கொத்து ப்ரெட்

4 comments

தேவையான பொருட்கள்:-
 • ப்ரெட்    - 6
 • முட்டை  - 2
 • பெரிய வெங்காயம்   - 1
 • பூண்டு       - 3 பல்
 • மிளகு தூள்     - 1 ஸ்பூன்
 • மிளகாய் தூள்   - அரை ஸ்பூன்
 • உப்பு      - சிறிது
 • எண்ணெய்    - 2 ஸ்பூன்

செய்முறை:-
 • பிரெட்டை ஒன்றிரண்டாக பிய்த்து தயாராக வைத்து கொள்ளவும்.
 • முதலில் பூண்டையும்,வெங்காயத்தையும்,பொடியாக வெட்ட வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டை முதலில் போட்டு பொன்னிறமாக வதங்கிய பின் வெங்காயத்தை போட்டு வதக்க வெண்டும்.
 • அடுத்து மிளகாய் பொடி,மிளகு பொடியை தூவி நன்றாக பிரட்டி விடவேண்டும்.
 • முட்டையை உடைத்து வதக்கிய கலவையின் மேல் ஊற்றி சிறிது உப்பை சேர்த்து மேலும் நன்றாக பிரட்டி விடவேண்டும்.
 • ரெடியாக உதிர்து வைத்திருக்கும் பிரெட் துண்டுகளை போட்டு அனைத்து கலவைகளும் ஒன்றாக செரும்படி நன்கு வதக்கி இற்க்கி விட வேண்டும்.

4 comments:

 1. super recipe. I will try this very soon.

  ReplyDelete
 2. கொத்து பரோட்டா,கொத்து சப்பாத்தி செய்திருக்கேன்..கொத்து ப்ரெட்!! நல்ல ஐடியாவா இருக்குங்க.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. வாணி பகிர்வுக்கு நன்றி!
  நன்றி மகி.
  ராஜி,பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)