்வாவ கொடுத்துட வேண்டியதான்.. பகிர்வுக்கு நன்றிகள்- வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஹை! சூப்பர். யாரது!!

    பாரதியார்!! ம்ஹும்! தலைப்பா மிஸ்ஸிங்.

    வீரப்பன்... ;) ச்சா! முரட்டுத்தனம் பத்தல.

    கண்ணைப் பார்க்க... முகத்துல வீரத்தழும்புல்லாம் வேற நிறையவே இருக்கு. திருடன்! பத்திரம் ராதா, அல்வாவ தட்டோட தூக்கிட்டு ஓடிரப் போறார். ;)

    டைல் கலர், டிசைன் & அல்வா கலர் அப்படி மாட்சிங். டிஷ்ஷை வைத்திருக்கும் விதம் நல்லாருக்கு. நல்ல ரசனை உங்களுக்கு.

    ReplyDelete
  4. கலக்கல் ராதா......


    கடைசி போட்டோ உங்கள் ரசனையின் வெளிப்பாடு

    சூப்பர்

    ReplyDelete
  5. மகி,நலமா..உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!

    பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்.

    இமா,அல்வா டெக்கரேசன் பற்றி நீங்கள் சொல்லியது அருமை. ஒரு ஆசிரியர்னு நிருபிச்சிட்டீங்க..என் கற்பனையில்அது ஏர்-இந்தியா மகாராஜா.

    வாங்க ஆமி..ரொம்ப நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  6. ada,ippathaan kadaisi photo-va nithanamaa paarkkiren, cute decoration! :)

    Bharathiyar - Air India Maharaja, rendu per jadaiyum theriyuthu enakku! ;)

    ReplyDelete
  7. இல்ல இல்ல, விருமாண்டி கமல்ஹாசன் மாதிரி தெரியுது! ஹிஹி!

    ReplyDelete
  8. அல்வா செய்வது எளிதாக இருக்கே! செய்து பார்த்து விடுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  9. உங்கள் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் வாழ்த்துக்கள்.

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

    ReplyDelete
  10. வணக்கம்
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. சுலபமான அல்வா ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்துக்கு
    வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  12. ராதா ராணி இப்படி தெரிந்து கொள்ள நேரம் ஆகிவிட்டது. வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுகள்.
    அ சொல்லுகிறேன்.ல்வா அருமை. கிளற வேண்டும். அன்புடன்

    ReplyDelete
  13. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (27/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  14. .கோபு சாரின் பதிவு வாயிலாய் வந்தேன். அல்வா இவ்வளவு எளிதா? இந்த தீபாவளிக்கு செய்துவிடுகிறேன். நன்றி ராதாராணி

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)