மீன் குழம்பு

4 comments
 












தேவையான பொருட்கள்:-                                    
  • மீன்                  - அரை கிலோ
  • சின்ன வெங்காயம்     - 10
  • மிளகாய் தூள்        - 1 ஸ்பூன்
  • மசால் தூள்         - 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய்     - 3
  • தேங்காய்            - தேவையான அளவு
  • பூண்டு               - 5 பல்
  • பெருஞ்சீரகம்       - 1 ஸ்பூன்
  • புளீ                  - பெரிய நெல்லிக்காய் அளவு
  • உப்பு                  - தேவையான அளவு
  • கருவேப்பிலை          - சிறிது
  • எண்ணெய்               - 1 குழி கரண்டி
  • கடுகு,உளுந்து       - 1 ஸ்பூன்

செய்முறை:-
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெங்காயம்,கீறிய மிளகாய்,கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
  • வதக்கிய பொருட்களுடன் மசால் பொடி,மிளகாய் பொடி சேர்த்து வதக்கி புளியை நீரில் கரைத்து வடிகட்டி வதக்கிய பொருட்களுடன் சேர்த்து கொதிக விட வேண்டும்.
  • இறுதியில்  பூண்டு,தேங்காய்,பெருஞ்சீரகம்,சேர்த்து அரைத்து குழம்புடன் சேர்க்க வேண்டும். 
  • கழுவி வைத்த மீன் துண்டுகளை குழம்புடன் சேர்த்து சிறிது உப்பு போட்டு மெதுவாக கிளறி மீன் வெந்த பின் குழம்பை இறக்கி வைக்க வேண்டும்.

4 comments:

  1. சூப்பர்.செய்முறையே சொல்லுது சுவையை.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி ஆசியா.

    ReplyDelete
  3. புளியை நீரில் கரைத்து வடிகட்ட​ தேவையான நீரின் அளவை சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. அரை டம்ளர் (புளி முழ்கும் அளவு )தண்ணீர் விட்டு பிசையலாம். இறுதியில் தேவை படும் தண்ணீரை சேர்த்து கொள்ளலாம்.வருகைக்கு மிக்க நன்றி.

      Delete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)